05/09/2026
எஸ்.பி.வேலுமணி என்பது பெயர் இல்ல.. அது ஒரு செயல் வடிவம்.. தொலைவிலிருந்து காண்போருக்கு அவர் ஒரு உருவமாகமட்டுமே தெரிவார்.. அருகில் செல்ல செல்லத்தான் அவரின் அருமைதெரியும்..
அவர் கோவைக்கு ஆற்றிய சேவைகளும், பணிகளும் முழுமையாகத் தெரியும்... அவரை நெருக்கமாக அறிந்தவர்கள்மட்டுமே அவர் மிகுந்த மனிதநேயமும், உதவும் மனப்பான்மையும் கொண்டவர் என்பது கண்கூடு.. ஒரு வார்டு செயலாளரின் குடும்பத்து குழந்தை கோவையின் புகழ்பெற்ற பொறியியல் சேர்ந்து பீஸ் கட்டமுடியாமல் சிரமப்படுவதை கேள்விப்பட்டு யாரும் கோரிக்கை வைக்காமலே அவரது அண்ணனிடம் தகவல் கூறி காதும் காதும் கவைத்தமாரி நான்கு ஆண்டு கட்டணமாக மொத்த தொகை சுமார் ஐந்து லட்சம் ரூபாய் கட்டணமாக கட்டி படிப்பு முடிக்க உதவியது யாருக்கு தெரியாது.. இப்போ அந்தக்குழந்தை ஒரு பன்னாட்டு கம்பெனியில் மாதம் இரண்டு லட்சம் சம்பளத்தில் இருப்பது கட்சிக்காரனுக்கே தெரியாது..
தான் ஏற்று கொண்ட தலைவர் மக்கள் திலகத்தின் வழியே "வலது கை கொடுப்பதை இடது கை அறியக்கூடாது என்பது நாம் செய்யும் உதவியை எவ்வித விளம்பரமும் இல்லாமல், மிகவும் ரகசியமாகச் செய்பவர் அவர்.." திருமண உதவி, கல்விச் செலவு உதவி, மருத்துவ உதவி என எண்ணற்ற மக்களின் வாழ்வில் நம்பிக்கையின் ஒளியாக திகழ்ந்தவர். அரசியல் வேறுபாடுகளைப் பார்க்காமல், நமது கட்சியினர் அல்லது மாற்றுக் கட்சியினர் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் பழகுபவர். உதவி தேவைப்படும் நேரங்களில் யார் வந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பவர். பலருக்கு அரசாங்க வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிகாட்டியவர். தனிப்பட்ட முறையிலும் ஏராளமானோரின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தவர். தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்வதே அவரது இயல்பு.
தொகுதி மக்களை தனது குடும்ப உறுப்பினர்களாகக் கருதி அவர்களின் நன்மை தீமைகளில் பங்கெடுப்பவர். கட்சிக்குள்ளும் எந்த அணியைச் சேர்ந்தவர் என்ற வேறுபாடின்றி அனைவரையும் ஒரே பார்வையில் அணுகி, "அனைவரும் நமது கட்சிக்காரர்களே" என்ற எண்ணத்துடன் செயல்படுபவர். எப்போதும் சிரித்த முகத்துடன் அனைவரையும் வரவேற்பவர். கோபம், முகச்சுளிப்பு போன்றவற்றை வெளிக்காட்டாமல் அமைதியாகவும் பணிவாகவும் பழகுபவர்.
கட்சி சோதனைகளைச் சந்தித்த காலங்களிலும் தளராமல் நிற்கும் உறுதியான தூணாக விளங்குபவர். பொருளாதார ரீதியிலும் கட்சிக்கும் கழகத் தோழர்களுக்கும் முக்கியமான ஆதரவாக இருப்பவர். நல்ல காலங்களில் மட்டுமல்ல, சோதனைக் காலங்களிலும் துணை நிற்பவரே உண்மையான விசுவாசி என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்.
இத்தகைய மனிதநேயமும் தியாக உணர்வும் கொண்ட ஒருவரை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது. அவரைப் பற்றி அறியாதவர்கள் குறை கூறலாம்; ஆனால் அவரை அறிந்தவர்கள் மனதில் அவர் எப்போதும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராகவே இருப்பார்.