அருப்புக்கோட்டை மதிமுக

அருப்புக்கோட்டை மதிமுக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் - அருப்புக்கோட்டை சட்ட மன்ற தொகுதி

25/07/2026
22/07/2026
02/07/2026

மதிமுகவை குறைத்து மதிப்பிடும் திமுக நபர்களுக்கு இந்த பதிவு !!

1000 ஓட்டிகளுக்கு குறைவான வாக்குகளில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் கீழே.

எந்தஎந்த தொகுதிகளில் யார் யார் வெற்றி?

கம்பம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ஜெகநாத் மிஸ்ரா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணனை 751 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் தவெக வேட்பாளர் அருள் விக்னேஷ் அதிமுக வேட்பாளர் ராஜிவ்காந்தியை 798 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் திமுக வேட்பாளர் மகேஷை காட்டிலும் 214 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

கோவில்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளர் கருணாநிதி தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியனை காட்டிலும் 843 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

குளித்தலை தொகுதியில் திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன், தவெக வேட்பாளர் பாலசுப்பிரமணியைக் காட்டிலும் 579 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

கும்பக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட தவெகவின் வினோத் திமுக வேட்பாளர் அன்பழகனை விட 679 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

பழனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவி மனோகரன் தவெக வேட்பாளர் பிரவீன்குமாரை காட்டிலும் 693 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

பரமத்தி வேலூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சேகர் திமுக வேட்பாளர் மூர்த்தியை விட 308 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

போளூர் தொகுதியில் தவெக வேட்பாளர் அபிஷேக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரை விட 227 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது யார்? தோற்றது யார்?பட மூலாதாரம், TVKHQ/X
திண்டிவனம் சட்டப்பேரவை தொகுதியில் விசிக வேட்பாளர் வன்னியரசு அதிமுக வேட்பாளர் அர்ஜுனனை காட்டிலும் 734 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

திருக்கோயிலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பழனிசாமி தவெக வேட்பாளர் விஜய் பரணி பாலாஜியை விட 285 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சிவக்குமார் தவெக வேட்பாளர் விஜய் வடிவேலுவை விட 910 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

திருப்பத்தூர் தொகுதியில் இரவு வரை நீடித்த வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி திமுக வேட்பாளரான அமைச்சர் பெரிய கருப்பனை 1 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இதுவே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.

உதகமண்டலம் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக வேட்பாளர் போஜராஜன் தவெக வேட்பாளர் இம்ராஹிமை விட 976 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் ஸ்ரீனிவாசன் அதிமுக வேட்பாளரும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான கே.பி.முனுசாமியை விட 138 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Address

Aruppukottai
Aruppukottai

Alerts

Be the first to know and let us send you an email when அருப்புக்கோட்டை மதிமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share