04/05/2026
https://www.facebook.com/share/1bjSDEQyij/
நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில், மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறேன். இந்தத் தேர்தலில் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, என் மீதும் எஸ்டிபிஐ கட்சியின் கொள்கைகள் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், களத்தில் என்னுடன் இணைந்து அயராது உழைத்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தோழர்களுக்கும், எஸ்டிபிஐ கட்சியின் தொண்டர்களுக்கும், ஆதரவளித்த இயக்கங்கள் மற்றும் அமைப்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்னிலம் சட்டமன்ற தொகுதியில், பணநாயகம் ஜனநாயகத்தை வீழ்த்தியுள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.
மக்களுக்காகப் பணியாற்றுவது என்பது வெறும் பதவியைச் சார்ந்தது மட்டுமல்ல; அது நாம் கொண்ட கொள்கைச் சார்ந்தது. எனவே, தேர்தல் தோல்வி என்பது எங்களது மக்கள் பணிக்கான முற்றுப்புள்ளி அல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் களத்தில் நான் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், நன்னிலம் தொகுதி மக்களின் நலன்களுக்காகவும், அடிப்படைத் தேவைகளுக்காகவும் எனது குரல் எப்போதும் போல ஓங்கி ஒலிக்கும். மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போதும், சமூக நீதிக்குப் பாதிப்பு ஏற்படும்போதும் உங்களில் ஒருவனாக நான் எப்போதும் முன்னிற்பேன். ஒரு மக்கள் தொண்டனாக உங்கள் குறைகளைத் தீர்க்கவும், நன்னிலத்தின் முன்னேற்றத்திற்காகப் போராடுவேன். நன்னிலம் அது என் நிலம்..!
-முகம்மது முபாரக்