ErodeWest

ErodeWest Dravidian Model State

 #முரசொலி_தலையங்கம் 04/09/26 🇮🇳 காமராசர் மறைவின் போது..🇮🇳“காமராசர் மறைவின் போது மெரினா கடற்கரையில் இடம் கேட்டோம். கிடைக்...
04/09/2026

#முரசொலி_தலையங்கம் 04/09/26
🇮🇳 காமராசர் மறைவின் போது..🇮🇳
“காமராசர் மறைவின் போது மெரினா கடற்கரையில் இடம் கேட்டோம். கிடைக்கவில்லை. அப்போதும் சிரித்த முகத்துடன் நாங்கள் அதைக் கடந்து சென்றோம்’’ என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் தாரகை கத்பர்ட், சட்டமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.

எத்தனை தடவை விளக்கம் அளித்தாலும், உண்மைகளைத் தெளிவுபடுத்தினாலும் சிலர் பழைய பொய்களையே திரும்பத் திரும்பப் பேசுவார்கள். அத்தகைய பொய்களில் ஒன்று தான், ‘மெரினாவில் பெருந்தலைவர் காமராசர் உடலை அடக்கம் செய்ய இடம் தரவில்லை’ என்பது ஆகும். இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக காங்கிரஸ் கட்சி தினமும் எத்தனை பொய் வேடங்கள் போட வேண்டி இருக்கிறது?

‘முரசொலி’ தலையங்கத்திலும் இதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு 1975 அக்டோபர் அன்று தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவருமான கே.ராஜாராம் (நாயுடு) அவர்கள் ஆற்றிய உரையைப் படித்தால் முழு உண்மையும் அறியலாம்.

‘’பெருந்தலைவர் காமராசர் அவர்கள் சாதாரண தொண்டராக இருந்த காலத்திலிருந்து எனக்கும் அவருக்கும் நட்பு உண்டு. அவரும் நானும் பல கிராமங்களுக்கு கால்நடையாகவே சென்று பேசியிருக்கிறோம்” என்ற பீடிகையுடன் தொடங்கும் கே.ராஜாராம் அவர்கள், பெருந்தலைவர் மறைந்த அன்று என்ன நடந்தது என்பதைச் சொல்கிறார்....

‘’அக்டோபர் 2 இரவில்...பெருந்தலைவர் காமராசர் மறைந்த அன்று, நமது மாநில அரசை நடத்தும் முதலமைச்சர் கலைஞர் அவர்களும், கல்வி அமைச்சர் அவர்களும், மற்ற அமைச்சர்களும் உடனே அவரது வீட்டுக்குச் சென்றனர். தங்களின் சகோதரர்களில் ஒருவர் இறந்துவிட்டதைப் போல, அந்த இடத்தில் அவர்கள் இருந்தார்கள். ‘மற்றொரு கட்சித் தலைவர் இறந்துவிட்டார்’ என்று அவர்கள் நினைத்ததாகத் தெரியவில்லை.

முதலமைச்சர் அவர்கள் எங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு துக்கம் தாளாது அழுதார். என்னுடைய உயிர் உள்ள வரை இது மறக்க முடியாது. அவ்வளவு பாச உணர்ச்சியை அவர் காட்டினார். காமராசர் அவர்களிடம் இருந்து எப்படி இந்த பாச உணர்ச்சியை அவர் பெற்றார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழக ஆளுநர் அவர்களும் முதலமைச்சர் பக்கத்தில் அமர்ந்துகொண்டு தேம்பித் தேம்பி அழுதார்.

தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் காமராசருடைய பிரேதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அங்கேயே எரித்து, நினைவுச்சின்னம் கட்டுவது என்றுதான் முதலில் முடிவு செய்யப்பட்டது.

‘காமராசரின் உடலை ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுபோய் வைக்க வேண்டும். முதலமைச்சரிடம் அனுமதி கேளுங்கள்’ என்று சிலர் சொன்னார்கள். எப்படி அனுமதி கேட்பது என்று யோசித்த விநாடியே முதலமைச்சர் அவர்கள், காமராசர் வீட்டுக்கே வந்துவிட்டார்.

