SDPI- எஸ்டிபிஐ கம்பம் நகரம்

  • Home
  • India
  • Kambam
  • SDPI- எஸ்டிபிஐ கம்பம் நகரம்

SDPI- எஸ்டிபிஐ கம்பம் நகரம் "பசியிலிருந்து விடுதலை"
"பயத்திலிருந்து விடுதலை"
மக்களுக்கான சேவைகளிலிருந்து அதிகாரத்தை நோக்கிய பயணம்

தேனி மாவட்டம்  #கம்பம் AP பல்க் அருகில் தென்னிந்திய முஸ்லிம் இளைஞர்கள் கூட்டமைப்பு நடத்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாம...
13/08/2026

தேனி மாவட்டம் #கம்பம் AP பல்க் அருகில் தென்னிந்திய முஸ்லிம் இளைஞர்கள் கூட்டமைப்பு நடத்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின்
பங்கு என்ன என்ற பெயரில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் Er.K.அப்பாஸ் மந்திரி அவர்கள் கலந்து கொண்டு சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற பெயரில் இஸ்லாமியர்களின் வரலாறுகளை சிறப்புரையாக எடுத்துரைத்தார்.
மேலும் இக்கூட்டத்திற்கு கம்பம் நகர தலைவர் K.சிராஜ்தீன்.BA மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



  கட்சி கம்பம் நகர மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் Er.J.வாசிம் அக்ரம்.BE அவர்களின் ஏற்பாட்டில்  #கூடலூரைச் சேர்ந்த பெண் ஒர...
08/08/2026

கட்சி கம்பம் நகர மருத்துவ சேவை அணி பொறுப்பாளர் Er.J.வாசிம் அக்ரம்.BE அவர்களின் ஏற்பாட்டில் #கூடலூரைச் சேர்ந்த பெண் ஒருவரின் அறுவை சிகிச்சைக்காக கம்பம் MRT மைதீன், முகமது யாசின் என்பவர்களால் மதுரை ப்ரீத்தி மல்டி ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையில்
🩸B+ பாசிட்டிவ் - 2 யூனிட் ரத்ததானம் செய்யப்பட்டது🩸

இவண்,
Er.J.வாசிம்அக்ரம்.BE
நகர பொருப்பாளர்,
மருத்துவ சேவை அணி,
SDPI கட்சி - கம்பம் நகரம்
தேனி மாவட்டம்.



ஆகஸ்ட்-08. மதுரையில் நடைபெறும் மண்டல அளவிலான   தமிழ்நாடு state Leader's Conclave ( #தலைவர்கள்_சங்கமம்) நிகழ்ச்சிக்கு வரு...
06/08/2026

ஆகஸ்ட்-08. மதுரையில் நடைபெறும் மண்டல அளவிலான தமிழ்நாடு state Leader's Conclave ( #தலைவர்கள்_சங்கமம்) நிகழ்ச்சிக்கு வருகை தரும் தேசிய தலைவர் அவர்களையும் மாநில முதல் கிளை வரையிலான அனைத்து நிர்வாகிகளையும் #மதுரை_மண்டல_IT_Wing டிஜிட்டல் வாரியர்ஸ் சார்பாக வருக.! வருக என வரவேற்கின்றோம்!

#வரவேற்பின்_மகிழ்வில்..

எஸ்.சகுபர் சாதிக்
மாவட்டச் செயலாளர், IT Wing
தேனி மாவட்டம்.
மதுரை மண்டலம்.

புதுப் பானையில் பழைய சோறு! - தமிழக பட்ஜெட் குறித்து எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அறிக்கைஇது தொடர்பாக எஸ்டிபிஐ ...
05/08/2026

புதுப் பானையில் பழைய சோறு! - தமிழக பட்ஜெட் குறித்து எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான முதல் மாநில பட்ஜெட்டை, மாண்புமிகு நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். புதிய அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், இந்த நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஏமாற்றத்தையே அளிக்கிறது.

அதேவேளையில், இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில சாதகமான அம்சங்களை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. குறிப்பாக, புதுமணப் பெண்களுக்கு 8 கிராம் (1 பவுன்) தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் 1 லட்சம் படுக்கை வசதிகளுடன் கூடிய 'TN சுடர்' ஒருங்கிணைந்த நவீன மாணவர் விடுதிகள் அமைக்கும் திட்டம், ரூ.50 கோடியில் 10 சிறப்பு ஒலிம்பிக் மையங்கள் மற்றும் பொதுமக்களுக்கான 'சேவை உரிமைச் சட்டம்' போன்ற அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை.

