SDPI Nellai ZONE

SDPI Nellai ZONE 𝗦𝗢𝗖𝗜𝗔𝗟 𝗗𝗘𝗠𝗢𝗖𝗥𝗔𝗧𝗜𝗖 𝗣𝗔𝗥𝗧𝗬 𝗢𝗙 𝗜𝗡𝗗𝗜𝗔

24/05/2026
24/05/2026

சுட்டெரிக்கும் கத்தரி வெயில்: பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளிவைக்க SDPI கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பதை ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் மிகத் தீவிரமாகி வருகிறது. சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிப் பதிவாகி வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், நிலவி வரும் வெப்ப அலை காரணமாக மதிய நேரங்களில் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு மருத்துவத் துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர்.

இத்தகைய அசாதாரணமான சூழலில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கடும் வெப்ப நிலையை சிறுவர், சிறுமியர் மற்றும் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்வது அவர்களின் உடல்நலனைப் பெரிதும் பாதிக்கும்.

எனவே, மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒரு வார கால நீட்டிப்பு மாணவர்களின் கல்விப் பாதையில் எவ்வித தொய்வையும் ஏற்படுத்தாது என்பதால், முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அவர் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

#முகம்மது_முபாரக் #கத்தரி_வெயில் #சுட்டெரிக்கும்_வெயில் #வெப்பஅலை #பள்ளிகள் #தமிழ்நாடு #மாணவர்கள்_பாதுகாப்பு #குழந்தைகள்_நலன் #கல்வி #மாணவர்_நலம்

கன்னியாகுமரி மாவட்ட SDPI கட்சியின் செயற்குழு கூட்டம் 20-05-2026 அன்று கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ...
24/05/2026

கன்னியாகுமரி மாவட்ட SDPI கட்சியின் செயற்குழு கூட்டம் 20-05-2026 அன்று கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு SDPI கட்சியின் மாவட்டத் தலைவர் A.சுல்பிக்கர் அலி தலைமை தாங்கினார்கள்.மாவட்டப் பொதுச் செயலாளர் M.முகைதீன் நாகூர் மீரான் வரவேற்புரையாற்றினார்.

இச்செயற்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாநிலப் பொதுச் செயலாளர் S.அகமது நவவி மற்றும் மண்டலத் தலைவர் T.சிக்கந்தர் BA ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. குமரி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஆற்றிய தேர்தல் பணிகளைப் பாராட்டி, கட்சித் தலைமை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு,அதற்கான தேர்தல் பணிகளை விரைந்து முடிப்பது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் நாஞ்சில் செய்யது அலி,அன்சார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சலீம், SDTU மாவட்டத் தலைவர் பாபு உசைன், தொகுதி தலைவர்கள், தொகுதி செயலாளர்கள்,நகர தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (MLA) திரு.ராஜேஷ்குமார் அவர்களுக்கு SDPI கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறோம்.

இக்கூட்டத்தின் இறுதியாக கட்சியின் மாவட்டச் செயலாளர் மணவை சாதிக் அலி நன்றியுரை ஆற்றினார்.

்சி_நெல்லைமண்டலம்


்சி_கன்னியாகுமரிமாவட்டம்

#கன்னியாகுமரி
சுல்பிகர் அலி அஹமத் M Nizar Nizar
மணவை சாதிக் அலி

தகவல் தொழில்நுட்ப அணி(SDPI IT WING),
SDPI கட்சி,
நெல்லை மண்டலம்.

23/05/2026

கோவையில் சிறுமி கடத்தப்பட்டு கொடூர கொலை: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல்! - SDPI கட்சி கடும் கண்டனம்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாத இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காகச் சட்டங்கள் எவ்வளவுதான் கடுமையாக்கப்பட்டாலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில் ஏற்படும் காலதாமதமும், சட்டச் சலுகைகளும் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்குப் பெருந்துணிச்சலை ஏற்படுத்தி, இதுபோன்ற கொடூரங்கள் தொடர்கதை ஆகக் காரணமாகின்றன. வெறும் சட்டப் புத்தகங்களால் மட்டும் குற்றங்களைத் தடுத்துவிட முடியாது; சமரசமற்ற கடும் நடவடிக்கையும், காலதாமதமற்ற விரைவான புலனாய்வும், உறுதியான அதிரடித் தண்டனையுமே இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

அண்டை வீட்டைச் சேர்ந்த, தெரிந்த நபர்களே இந்தக் கொடூரத்தை அரங்கேற்றியிருப்பது, நம் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு எவ்வளவு பெரிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்பதை உணர்த்துகிறது. பெண்களுக்கும், பிஞ்சுப் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற ஒரு மாநிலமாகத் தமிழகம் மாறிவருவது மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் அளிக்கிறது.
எனவே, தமிழக அரசும், காவல்துறையும், நீதித்துறையும் இணைந்து இவ்விவகாரத்தில் உடனடியாகவும் உறுதியாகவும் தலையிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வழக்கை விரைவு நீதிமன்றம் மூலம் விசாரிப்பதோடு, எவ்விதச் சலுகையும் இன்றி, மற்றவர்களுக்குப் பாடமாய் அமையும் வகையில் மிகக் கடுமையான தண்டனை விரைவாகப் பெற்றுத்தரப்பட வேண்டும்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். வெற்று வார்த்தைகளால் ஆறுதல் கூறுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு பெண் குழந்தைக்குக்கூட இத்தகைய கொடூரம் நிகழக் கூடாது என்கிற அடிப்படையில் தமிழக அரசும், நீதித்துறையும் போர்க்கால அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எஸ்டிபிஐ கட்சி துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