‘இங்கே கூட்டத்தைச் சமாளிக்க முடியாது. உடனே ஐயாவை ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுபோக வேண்டும்’ என்றார்.

நாங்கள் கனவு கண்டதைப் போல, நாங்கள் எதிர்பார்த்ததைப் போல முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். எங்கள் மனதில் உள்ளதை எப்படி அவர் தெரிந்து கொண்டார் என்று இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அவர்களுக்கும், எனக்கும், என்னுடைய சகாக்களுக்கும் என்ன கைம்மாறு செய்வது என்றே புரியவில்லை.

காமராசரின் உடலை ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வந்து, பொதுமக்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்துவிட்டு, தலைவர்கள் அமர மேடை அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில், ‘மந்திரிசபை இங்குதான் கூடுகிறதோ?’ என்கிற வகையில் எல்லா அமைச்சர்களும் அங்கே வந்துவிட்டார்கள். காமராசர் உடலை எங்கு வைத்து எரிப்பது? அடுத்தடுத்த காரியங்கள் என்ன? நாங்கள் எல்லாம் கூடி ஆலோசனை செய்து கொண்டிருந்தோம். ‘கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்குப் பக்கத்தில் எரிக்க வேண்டும்’ என்று முதலமைச்சர் அவர்களே சொன்னார்கள்.

அன்று இரவு எட்டு மணிக்கு, கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய காரில் பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களையும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி காரியதரிசியையும் என்னையும் அழைத்துக்கொண்டு கிண்டி காந்தி மண்டபம் சென்றார்.

வெளிச்சம் இல்லாத அந்த இடத்தில், நாங்கள் சென்ற கார்களைத் திருப்பி நிறுத்தி அதன் விளக்கு வெளிச்சத்தில் இடத்தைத் தேர்வு செய்தார். இதை அதிகாரிகளே செய்யலாம். ஆனால் முதலமைச்சர் அவர்கள் எங்களை அழைத்துக்கொண்டு தன்னுடைய நேரடி பார்வையில் இவற்றையெல்லாம் செய்தார்கள்.

அனைத்து அமைச்சர்களும் இரவெல்லாம் தூக்கமில்லாமல் அங்கு அடர்த்திருந்த மரங்களை, புதர்களை அகற்றி, தகனத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்வது என்று எங்கள் கட்சிகாரர்களுக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் இதை என்றுமே மறக்க முடியாது. அன்றைய தினம் தமிழ்நாடு அரசிடமிருந்து அப்படியொரு அரசு மரியாதையை நாங்கள் எதிர்பார்க்க வில்லை.” (முரசொலி, 24.10.1975) என்று பேசி இருக்கிறார் கே.ராஜாராம் அவர்கள். இது எல்லாம் தாரகை கத்பர்ட் போன்றவர்களுக்கு தெரியாது.

பெருந்தலைவரைப் போற்றி திராவிட முன்னேற்றக் கழக அரசுகள் காலத்தில் செய்தவை, தனித் ‘தலையங்கம்’ தீட்டும் அளவுக்கு மிக மிக நீண்டவை. இவை நன்றியுள்ள காங்கிரஸ்காரர்கள் அறிவார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்களாக வருகிறவர்கள் இதை எல்லாம் படித்துப் பார்த்து விட்டு வர வேண்டும். தி.மு.க. தயவில் சட்டமன்ற உறுப்பினர் ஆனோம் என்ற நன்றி உணர்ச்சிகூட இல்லாமல், த.வெ.க. அரசுக்கு அற்ப சந்தோஷத்தை ஏற்படுத்துவதற்காக இது போன்ற பொய்களைப் பேசி சட்டமன்றப் பதிவேட்டில் தங்களது துரோக நடவடிக்கைகளை பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது.