இருப்பினும், இந்த பட்ஜெட்டில் கவனிக்கப்பட வேண்டிய பெருமளவிலான குறைகளும் ஏமாற்றங்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக, சிறுபான்மை சமூக மக்களுக்கான சிறப்பான அறிவிப்புகள் எதுவும் இதில் இடம்பெறவில்லை. சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக நலனுக்கான தனிப்பட்ட திட்டங்களோ, சிறப்பு நிதி ஒதுக்கீடுகளோ அறிவிக்கப்படாமல் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

மேலும், தவெகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 10% கூட இந்த பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெறவில்லை. மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.2,500, ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள், முதியோர் உரிமைத்தொகை ரூ.3,000 மற்றும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற எந்தவொரு முக்கிய வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

இது தவிர, பள்ளிக்கல்வித் துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.4,007 கோடி நிதி குறைக்கப்பட்டு, ரூ.44,527 கோடியாக அறிவிக்கப்பட்டிருப்பது அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பைப் பெருமளவில் பாதிக்கும். மீன்பிடித் தடைக் கால நிவாரணம் ஏற்கனவே ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது பட்ஜெட்டில் ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளுக்கான தங்க மோதிரத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.560 கோடி நிதியானது, மாநிலத்தின் தற்போதைய அரசு மருத்துவமனை பிறப்பு விகிதக் கணக்கீட்டின்படி போதுமானதாக இல்லை.

அரசுத் துறைகளில் காலியாக உள்ள சுமார் 6 லட்சம் பணியிடங்களை நிரப்புவது குறித்தோ, புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தோ எந்தவொரு தெளிவான திட்டமும் இதில் இல்லை. 'புதுப் பானையில் பழைய சோறு' என்பது போல, முந்தைய அரசின் திட்டங்களுக்குப் புதிய பெயர்களைச் சூட்டி விளம்பரம் செய்வதால் மட்டுமே மக்களின் பசி ஆறிவிடாது.

ஆகவே, வெறும் 3 மாத கால ஆட்சியில் சாதனைகள் செய்துவிட்டதாகக் கூறும் தவெக அரசு, பட்ஜெட்டில் வெறும் பெயர் மாற்றங்களாலும் கவர்ச்சி அறிவிப்புகளாலும் மட்டுமே மக்களைத் திருப்திப்படுத்திவிட முடியாது என்பதை உணர வேண்டும். சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பு ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அரசு உடனடியாகத் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  | “உதயநிதி ஸ்டாலினை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது” -நெல்லை முபாரக், SDPI தலைவர்  |   |
04/08/2026

| “உதயநிதி ஸ்டாலினை வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது” -நெல்லை முபாரக், SDPI தலைவர்

| |

  -சோஷியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன் தொழிற்சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் பணி...
29/07/2026

-சோஷியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன் தொழிற்சங்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

தேனி மாவட்டம் தேனி நகரில்27-07-26 அன்று  SDPI  கட்சியின் மகளிர் அணி WIM விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட செயற்குழு கூட்டம...
28/07/2026

தேனி மாவட்டம் தேனி நகரில்27-07-26 அன்று SDPI கட்சியின் மகளிர் அணி WIM விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஹ. ரஹ்மத் நிஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்சியை சாலிஹா அவர்கள் தொகுத்து வழிநடத்தினார்
முன்னதாக பாத்திமா அவர்கள் வரவேற்புரையாற்றினார் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடு, மகளிர் அனியின் வளர்ச்சி , உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக சிறப்புரையாற்றினார்

இக்கூட்டத்தில்

கிளை கட்டமைப்பை மாவட்டம் முழுவதும் வழுப்படுத்துவது கிளை தேர்தல் நடத்துதல்

தேசிய தலைவர் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்சியில் கலந்து கொண்டு சிறப்பிப்பது

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மகளிர் அணியை தயார்படுத்துதல்

போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக மாவட்ட செயலாளர் வசிலா பானு அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்து.

28/07/2026

#கம்பம் நகர கட்சி 10-வது வார்டு கிளையின் சார்பாக கம்பம் #நகராட்சி_ஆணையர், மற்றும்
#நகராட்சி_சேர்மன் N.வனிதா நெப்போலியன் அவர்களுக்கும்
கட்சியின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.!