23/05/2026

சென்னையில் தொடரும் மின்வெட்டால் மக்கள் அவதி! தடையில்லா மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் தவெக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - SDPI கட்சி வலியுறுத்தல்*

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தலைநகர் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக, பல மணி நேரம் நீடித்து வரும் கடுமையான மின்வெட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியுள்ளது பெரும் கவலையளிக்கிறது. கோடைக்கால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அறிவிக்கப்படாத இந்த மின்தடை பொதுமக்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

கடந்த ஆட்சியின்போது, கோடைக் காலத்திலும் கூட தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்த சூழலில், புதிய அரசு அமைந்த சில நாட்களிலேயே, அதுவும் தலைநகர் சென்னையிலேயே மக்கள் மின்வெட்டைக் கண்டித்து வீதிக்கு வந்து போராடும் அவல நிலை ஏற்பட்டிருப்பது கவலையளிக்கிறது.

கோடைக் காலத்தில் மின்சாரத் தேவை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரிக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும் அரசும், மின்வாரியமும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், போதிய திட்டமிடலையும் செய்யத் தவறியது ஏன் என்கிற கேள்வி எழுகிறது.

மின்தடை குறித்துப் பொதுமக்கள் மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்றால், முறையான பதில்கள் அதிகாரிகளிடம் இருந்து கிடைப்பதில்லை என்றும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, தடையில்லா மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைக் கால மின்சுமையைத் தாங்கக் கூடிய வகையில் மின்மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையங்களை உடனடியாகப் பராமரிப்புச் செய்ய வேண்டும்.

புதிய அரசு என்பது மக்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தர வேண்டும்.அவர்களின் தூக்கம் கெடுக்கும் சூழலை ஏற்படுத்தக் கூடாது. மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவு செய்யும் அரசாகச் செயல்பட்டு, இந்த மின்வெட்டுப் பிரச்னைக்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

23/05/2026

முஸ்லிம் அமைச்சர்களுக்கு முக்கியத் துறைகளை வழங்கிடுக! – தமிழக முதல்வருக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தவெக தலைமையிலான தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில், கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் அவர்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு அவர்களுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளதை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது.
அதேவேளையில், சமூக நீதியின் அடிப்படையில் இந்த அமைச்சரவை விரிவாக்கத்தை உற்றுநோக்கும்போது சில நியாயமான ஆதங்கங்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது. அனைத்துச் சமூகங்களுக்கும் சமூகநீதி அடிப்படையில் அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விடக் கூடுதல் இடங்கள் இந்த தவெக அரசில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அனைத்து சமூகத்தின் பங்களிப்பையும் உரிய பிரதிநிதித்துவத்தையும் உறுதிபடுத்த வேண்டியது இந்த அரசின் கடமையாகும்.
எனவே, ஆளுங்கட்சியான தவெக-விலிருந்தும் வெற்றிபெற்றுள்ள கூடுதலான முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடங்களை ஒதுக்கீடு செய்திட வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை சமூகநீதியை காக்கும் அரசு என கூறும் இந்த அரசில் தமிழக அமைச்சரவையில் குறைந்தது ஐந்து முஸ்லிம் அமைச்சர்களாவது இடம்பெறுவதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், முஸ்லிம் பெயர் என்பதற்காக சிறுபான்மையினர் நலத்துறை என்ற வழக்கமான, சுருக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டும் முஸ்லிம் அமைச்சர்களை முடக்கிவிடக் கூடாது. அடையாள அரசியலுக்காக வெறும் பெயரளவு துறைகளை மட்டும் ஒதுக்காமல்; அண்டை மாநிலமான கேரளாவில் கூட்டணி கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கல்வி, தொழில், வருவாய் உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கியத் துறைகளையும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு வழங்கிட முன்வர வேண்டும். அதிகாரப் பகிர்வும், சமத்துவமான துறை ஒதுக்கீடும் மட்டுமே உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் என்பதால், பரந்துபட்ட பார்வையில் இக்கோரிக்கையைப் பரிசீலித்து, அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கான உரிய பங்கீட்டை முதல்வர் அவர்கள் உரிய பொறுப்புகளை வழங்கிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

21/05/2026

Withdraw Vande Mataram Directive Immediately

Hakikul Islam, State President of the Social Democratic Party of India, West Bengal, strongly condemned the decision of the BJP government in West Bengal, led by Chief Minister Suvendu Adhikari, to impose the compulsory singing of “Vande Mataram” in schools and madrassas across the state. He stated that the directive is an unnecessary and provocative intervention into educational and religious spaces, particularly targeting minority institutions under the guise of nationalism. Patriotism, he said, cannot be imposed through coercion, nor can constitutional freedoms be sacrificed for political symbolism.

Hakikul Islam further stated that the mandatory enforcement of any song carrying historical and religious sensitivities violates the spirit of India’s secular Constitution and undermines democratic diversity. He demanded that the government immediately withdraw the order and refrain from using educational institutions as platforms for ideological polarisation and majoritarian politics.

20/05/2026
20/05/2026

YOUNG DEMOCRATS

🟩🟩🟩🟩⭐️🟥🟥🟥🟥

20/05/2026

The First Young Democrats Rally In Trivandrum, Keralam.

All the very best Team Keralam...

20/05/2026

THE FUTURE OF INDIAN YOUTHS...

May 20, STATE YOUTH ASSEMBLY,
Thiruvananthapuram.

Address

Nagercoil
Kanyakumari

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Nellai ZONE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share