சட்டமன்றத்தில் இன்று...🖤❤️🖤❤️🖤❤️மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்🔥🔥🔥🔥🔥🔥🔥தாய் மாமன் காது குத்தும் திட்டம். 🔥கடற்கரைக்கு பூ...
03/09/2026

சட்டமன்றத்தில் இன்று...
🖤❤️🖤❤️🖤❤️
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்
🔥🔥🔥🔥🔥🔥

🔥தாய் மாமன் காது குத்தும் திட்டம்.

🔥கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு.

🔥தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாளே இல்லை.

🔥கறிக்கடையை விட அதிகமாக வெட்டுகிறார்கள்

🔥காவல்துறை மானியக் கோரிக்கையின் மீது பேசுகிறேன். நீர்ப்பாசன துறை, பொதுப்பணித்துறை பற்றி பேசவில்லை.

🔥அவருக்கு பதில் இவர் என்பது போல பதில் அளிக்கிறார்கள்

🔥116 நாட்களில் 200+ கொலைகள்

🔥தவெக எம்எல்ஏ உட்பட ஆளுங்கட்சியினர் தொடர்பான பாலியல் குற்றங்களின் பட்டியல்

🔥116 நாட்களில் ஆளுங்கட்சியினரின் அட்ராசிட்டிகள் தொடர்பாக பட்டியலே உள்ளது.

🔥முதலமைச்சர் பதிலளிக்க மூன்று நாட்கள் அவகாசம் உள்ளது. prepare செய்து கொண்டு வரட்டும்.

🔥prepare ஆக இருந்தால் இப்போதே பேசட்டும்.

🔥விதண்டாவாதம் செய்யாமல், எங்கள் கேள்விகளுக்கு முதலமைச்சர் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்.

🔥ரீல்ஸ் கன்டென்ட், குட்டிக்கதை சொல்லாமல் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

Govi Lenin
DMK ITWing

03/09/2026
 #முரசொலி_தலையங்கம் 03/09/26 டெல்டா மாவட்­டங்­கள் வறண்டு கிடக்­கின்­றன. அதைப் பற்றி கொஞ்­ச­மா­வது முத­ல­மைச்­சர் விஜய்க்...
03/09/2026

#முரசொலி_தலையங்கம் 03/09/26
டெல்டா மாவட்­டங்­கள் வறண்டு கிடக்­கின்­றன. அதைப் பற்றி கொஞ்­ச­மா­வது முத­ல­மைச்­சர் விஜய்க்கு கவலை இருக்­கி­றதா? இல்லை. உழ­வர்­களுக்கு உதவி செய்ய ஏதா­வது புதுத் திட்­டம் உண்டா? சொல்லி இருக்­கி­றாரா என்­றால் அது­வும் இல்லை.

மேட்­டூர் அணை ஆண்­டு­தோ­றும் ஜூன் 12 ஆம் தேதி­யன்று திறக்­கப்­ப­டும். இந்த ஆண்டு திறக்­கப்­பட்­டதா என்­றால் அது­வும் இல்லை. திறப்­ப­தற்­கான முயற்­சி­யா­வது எடுத்­தாரா? அது­வும் இல்லை. ஆண்­டு­தோ­றும் வழக்­க­மா­கத் திறக்­கும் நாளில் மேட்­டூர் அணை­யைத் திறக்க முடி­ய­வில்­லையே என்ற கவலை அல்­லது வருத்­த­மா­வது முத­ல­மைச்­சர் விஜய்க்கு இருக்­கி­றதா? இல்லை.

ஜூன் 12 ஆம் தேதி திறக்க வேண்­டிய மேட்­டூர் அணையை செப்­டம்­பர் 1 ஆம் தேதி திறந்து வைக்க பட்­டு­வேட்டி சட்­டை­யோடு போன முத­ல­மைச்­சர், விஜய்­யாக மட்­டுமே இருக்க முடி­யும். இவ­ருக்­கு­தான் என்ன செய்­கி­றோம் என்­ப­தைத் தெரிந்து செய்­கி­றாரா? இல்லை தெரி­யா­மல் தான் செய்­கி­றாரா?