கட்சி 10-வது வார்டு கிளையின் சார்பாக கிளை கூட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அப்பகுதி மக்களுக்கான பல்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி கம்பம் நகராட்சி ஆணையிரடத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்த நிலையில்,
இன்று 10-வது வார்டு பகுதி 60-அடி ரோடு ஆரம்பத்தில் உள்ள பாலத்தின் அருகில் டிரான்ஸ்பார்மர் ஓடை பகுதியில் நகராட்சி சுகாதார பணியாளர்களால் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

மற்றும் 60-அடி ரோடு ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாவது குறுக்கு தெருவில் தேங்கி இருந்த சாக்கடை குப்பைகளை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்று சுத்தம் செய்யப்பட்டிருப்பதை SDPI கட்சி வரவேற்கின்றது. SDPI கட்சியின் மனுவை ஏற்று நடவடிக்கை எடுத்த கம்பம் நகராட்சி ஆணையருக்கும், நகராட்சி சேர்மன் N.வனிதா நெப்போலியன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

* #மேலும், ஒரு கோரிக்கையாக #எத்தீம்கானா பின்புறம் உள்ள பாலத்தில் மீண்டும் குப்பைகள் #கொட்டப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் நடந்து செல்லும் பகுதி என்பதால் அதிகம் குப்பை சேருவதால் சுகாதாரக் கேடு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எத்தீம்கானா பின்புறம் #இரும்பு_குப்பைத்_தொட்டி 2-வைக்க வேண்டும் என்றும் பாலத்தில் தெருக்களில் யாரும் குப்பையை கொட்டாமல் இருக்க நோய் தொற்றால் பாதிப்பு ஏற்படுவதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதையும் கம்பம் நகராட்சி ஆணையரிடம் மேலும் ஒரு கோரிக்கையாக வைத்து வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

#மக்களுக்கான இந்த சேவையில்,
10-வது வார்டு கிளைத் தலைவர் K.அப்பாஸ் அவர்களின் தலைமையில்,
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கம்பம் சாதிக் அலி, Er.K.அப்பாஸ் மந்திரி, நகர தலைவர் K.சிராஜ்தீன்.BA,
IT Wing கம்பம் தொகுதி தலைவர் MN மீரான் ஆகியோர்கள் துப்புரவு பணிகளை மேற்பார்வையிட்டு சுகாதார பணியாளர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், SDPI கட்சி 10-வது வார்டு கிளையின் சார்பாக மேலும் மனுவாக கொடுத்துள்ள கோரிக்கைகளை கம்பம் நகராட்சி நிர்வாகம் மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

#என்றும்_மக்கள்_சேவையில்,
10-வது வார்டு கிளை,
💚SDPI கட்சி - கம்பம் நகரம்❤️





#கம்பம்_நகராட்சி
SDPI- எஸ்டிபிஐ கம்பம் நகரம்

சென்னையில் அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைமையகத்தின் தரைத்தளத்தில், இன்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து...
28/07/2026

சென்னையில் அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைமையகத்தின் தரைத்தளத்தில், இன்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளத்தில் பெயிண்டிங் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் தரைத்தளம் முற்றிலும் எரிந்து சேதமாகிவிட்டது.

​விபத்து நடந்த நேரத்தில் நானும் அலுவலக ஊழியர்களும் தலைமையகத்தில் இருந்தோம். அலுவலக ஊழியர்கள் உடனடியாகத் தீயை அணைக்க முயற்சி செய்தும் இயலாததால், தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தரைத்தளம் வழியாகக் கீழே இறங்க முடியாத சூழல் ஏற்பட்டதால், நானும் தலைமையக ஊழியர்களும் பாதுகாப்பாக கட்டிடத்தின் மொட்டை மாடிக்குச் சென்றோம்.

​தகவலறிந்து விரைந்து வந்த வடசென்னை மண்டலத் தலைவர் முஹம்மது ரஷீத், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் இஸ்மாயில், வடசென்னை வடக்கு மாவட்டத் தலைவர் பூட்டோ மைதீன் மற்றும் எஸ்டிபிஐ செயல்வீரர்கள், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீவிரமாகப் பணியாற்றினர்.

கட்டிடத்தின் தரைத்தளம் முற்றிலும் எரிந்து விட்ட நிலையில், இறைவனின் பெரும் கிருபையாலும், தீயணைப்புத் துறையினரின் விரைவான மீட்பு நடவடிக்கையினாலும் நாங்கள் அனைவரும் எந்தவிதக் காயமுமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டோம். பெரும் அசம்பாவிதம் ஏதுமின்றி அனைவரும் நலமாக உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

​-நெல்லை முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

Address

Kambam
625516

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI- எஸ்டிபிஐ கம்பம் நகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share