02/07/2026
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர்கள் மற்றும் பல்வேறு சாதிய ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (01.07.2026) இரவு தலைமைச் செயலகத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
பன்னியாண்டி சமூக மக்களுக்கு பழைய சாதிச் சான்றின் அடிப்படையில் இணையவழி சாதிச் சான்று வழங்குதல்,
தென்காசி நெட்டூர் தலித் மக்களுக்கு நிவாரணம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்தல்,
விருதுநகர் மாவட்டம் "பரச்சேரி" கிராமத்தின் பெயரை "வடக்கு அச்சம்தவிர்த்தான்" என மாற்றுதல்,
சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி அனுசியா மற்றும் ஓசூர் நந்தீஸின் சகோதரர் சங்கருக்கு நிரந்தர அரசு வேலை வழங்குதல்,
திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி (தனி) ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்துமதிக்கு பதவியேற்க நீதி வழங்குதல்,
காஞ்சிபுரம் புத்தகரம் முத்து கொளக்கியம்மன் தேரோட்டம் தலித் குடியிருப்புக்குச் செல்ல உறுதி செய்தல்,
சேலம் தாதம்பட்டி தோட்டி மானிய நில ஆக்கிரமிப்பை அகற்றி தலித் மக்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இச்சந்திப்பில் அகில இந்திய துணைத் தலைவர் கே.சாமுவேல்ராஜ், துணைச் செயலாளர் க.சுவாமிநாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி, துணைத் தலைவர் வி.குபேந்திரன், செயலாளர் கா.வேணி, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ப.செல்வன், தமிழ்நாடு பன்னியாண்டிகள் நலச் சங்க தலைவர் டி.ஜி.சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
#ததீஒமு