SDPI கடலூர் கிழக்கு

SDPI கடலூர் கிழக்கு தஞ்சை மண்டலம்,
கடலூர் கிழக்கு அதிகாரப்பூர்வ பக்கம்

28/08/2026

சிறுபான்மையினர் நல மானியக் கோரிக்கை அறிவிப்புகள் ஏமாற்றமளிக்கிறது: எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை என்பது வெறும் திட்டங்களின் பட்டியல் அல்லது நிதி ஒதுக்கீட்டு அறிக்கை மட்டுமல்ல. அது ஒரு மாநில அரசின் சமூகநீதிப் பார்வையையும், சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கொள்கை முடிவுகளையும் வெளிப்படுத்தும் முக்கியமான ஆவணமாகும். சிறுபான்மை சமூக மக்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பைச் செல்லும் இடமெல்லாம் ஏற்படுத்தி வந்த மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரின் பேச்சுக்கும், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை மானியக் கோரிக்கை அறிவிப்புகள் காட்டுகிறது. அந்த வகையில், தற்போதைய சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை, பெரிய அளவிலான சிறுபான்மை சமூகத்தின் முன்னேற்றத்துக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவுமின்றி, சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் உப்புச் சப்பில்லாமல் அமைந்திருப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது.

நடப்பு மானியக் கோரிக்கையில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை விரிவாக்கம், சிறுபான்மையின மாணவிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட உயர்கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் அறிவிப்பு, வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளைப் பாதுகாக்க, கட்டிடங்களைக் கட்ட வட்டியில்லா சுழல் நிதிக்கடன் மற்றும் வக்ஃப் வாரிய நிர்வாக மானிய உயர்வு ஆகியவை வரவேற்கத்தக்க முடிவுகளாகும்.

இருப்பினும், சென்னை மாநகரில் ஏற்கனவே காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி இயங்கி வரும் நிலையில், வக்ஃப் வாரியத்தின் கீழ் மீண்டும் ஒரு மகளிர் கல்லூரியைச் சென்னையிலேயே தொடங்குவது அவசியமற்ற ஒன்றாகும். இத்திட்டத்தை உடனடியாக மாற்றி, சிறுபான்மையின மாணவிகள் அதிகம் வசிக்கும் பிற மாவட்டங்களுக்கு அக்கல்லூரியைக் கொண்டு செல்ல வேண்டும். மேலும், இதில் இடம்பெற்றுள்ள திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் கல்வி உதவிகளும் பெரும்பாலானவை ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களின் மறுவடிவமாகவே உள்ளனவே தவிர, புதிய தொலைநோக்குத் திட்டங்கள் எதுவுமில்லை.

வக்ஃப் வாரியத்தின் பணிகளை விரைவுபடுத்தவும், சொத்துக்களை முறையாகப் பராமரிக்கவும் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படாதது மிகப்பெரிய ஏமாற்றமாகும். அதேபோல், சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் நேரடியாக உயர்த்தக்கூடிய தொழில்முனைவோர் கடன்கள் அல்லது நிதியுதவி சார்ந்த எந்தவொரு வலுவான திட்டமும் இதில் இடம்பெறவில்லை. குறிப்பாக, ‘தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்’ மூலமாகச் சிறுபான்மையின மக்கள் சுயதொழில் தொடங்கக் கடன் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இதில் இல்லை.

இவற்றுடன், முஸ்லிம் சமூகத்தின் பல்லாண்டு கால முக்கியக் கோரிக்கைகளும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட வாழ்நிலைகள் குறித்து துல்லியமாக அறிந்துகொள்ள, சச்சார் கமிட்டியைப் போன்றதொரு சுதந்திரமான உயர்நிலைக் கமிட்டியைத் தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்வு, சிறுபான்மையினர் நலத்துறைக்கெனத் தனி அமைச்சகம் உருவாக்குதல், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் கோரிக்கை, சிறைவாசிகள் விடுதலை மற்றும் தமிழக அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு முஸ்லிம் தலைவர்கள் அல்லது சான்றோர்களின் பெயரைச் சூட்டுதல் போன்ற நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கும் இந்த மானியக் கோரிக்கையில் எந்தப் பதிலுமில்லை.

எனவே, அமைச்சரின் வெறும் பேச்சுகளையும் பெயரளவில் மட்டுமே உள்ள இந்த அறிவிப்புகளையும் தாண்டி, சிறுபான்மை சமூகத்தின் உண்மையான பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்குத் தேவையான கூடுதல் திட்டங்களைச் சேர்த்து, அவர்களின் பல்லாண்டு கால நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

28/08/2026

| “உப்புச் சப்பில்லாத மானியக் கோரிக்கைகள்..” -முகம்மது முபாரக், SDPI

|

28/08/2026

சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை பெரும் ஏமாற்றமளிக்கிறது
-முகம்மது முபாரக்

SDPI கட்சியின் மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் சமூக, அரசியல் பணிகள் ...
28/08/2026

SDPI கட்சியின் மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் சமூக, அரசியல் பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன்

M.நிஜாம் முகைதீன்,
மாநில பொதுச்செயலாளர்,
SDPI கட்சி.

28/08/2026

நேபாள திடீர் வெள்ளப் பேரழிவுக்கு SDPI கட்சி ஆழ்ந்த இரங்கல்!

நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியதோடு, இந்திய யாத்திரிகர்கள் பலர் உட்பட ஏராளமானோர் காணாமல் போகக் காரணமான நேபாளத் திடீர் வெள்ளப் பேரழிவு குறித்து, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகமது ஷஃபி தனது ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளார்.

இந்த மாபெரும் துயரத்தில் நேபாள மக்களுடன் துணை நிற்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், காணாமல் போன அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படவும் அவர் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கும் இந்திய யாத்ரீகர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட, அங்குச் சிக்கியுள்ள ஒவ்வொரு நபரும் பாதுகாப்பாக மீட்கப்படும் வரை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இமயமலைப் பிராந்தியத்தில் பேரிடர் தயார்நிலை, முன்னெச்சரிக்கை கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த அவசரகால மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வலுவான கூட்டு ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் கேட்டுக்கொண்டார். எதிர்காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றப் பேரிடர்களை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்தவும் அண்டை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கை மிக அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

28/08/2026
28/08/2026

| SDPI மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை

| |

Address

கடலூர்
Cuddalore

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI கடலூர் கிழக்கு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share