SDPI Verkilambi

SDPI Verkilambi 𝗦𝗢𝗖𝗜𝗔𝗟 𝗗𝗘𝗠𝗢𝗖𝗥𝗔𝗧𝗜𝗖 𝗣𝗔𝗥𝗧𝗬 𝗢𝗙 𝗜𝗡𝗗𝗜𝗔 - 𝗩𝗘𝗥𝗞𝗜𝗟𝗔𝗠𝗕𝗜 -
𝗞𝗮𝗻𝘆𝗮𝗸𝘂𝗺𝗮𝗿𝗶 𝗗𝗶𝘀𝘁𝗿𝗶𝗰𝘁,𝗧𝗮𝗺𝗶𝗹𝗻𝗮𝗱𝘂.

24/05/2026

சுட்டெரிக்கும் கத்தரி வெயில்: பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளிவைக்க SDPI கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பதை ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் மிகத் தீவிரமாகி வருகிறது. சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகி வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நிலவி வரும் வெப்ப அலை காரணமாக மதிய நேரங்களில் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு மருத்துவத் துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர்.

இத்தகைய அசாதாரணமான சூழலில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கடும் வெப்ப நிலையை சிறுவர், சிறுமியர் மற்றும் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்வது அவர்களின் உடல்நலனைப் பெரிதும் பாதிக்கும்.

எனவே, மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒரு வார கால நீட்டிப்பு மாணவர்களின் கல்விப் பாதையில் எவ்வித தொய்வையும் ஏற்படுத்தாது என்பதால், முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Chief Minister of Tamil Nadu

20/05/2026

SDPI DEMANDS IMMEDIATE ROLLBACK OF FUEL PRICE HIKE

The Social Democratic Party of India strongly condemns the Modi government’s petrol and diesel price hike of Rs 3 per litre, followed by another increase of around 90 paise immediately after the Assembly elections, exposing cynical electoral politics. Despite years of high fuel taxation during low crude periods, the government failed to provide relief, reduce import dependence, or build energy resilience against geopolitical risks. The party alleged that foreign policy alignments amid the West Asia crisis have further strained energy security.

SDPI warned that the hike will severely impact daily wage earners, farmers, small businesses, and middle class families by triggering inflation in essential goods and services. The party said ad hoc measures cannot hide long term policy failures aimed at protecting oil companies and corporate interests at public expense, and demanded immediate rollback of the hike, an end to deregulated pricing, and stronger government regulation.

P Abdul Majeed Faizy
National General Secretary

20/05/2026

பணிநிரந்தரம்-ஊதிய உயர்வு, பெண் தொழிலாளர்களுக்கான கழிவறை வசதி உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்! –எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் வழக்கறிஞர் கு.பாரதி தலைமையில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, போராட்ட வழக்குகளை திரும்பப் பெறுதல், பெண் தொழிலாளர்களுக்கான கழிவறை வசதியை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். தங்களது வாழ்வாதார உரிமைகளை மீட்டெடுக்க முன்னெடுத்துள்ள தூய்மைப் பணியாளர்களின் இந்த அறப்போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி முழு ஆதரவளிக்கிறது.

நமது சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும், தூய்மைக்கும் தங்களின் இன்னுயிரையும், உழைப்பையும் அர்ப்பணித்து வரும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் மிகவும் நியாயமானவை. அவர்களை வெறும் 'முன்னணிப் பணியாளர்கள்' என்று வாய்வார்த்தையாகப் பாராட்டுவதோடு நிறுத்திவிடாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை முறைப்படுத்தி சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது.

குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களை எவ்வித நிபந்தனையுமின்றி தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்போதைய கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப, அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற நியாயமான ஊதிய உயர்வை அரசு உடனே அறிவிக்க வேண்டும். மேலும், தங்களின் உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் ஜனநாயக முறையில் போராடிய தொழிலாளர்கள் மீது பதியப்பட்ட போராட்ட வழக்குகளை தமிழக அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

அத்தோடு, பணியில் இருக்கும் பெண் தொழிலாளர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கான பாதுகாப்பான கழிவறை வசதிகளை அனைத்துப் பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும். சமூகத்தின் அடித்தட்டு மக்களாக இருக்கும் இத்தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. தூய்மைப் பணியாளர்களின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்ய, தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, போராடும் தொழிலாளர்களை அழைத்து பேசி அவர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Chief Minister of Tamil Nadu

20/05/2026

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களுக்கும், சிறப்பான மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கும் SDPI கட்சியின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, கல்வியில் மென்மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறேன். இத்தேர்வில் தேர்ச்சியை தவறவிட்ட மாணவர்கள் மனந்தளராமல் அடுத்துள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி முழுமுயற்சியோடு தேர்ச்சி அடைய வாழ்த்துகிறேன்.

