Jih Kovai

Jih Kovai Jamaat e Islami Hind- Coimbatore

இறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படை – புத்தக உரைமௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் "இறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படை" என்ற இப்புத்தக...
24/07/2026

இறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படை – புத்தக உரை

மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் "இறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படை" என்ற இப்புத்தகம், ஒரு முஃமினின் வாழ்வு எந்த அடிப்படையில் அமைய வேண்டும் என்பதையும், இறைநம்பிக்கை எவ்வாறு சிந்தனை, பண்பு, செயல்பாடு மற்றும் வாழ்க்கை முறையை வடிவமைக்கிறது என்பதையும் ஆழமாக விளக்குகிறது.

இந்நூலின் முக்கியக் கருத்துகளை சுருக்கமாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை வடக்கு மண்டல செயலாளர் ஜனாப் A.S. பைசல் அவர்கள் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

பாருங்கள்... பயனடையுங்கள்... அனைவருக்கும் பகிர்ந்திடுங்கள்.

இறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படை – புத்தக உரைமௌலானா மௌதூதி (ரஹ்) அவ...

"கடுமையான தண்டனை வழங்க வேண்டும்"24-05-2026கோவையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: குற்றவாளிகளுக்குக் காலதாமதமின்றி உச்சபட்ச...
24/05/2026

"கடுமையான தண்டனை வழங்க வேண்டும்"

24-05-2026

கோவையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்:

குற்றவாளிகளுக்குக் காலதாமதமின்றி உச்சபட்சத் தண்டனை வழங்க வேண்டும்!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர்
மௌலவி முஹம்மது ஹனிபா மன்பயீ அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு ஒட்டுமொத்த மனிதநேயச் சமூகத்தையும் உலுக்கியுள்ளது. பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் இந்த அநாகரிக, காட்டுமிராண்டித்தனமான செயலை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு சார்பாக மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்நிகழ்வு, ஒட்டுமொத்தத் தமிழகத்திற்கே ஒரு பெரும் அவமானக் கறையாகும்.
தங்களின் பிள்ளைகளைப் பாதுகாப்பாக வளர்க்க முடியுமா என்ற அச்சத்தையும், பெரும் கவலையையும் தமிழக மக்களிடையே, குறிப்பாகப் பெற்றோர்களிடையே இந்தச் சம்பவம் தீவிரமாக விதைத்துள்ளது.

இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் மனித மிருகங்களுக்குச் சட்டத்தின் முன் எந்தவிதமான தளர்வுகளோ, சலுகைகளோ காட்டப்படக் கூடாது.
இக்கொலை வெறிச் செயலில் ஈடுபட்ட இருவரையும்
சட்டப்படியான 'உச்சபட்சக் கடுமையான தண்டனை' மிக விரைவாக வழங்கப்பட வேண்டும்.

தண்டனைகள் தாமதமாவது இதுபோன்ற குற்றவாளிகளுக்குத் தைரியத்தையே வரவழைக்கும் என்பதால்,
இந்த வழக்கில் நீதி உடனே நிலைநாட்டப்பட வேண்டும்.

தமிழக அரசுக்கு நாங்கள் வைக்கும் மிக முக்கியமான கோரிக்கை என்னவெனில், பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான குற்றங்களில் அரசு மிகத் தீவிரமான, சமரசமற்ற இரும்புக்கர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இப்படியொரு கொடூரமான நிகழ்வு கற்பனையிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாதவாறு அரசு சட்டத்தையும், பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும்.

> "இனி தமிழ்நாட்டில் இதுவே இதுபோன்ற கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும்" என்கின்ற உறுதியோடும், அந்த உத்வேகத்தோடும் தற்போதைய அரசு செயல்பட வேண்டும் என்று மிக உறுதியோடு கேட்டுக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட அச்சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களுக்கு உரிய நீதியும், தார்மீக ஆதரவும், தகுந்த நிவாரணமும் உடனடியாகக் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்போம்.. 🌄✋🗳️ DMK ITWing DMK Coimba...
21/04/2026

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்போம்.. 🌄✋🗳️

DMK ITWing DMK Coimbatore Jamaat-e-Islami Hind Tamil Nadu

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை மாவட்ட அலுவலகத்திற்கு திமுக கோவை மண்டல பொறுப்பாளர்கள் திரு. செந்தில் பாலாஜி அவர்கள் வருகை...
13/04/2026

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை மாவட்ட அலுவலகத்திற்கு திமுக கோவை மண்டல பொறுப்பாளர்கள் திரு. செந்தில் பாலாஜி அவர்கள் வருகை!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை மண்டல திமுக பொறுப்பாளருமான மரியாதைக்குரிய திரு. செந்தில் பாலாஜி அவர்கள் வருகை தந்து ஆதரவு திரட்டினார்.

