Vagaitamilthaifoundation

Vagaitamilthaifoundation உதவுவோம்!உயர்வோம்!

வாகை தமிழ் தாய் அறக்கட்டளை
12/02/2026

வாகை தமிழ் தாய் அறக்கட்டளை

காது கேளாமை வாய் பேச முடியாமல் இருக்கும் பள்ளி மாணவிக்கு வாகை தமிழ் தாய் டிரஸ்ட் மூலம் நிதி உதவி கள்ளக்குறிச்சி மாவட்டம்...
07/02/2026

காது கேளாமை வாய் பேச முடியாமல் இருக்கும் பள்ளி மாணவிக்கு வாகை தமிழ் தாய் டிரஸ்ட் மூலம் நிதி உதவி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, சிக்காடு, ஐயம்பெருமாள் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் மணிகண்டன் அவர்களின் மகள் மதுநிஷா அவர்களுக்கு பிறவியிலிருந்து காது கேளாமை, வாய், பேச முடியாத நிலையில் அரசு பள்ளியில் தனது படிப்பினை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தனது குடும்பத்தினர் அவருக்கு காது கேட்கும் கருவியை பொருத்துவதற்கான முயற்சியில் செய்து வருகின்றனர், அரசு மாற்றுத்திறனாளி அலுவலத்திலும் அதற்கான கோரிக்கையை வைத்துள்ளனர், இதுவரை யாரும் செவி சாய்க்காத நிலையில், வாகை தமிழ் தாய் டிரஸ்ட் நிறுவனர் பிரபுராஜ் அவர்கள் தகவல் அறிந்து உடனடியாக அவர் இல்லத்திற்கு நேரில் சென்று படிப்புக்கு தேவையான நிதி உதவி வழங்கியுள்ளார், அதனுடன் உரிய மருத்துவமனையில் பரிசோதனை செய்து காது கேட்கும் கருவினை பொருத்துவதற்கான முயற்சியையும் வாகை தமிழ் தாய் அறக்கட்டளை மூலம் செய்து கொடுக்கிறோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

#வாகைதமிழ்தாய்

தமிழக அரசால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வாகை தமிழ் தாய் டிரஸ்ட் மூலம் மாதம்தோறும் நிதி உதவிகள்ளக்குறிச்சி மா...
06/02/2026

தமிழக அரசால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வாகை தமிழ் தாய் டிரஸ்ட் மூலம் மாதம்தோறும் நிதி உதவி

கள்ளக்குறிச்சி மாவட்டம், பாக்கம் புதூர், தெற்கு தெரு பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி முருகன் அவர்களின் மனைவி தாட்சாயினி அவர்களுக்கு ரத்தக்குழாய் அடைப்பின் காரணமாக இடது கால் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட நிலையில் அவர்களின் குடும்பத்தினர் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது, இந்த சூழ்நிலையில் தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் மனுக்கள் வழங்கி வந்த நிலையில், இதுவரை அரசு தரப்பில் எந்த ஒரு சலுகையும் செய்து தரவில்லை என்று கூறுகிறார்.

அவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ஒரு வருடத்திற்கு முன்பாக இரத்த குழாய் அடைப்பால் காலை எடுத்து விட்டோம், அரசு தரப்பில் இருந்து வரக்கூடிய சலுகைகள் ஒன்று கூட கிடைக்கவில்லை, நான் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன், எங்களால் வீட்டு வாடகை கூட கட்ட முடியாத நிலையில் இருக்கிறோம், எனது கணவரும் கூலி வேலை தான் செய்து வருகிறார், என் குழந்தையும் படிக்க வைத்தாக வேண்டும், எனது கணவர் குழந்தையும் படிக்க வைத்துக் கொண்டு, எனக்கு சமையலும் செய்து வைத்துவிட்டு, வேலைக்கு சென்று வருவதால் எங்களால் சமாளிக்க முடியவில்லை, கஷ்டமாகவும், சிரமமாகவும் இருக்கிறது,

எங்கு மனு கொடுத்தாலும் அதிகாரிகள் ஒருத்தர் கூட கண்டுகொள்ளவில்லை, எல்லா இடத்திலும் மனு கொடுத்து விட்டோம் இதுவரை எந்த சலுகையும் கொடுக்கவில்லை, முதலமைச்சர் அவர்களே எனக்கு சொந்த வீடு கட்டிக் கொடுங்கள், எனக்கு தேவையான சலுகைகளை செய்து கொடுங்கள், வேறு ஒன்றும் உங்களிடம் நான் கேட்கவில்லை, எங்கள் சிரமத்தை வெளியில் சொல்ல முடியவில்லை உங்களை நம்பி தான் கேட்கிறேன் எனது கோரிக்கையை ஏற்று இதனை செய்து கொடுங்கள் என்று வீடியோவில் கண்ணீர் சிந்த கூறியுள்ளார்.

இந்த வீடியோ பதிவினை பார்த்த வாகை தமிழ் தாய் டிரஸ்ட் நிறுவனர் பிரபுராஜ் அவர்கள் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தங்களது அறக்கட்டளை மூலம் அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நேரடியாக அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்து அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

அப்போது வாகை தமிழ் தாய் டிரஸ்ட் நிறுவனர் அவர்களின் குடும்ப சூழ்நிலை அறிந்து, பையனை படிக்க வைப்பதற்கும் வாகை தமிழ்த்தாய் டிரஸ்ட் மூலம் மாதம் மாதம் 2000 ரூபாய் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்கிறோம் என அவர்களிடம் தெரிவித்துள்ளார். உடன் வர்ஷினி RK பிரசாத் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Address

Kallakkurichchi

Alerts

Be the first to know and let us send you an email when Vagaitamilthaifoundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category