82 நாட்­கள் தாம­த­மாக மேட்­டூர் அணை திறக்­கப்­ப­டு­கி­றது. இத­னால் ஒன்­றரை லட்­சம் ஏக்­க­ரில் சாகு­படி குறை­யும் என்­கி­றார்­கள். இதற்கு முத­ல­மைச்­ச­ரின் பதில் என்ன? ‘செல்­லம் பாட்­டிக்கு கூலிங்­கி­ளாஸ் கொடுத்­து­விட்­டேன்’ என்­பது தான் அவர் இந்த மாநி­லத்­துக்­குச் சொல்­லும் பதிலா? ஒரே ஒரு பாட்­டிக்கு கூலிங்­கி­ளாஸ் கொடுத்து விட்­டால் கோடிக்­க­ணக்­கான உழ­வர்­களை கூல் செய்து விட முடி­யுமா?

மூதாட்­டி­யைக் கட்­டிப் பிடித்து போட்டோ எடுப்­ப­தெல்­லாம் 50 ஆண்­டு­க­ளுக்கு முன்பே எம்.ஜி.ஆர். செய்­து­விட்­டுப் போய்­விட்­டார். இன்­னும் அந்த அத­ரப்­ப­ழைய பாணி தனக்கு கைகொ­டுக்­கும் என்று விஜய் நம்­பு­கி­றாரா?

‘அர­சாங்­கம் மாசா மாசம் கொடுக்­கும் ஆயி­ரம் ரூபாய்ல தான் என் வாழ்க்­கையே ஓடுது’ என்று விஜய்­யி­டமே சொல்லி இருக்­கி­றார் அந்த மூதாட்டி. ஆயி­ரம் ரூபாய் நோட்­டில் தெரி­வது திரா­விட நாய­கன் மு.க.ஸ்டாலின் அவர்­களின் முகம் அல்­லவா? இவ­ரைப் போன்­ற­வர்­களை ஏமாற்ற முடி­யாது.

கர்­நா­டகா மாநி­லம் தமிழ்­நாட்­டுக்­குத் தர வேண்­டிய தண்­ணீரை உரிய அள­வில் வழங்­கு­வது இல்லை. அதைத் தட்­டிக் கேட்க முது­கெ­லும்பு இல்­லாத முத­ல­மைச்­ச­ராக விஜய் இருக்­கி­றார். அதை மறைக்க ‘மேட்­டூர் சூட்­டிங்’ போல, ‘மைசூர் சூட்­டிங்’ எடுக்க நினைத்­தார் விஜய். ஆனால் கர்­நா­டக அமைப்­பி­னர் கடு­மை­யான எதிர்ப்பு தெரி­வித்த நிலை­யில் பின் வாங்­கி­னார் விஜய்.

காவிரி உரிமை நீரைத் தடுக்க மேக­தாது அணை­யைக் கட்­டு­கி­றது கர்­நா­டக மாநி­லம். இத­னைத் துணிச்­ச­லோடு எதிர்க்­க­வில்லை முத­ல­மைச்­சர் விஜய். பாவலா காட்­டிக் கொண்டு இருக்­கி­றார். இந்த உரி­மை­க­ளுக்­காக ஒன்­றிய அர­சி­டம் பேச வேண்­டிய தமிழ்­நாடு சிறப்பு பிர­தி­நிதி, ஏதோ ஒரு விழா­வில் நடி­கை­யு­டன் கைகோர்த்து ஆடிக் கொண்டு இருக்­கி­றார். தனது படத் தயா­ரிப்­பா­ள­ருக்கு ஏற்­பட்ட நஷ்­டத்­துக்கு ஈடு­கட்ட வழங்­கப்­பட்ட பதவி அது.