இந்த சந்திப்பின் போது, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கொண்டு வரும் சமூக, கல்வி மற்றும் மனிதநேய பணிகள் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், ஜமாஅத் முன்வைத்த கோரிக்கைகளை தேர்தலில் வெற்றி பெற்ற பின் நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜமாஅத்தின் “மக்கள் தேர்தல் அறிக்கை”யை கோவை பெருநகர தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் மற்றும் செயலாளர் ஜனாப். M.S. சபீர் அலி ஆகியோர் இணைந்து வழங்கி, முக்கிய கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் ஜமாஅத் கோவை பெருநகரப் பொறுப்பாளர்களும், செயலாளர்களும் உடனிருந்தனர்.

Abdul Hakkim Sabeer Ali

*சமுதாய முன்னேற்றத்தின் பாதையில்… ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை மாநகரின் மக்கள் சேவைப் பணிகளில் சில!*சமூக முன்னேற்றத்தை...
05/03/2026

*சமுதாய முன்னேற்றத்தின் பாதையில்… ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை மாநகரின் மக்கள் சேவைப் பணிகளில் சில!*

சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை மாநகரம் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்த நற்பணியை தொடர்ந்து முன்னெடுக்க, உங்கள் ஜகாத் மற்றும் சதகா தொகைகளின் மூலம் ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

On the Path of Social Empowerment…Some of the People-Centric Service Initiatives of Jamaat-e-Islami Hind – Coimbatore CityJamaat e Islami Hind Coimbatore | S...

லிபாஸ் தையல் & எம்பிராய்டரி பயிற்சி மையம் – சான்றிதழ் வழங்கும் விழாஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் - கோவை பெருநகரத்தின் கீழ் செய...
10/12/2025

லிபாஸ் தையல் & எம்பிராய்டரி பயிற்சி மையம் – சான்றிதழ் வழங்கும் விழா

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் - கோவை பெருநகரத்தின் கீழ் செயல்படும் லிபாஸ் தையல் & எம்பிராய்டரி பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற நூறுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா 10 டிசம்பர் 2025 அன்று நடைபெற்றது.

சமூகத்தில் நலிவடைந்த பெண்களுக்கு திறன் மேம்பாடு, வருவாய் வாய்ப்பு, சுயநம்பிக்கை ஆகியவற்றை உருவாக்கும் நோக்கில் துவங்கப்பட்ட இந்த மையம், கோவையில் நான்கு இடங்களில் சிறப்பாக செயல்பட்டு, பல நூறு பெண்களை வாழ்க்கை முன்னேற்றப் பாதைக்கு வழிநடத்தி வருகிறது.

இந்த ஆண்டும், நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கோவை மாவட்ட சிறுபான்மை நல அலுவலரும், துணை ஆட்சியருமான திருமதி. N.A. சங்கீதா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வின் தொடக்கமாக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை பெருநகர தலைவர் திரு. P.S. உமர் ஃபாரூக் அவர்கள் தலைமையுரையாற்றினார் . அவர் தனது உரையில், பெண்களின் முன்னேற்றம் சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்பதை வலியுறுத்தினார். மேலும் லிபாஸ் பயிற்சி மையம் வழியாக திறன் பெற்ற பெண்கள், சமூகத்தில் முன்னேற விரும்பும் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என ஊக்கமளித்தார்.

தொடர்ந்து, கோவை மாவட்ட சிறுபான்மை நல அலுவலரும் துணை ஆட்சியருமான திருமதி N.A. சங்கீதா அவர்கள் சிறப்பு உரையாற்றினார். அவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கொண்டு வரும் மக்கள் சேவை முயற்சிகளை பாராட்டியதோடு, பெண்கள் தொழில்முனைவு, திறன் மேம்பாடு, சந்தை வாய்ப்புகள் போன்ற துறைகளில் பல பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்கினார்.

தொடர்ந்து பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கப்பட்டது. பெண்கள் பெரும் மகிழ்ச்சியோடு சான்றிதழ்களைப் பெற்றதோடு, அவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள் மீது கொண்ட அன்பு மற்றும் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசுகளையும் வழங்கினர்.

இந்நிகழ்வில் கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி தலைவர். திருமதி. ஜஹீனா அஹமது அவர்களும், ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி துணைத் தலைவர் ஆலிமா. சலீனா பாரி அவர்களும், ஜமாஅத் மக்கள் தொடர்பு செயலாளர் திரு. அப்துல் ஹக்கீம் அவர்களும், கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் சுயதொழில் உதவிக் குழு செயலாளர் திரு.சாகுல் ஹமீத் அவர்களும், பல்வேறு முக்கியஸ்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Address

Karumbukkdai
Coimbatore
641008

Alerts

Be the first to know and let us send you an email when Jih Kovai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jih Kovai:

Shortcuts

Share

Category