-முகம்மது முபாரக் M.A.,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

14/05/2026

திருச்சியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம்

திருச்சியில் இன்று (மே.14) எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேசிய செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும், கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபூபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் நஸ்ருதீன், மாநிலச் செயலாளர்கள் ஷபீக் அஹம்மது, ஹமீது ஃப்ரோஜ், நஜ்மா பேகம், வழ.ஹஸ்ஸான், பாஸ்டர் மார்க், மாநில பொருளாளர் முஸ்தபா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மேலும், இந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள், செயலாளர்கள், மகளிர் அணி, வர்த்தகர் அணி, வழக்கறிஞரணி, எஸ்டிடியூ தொழிலாளர் அணி உள்பட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல், நடப்பு அரசியல் சூழல்கள் மற்றும் பல்வேறு விசயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

*தீர்மானம் 1:*

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், நன்னிலம் தொகுதியில் போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், தீவிரமாகக் களப்பணியாற்றிய எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும், தமிழகம் முழுவதும் கூட்டணிக்காக 234 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றிய கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் இக்கூட்டம் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறது.

*தீர்மானம் 2:*

தமிழகத்தில் புதிய அரசை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உயர்திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கும் இந்த கூட்டம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

புதிய அரசு, அரசியல் காழ்ப்புணர்வு மற்றும் பாரபட்சமின்றி, தமிழகத்தின் நலன், மக்கள் வாழ்வாதாரம், கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநில உரிமைகளைப் பாதுகாப்பதை முன்னிறுத்திச் செயல்பட வேண்டும். முந்தைய அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் தொய்வின்றித் தொடர வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

மேலும், தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்; குறிப்பாக, நடப்பு மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். அத்துடன், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மகளிர் உரிமைத் தொகையை ரூ. 2,500-ஆக உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

*தீர்மானம் 3:*

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் அமைச்சரவையில், இதுவரை 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள போதிலும், அவர்களுக்கு இன்னும் இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பது அரசு நிர்வாகப் பணிகளில் தேக்கத்தையும், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தொய்வையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, நிர்வாக நடைமுறைகள் தடையின்றி நடைபெற ஏதுவாக, பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு உடனடியாக இலாக்காக்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

*தீர்மானம் 4:*

பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்தல், மீண்டும் 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' முறையைப் பின்பற்றுதல், ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்த்தல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்தல் போன்ற பிரதமரின் அண்மைய ஆலோசனைகள் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, லாக்டவுன் போன்றதொரு நிலையை மீண்டும் பின்பற்றச் சொல்வது போன்ற அரசின் இந்த அறிவுறுத்தல்கள், நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறதோ என்ற ஐயத்தை நடுத்தர வர்க்கத்தினரிடையே விதைத்துள்ளன.

இஸ்ரேல்-அமெரிக்காவின் ஈரான் மீதான போர் உள்ளிட்ட சர்வதேசச் சூழலால் இந்தியாவிற்குப் பாதிப்பில்லை என்று கூறிவிட்டு, தற்போது மக்களின் நுகர்வுப் பழக்கவழக்கங்களில் இத்தகையக் கட்டுப்பாடுகளைக் கோருவது முரணாக உள்ளது. எனவே, நாட்டின் உண்மையான நிதி நிலை குறித்து நிலவும் அச்சத்தைப் போக்க, ஒன்றிய அரசு உடனடியாக ஒரு தெளிவான 'வெள்ளை அறிக்கை' வெளியிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

*தீர்மானம் 5:*

தமிழகச் சிறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யத் தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும். தற்போது அவர்களின் பரோல் காலம் முடிந்து மீண்டும் சிறை செல்லும் நிலை உருவாகியுள்ளதால், சிறைவாசிகளின் குடும்பத்தினர் பெரும் கவலையில் உள்ளனர். எனவே, பேரறிவாளன் வழக்கை முன்னுதாரணமாகக் கொண்டும், இவர்களுக்கும் உடனடியாக நீண்டகாலப் பரோல் வழங்கிடவும், எவ்விதப் பாரபட்சமுமின்றி இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

12/05/2026

மேற்கு வங்கத்தில் பாஜக தூண்டிவிடும் வகுப்புவாத வன்முறையை SDPI கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது!

சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மேற்கு வங்கத்தில் வகுப்புவாதத் துருவமுனைப்பைத் தூண்டி வன்முறையைக் கட்டவிழ்த்து விட பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பும் திட்டமிட்டு மேற்கொண்டு வரும் முயற்சிகளை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வெற்றி கொண்டாட்டங்கள் என்ற பெயரில், எதிர்க்கட்சித் தொண்டர்கள், முஸ்லிம்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களைக் குறிவைத்து ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகப் பல மாவட்டங்களிலிருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன

மே 10 அன்று ஹூக்ளியில் ஒரு வயல்வெளியில் இரத்தக் கறையுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் (TMC) பஞ்சாயத்து உறுப்பினர் சகாதேவ் பாக் என்பவரின் கொடூரக் கொலை, தேர்தலுக்குப் பிந்தைய ஆறாவது கொலையாகப் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னதாக நானூர் (பிர்பூம்) பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்ட அபீர் ஷேக், பெலேகட்டா (கொல்கத்தா) பகுதியில் விஸ்வஜித் பட்நாயக், என்டல்லியில் தபாஸ் நாஸ்கர் மற்றும் குல்பியில் (தெற்கு 24 பர்கானாக்கள்) மிதுன் சமந்தா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மே 4 முதல் 7 வரை கூச் பெஹார், வடக்கு 24 பர்கானாக்கள், தெற்கு 24 பர்கானாக்கள் மற்றும் ஹவுரா உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் நடந்த குறைந்தது 34 வன்முறைச் சம்பவங்கள் விரிவான அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கூச் பெஹாரின் கோசாணிமாரி பகுதியில் "ஜெய் ஸ்ரீராம்" ஊர்வலத்தின் போது பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் இதில் அடங்கும்; அங்கு வழிபாட்டுத் தலத்தைப் பாதுகாக்க முயன்றபோது ஒரு முஸ்லிம் நபர் கொல்லப்பட்டார். மேலும் நந்தினா மற்றும் அபுத்ரா போன்ற கிராமங்களில் முஸ்லிம்களின் வீடுகள் சூறையாடப்பட்டதும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும், இறைச்சிக் கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களும் அந்த அறிக்கையில் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவங்களின் தன்மை, துருவமுனைப்பை ஏற்படுத்துவதையும் வங்காளத்தின் நீண்டகால சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமிடப்பட்ட அச்சுறுத்தல் செயல்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

பதிவான அனைத்துச் சம்பவங்கள் குறித்தும் பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு எதிராகத் தாமதமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சி கோருகிறது.

எஸ்டிபிஐ கட்சி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவாக நிற்பதோடு, வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியலை உறுதியுடன் நிராகரிக்குமாறு மேற்கு வங்க மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. வங்காளத்தின் ஒற்றுமையும் சமூகக் கட்டமைப்பும் பாதுகாக்கப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும்.

-யா முகைதீன்
தேசியச் செயலாளர், SDPI

12/05/2026

717 மதுக்கடைகள் மூடல்: தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு SDPI கட்சி வரவேற்பு! - படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்திருந்த 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நடவடிக்கை மிகுந்த வரவேற்புக்குரியது.

மது உள்ளிட்ட போதை அரக்கனின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக இளைஞர்களையும், அதன் விளைவாகச் சீரழியும் ஏழைக் குடும்பங்களையும் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எனவே, தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை ஒரு தொடக்கமாகக் கொண்டு, தமிழகத்தில் படிப்படியாகப் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் உன்னத இலக்கை நோக்கி இந்த அரசு உறுதியுடன் நடைபோட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

போதையற்ற தமிழகத்தை உருவாக்கி, வருங்காலத் தலைமுறையினரின் வாழ்வை ஒளிரச் செய்யத் தேவையான அனைத்து ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், சமூக நலன் சார்ந்த இத்தகைய முடிவுகளுக்குத் எஸ்டிபிஐ கட்சி என்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Chief Minister of Tamil Nadu

09/05/2026

தவெக தலைவர் விஜய் அவர்கள் தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்கு SDPI கட்சியின் மனமார்ந்த வாழ்த்துகள்!

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், அவரது தலைமையிலான அமைச்சரவைக்கும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அமையவுள்ள புதிய அரசு, அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாட்டை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டும்.

​மேலும், மாநில உரிமை, தமிழ்நாட்டின் சுயாட்சி அதிகாரம் மற்றும் தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்துவதோடு, தமிழ்நாட்டின் குரல் இந்திய அளவில் ஓங்கி ஒலிப்பதைப் புதிய அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

அதோடு கடந்த திமுக அரசு செயல்படுத்தி வந்த மக்கள் நலத் திட்டங்களையும், பணிகளையும் தொடர்வதோடு, விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகச் செயல்படும் உண்மையான மக்கள் அரசாகத் திகழ வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.

-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு

07/05/2026
07/05/2026

Address

VERKILAMBI
Kanyakumari

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Verkilambi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share