தனது அதி­கா­ரத்­துக்கு உட்­பட்ட மாநி­லத்­தில் உழ­வர்­க­ளுக்கு நன்மை செய்­தாரா முத­ல­மைச்­சர் விஜய் என்­றால் அது­வும் இல்லை. அனை­வ­ருக்­கும் பயிர்க்­க­டன் என்று சொல்லி விட்டு, அதி­லும் பல்­வேறு நிபந்­த­னை­களை வைத்து உழ­வர்­களை ஏமாற்­றி­னார் விஜய்.

இதன் தொடர்ச்­சி­யா­கத்­தான் மேட்­டூர் ‘சூட்­டிங்.’ மேட்­டூர் அணையை தண்­ணீ­ரைத் திறந்து வைக்க வருகை தரும் இவ­ருக்கு ஆன செலவு மட்­டும் ரூபாய் 5 கோடி­யைத் தொடு­கி­ற­தாம். இவ­ரைப் பாது­காக்­கி­றார்­க­ளாம்? யாரி­டம் இருந்து? அவ­ரது ரசி­கர்­க­ளி­டம் இருந்து. உல­கத்­தில் சொந்த ரசி­கரை ‘பேரி­கார்டு’ வைத்து தடுத்து தன்­னைப் பாது­காத்­துக் கொள்­ளும் அள­வுக்கு பயந்து போயி­ருக்­கி­றார் விஜய்.

தேவை­யான அளவு தண்­ணீரே இல்லை. பயிர் விளைச்­ச­லுக்கு இது போது­மா­ன­தும் இல்லை. அரை­குறை நிலை­யில் மேட்­டூர் அணை­யைத் திறந்து வைக்க கோடி­களை வாரி இறைக்க வேண்­டுமா? அர­சாங்­கக் காசில் தனது விளம்­பர வெறி­யைத் தீர்த்­துக் கொள்ள வேண்­டுமா?

திரா­விட மாடல் ஆட்­சி­யில் ஒவ்­வொரு ஆண்­டும் மிகச் சரி­யாக ஜூன் மாதத்­தில் மேட்­டூர் அணை நீர் திறந்து வைக்­கப்­பட்­டது. 2022 ஆம் ஆண்டு ஒரு மாதம் முன்­ன­தா­கவே திறந்து வைக்­கப்­பட்­டது. இதெல்­லாம் இன்­றைய முத­ல­மைச்­ச­ருக்­குத் தெரி­யுமா?

மேட்­டூர் அணை திறந்து வைக்­கப்­பட்­டால் 200 நாட்­கள், 180 நாட்­கள் என தண்­ணீர் பாயும். அது­தான் உழ­வர்­களை மகிழ்­வித்­தது. இன்று மூன்று மாத காலம் தாம­த­மா­கத் திறப்­ப­தால் மொத்­தமே 45 நாட்­கள் தான் தண்­ணீர் பாயும். இது போதாது, காணாது என்­கி­றார்­கள் உழ­வர்­கள். இது­வா­வது முத­ல­மைச்­ச­ருக்கு சொல்­லப்­பட்­டதா?

“டெல்டா பாச­னத்­துக்­காக செப்.1–ம் தேதி முதல் 45 நாட்­க­ளுக்கு மேட்­டூர் அணை திறக்­கப்­ப­டும்” என அரசு அறி­வித்­துள்­ளது விவ­சா­யி­கள் மத்­தி­யில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஏனென்­றால் மேட்­டூர் அணை­யில் தற்­போ­தைய நீர்­மட்­டம் 90 அடி­யா­கத் தான் உள்­ளது. இத­னால், அணை­யில் இருந்து 40 முதல் 50 நாட்­கள் வரை மட்­டுமே தண்­ணீர் திறக்க முடி­யும். இது சம்பா சாகு­ப­டிக்கு போது­மா­ன­தாக இருக்­காது.

எனவே, அணைக்கு நீர்­வ­ரத்­தும் 8 ஆயி­ரம் முதல் 12 ஆயி­ரம் கன­அடி வரை இருக்­கும் நிலை­யில், அணை­யின் நீர்­மட்­டம் 100 அடியை எட்­டிய பிறகோ அல்­லது செப்.10–ம் தேதிக்கு பிறகோ பாச­னத்­துக்­காக தண்­ணீர் திறந்­தால்­தான் ஒரு போக சம்பா சாகு­ப­டியை விவ­சா­யி­கள் முழு­மை­யாக செய்ய முடி­யும்” என்று விவ­சாய சங்­கங்­கள் சொல்­வதை முத­ல­மைச்­சர் விஜய்க்கு யாரா­வது சொன்­னார்­களா?

அல்­லது, ‘சூட்­டிங் தானே போய் வரட்­டும்’, ‘அவர் மேட்­டூர் அணை­யைத் திறக்­கப் போக­வில்லை, செல்­லம் பாட்­டிக்கு கூலிங்­கி­ளாஸ் கொடுக்­கத் தானே போகி­றார்’ என்று அதி­கா­ரி­கள் விட்­டு­விட்­டார்­களா?

ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது------------------------------வரும் 10/15 ஆண்டுகளில் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இர...
02/09/2026

ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது
------------------------------
வரும் 10/15 ஆண்டுகளில் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது.

போகப்போகிற அந்த தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,
காலையில் நடைப்பெயர்ச்சிக்கு செல்பவர்கள். வீட்டு தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் கொடுப்பவர்கள்,
கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து, பிரார்த்தனை செய்பவர்கள்.

தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்.
வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள், அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் விசாரிப்பவர்கள், இரு கைகளை கூப்பி வணங்குபவர்கள்,

வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக் கொள்ளாதவர்கள்.

அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம்.

★திருவிழாக்கள், விருந்தினர் உபாச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள் அவர்களின் அனைத்துமே இந்து தர்மத்தைச் சுற்றி சுற்றியே வருகிறது.

லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள், தொலைபேசி எண்களை டைரியில் பராமரிப்பவர்கள், ராங் நம்பர் கூடவும் அரைமணி நேரம் பேசுபவர்கள் .

ஒரு நாளைக்கு இரண்டு- மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள்.

★எப்போதும் ஏகாதசி , அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் கொள்பவர்கள் இந்த மக்கள், கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள், சமூக பயம் உள்ளவர்கள்.

பழைய செருப்புடன் உலா வருபவர்கள், பனியன், சோடா புட்டி கண்ணாடி என சதா எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்.

கோடையில், ஊறுகாய், வடாம் தயாரிப்பவர்கள், வீட்டில் உள்ள உரலில் இடித்த மசாலாப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள்.

எப்போதும் நாட்டு தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்.

★இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

★உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா? ஆம் எனில், அவர்களை மிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள். மரியாதை கொடுங்கள் அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள் இல்லையெனில் அவர்களுடன், ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதிமுக்கிய வாழ்க்கைப்பாடம் போய்விடும் ..

அதாவது மனநிறைவு, எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்க்கை, கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை, மதத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் *அக்கறையுள்ள ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்.

★உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை , நேரம் மற்றும் அன்பு கொடுங்கள்.

நம்முன்னோர்களே நமது அடையாளம் நமது முகவரிமற்றும்நமது பெருமை.

உணர்வோம், செயல்படுவோம் .

#படித்தேன்_பகிர்கிறேன்
Panju Aravindan

02/09/2026

இது ஒன்றும் வரலாற்றில் முதல்முறை அல்ல, திமுக ஆட்சியில் 5000 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

02/09/2026

கச்சத்தீவு விவகாரத்தில் அப்போதைய ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசிடமும் கலைஞர் அவர்களிடமும் எந்தவித ஒப்புதலோ ஆலோசனையோ பெறவில்லை!

02/09/2026

ஒரே ஒரு கேள்வியில ஒட்டுமொத்த பில்டப்பும் காலி! 😂💥

‌Fails

Address

Erode
Erode
638011

Alerts

Be the first to know and let us send you an email when ErodeWest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share