S Kalyanasundaram

S Kalyanasundaram S.Kalyanasundaram - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

பீகார் மாநிலத்தில் நாடாளுமன்ற நிலை குழு தலைவர் சஞ்சய் குமார் ஜா M.P. அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆய்வி...
26/08/2026

பீகார் மாநிலத்தில் நாடாளுமன்ற நிலை குழு தலைவர் சஞ்சய் குமார் ஜா M.P. அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆய்வினை மேற்கொண்டோம்,

நிகழ்வில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு பணிகள், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறிப்பாக நாளந்தா பல்கலைக்கழகத்திலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் கண்டு ஆய்வு மேற்கொண்டோம் மேலும் ஒன்றிய அரசின் நிதி பகிர்வில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டோம்

இந்நிகழ்வில் நிலைக் குழுவில் இடம் பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய அரசின் துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் சிறப்பாக நடைபெற்ற இந்த ஆய்வில் நிலைகுழு உறுப்பினர்களை நிறைவாக மாநில முதல்வர் சாம்ராட் சௌத்ரி அவர்கள் அனைவரையும் மரியாதை நிமித்தம் சந்தித்த போது அனைவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

தஞ்சை சாஸ்த்ரா நிகழ்நிலைப் பல்கலைக்கழகத்தின் 40-ஆம் ஆண்டு விழா மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி.ராதாக...
17/08/2026

தஞ்சை சாஸ்த்ரா நிகழ்நிலைப் பல்கலைக்கழகத்தின் 40-ஆம் ஆண்டு விழா மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலும் தமிழக ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டோம்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சி அண்ணன் முரசொலி மாறன் அவர்களின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலங்களவை உ...
17/08/2026

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சி அண்ணன் முரசொலி மாறன் அவர்களின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர் திரு சு. கல்யாணசுந்தரம் MP அவர்கள் தலைமையில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர் நிகழ்வில் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சி திரு. முரசொலி மாறன் அவர்களின் 93-வது பிறந்தநாளில் அண்ணாரின் புகழை போற்றி வணங்குகிறேன்.
17/08/2026

தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சி திரு. முரசொலி மாறன் அவர்களின் 93-வது பிறந்தநாளில் அண்ணாரின் புகழை போற்றி வணங்குகிறேன்.

❤❤❤
03/08/2026

❤❤❤

போற்றுவார் போற்றட்டும்!தூற்றுவார் தூற்றட்டும்!என் கடன் மக்கள் பணி செய்து கிடப்பதே!கும்பகோணம் அண்ணல் அக்ரஹாரம் ரயில்வே கே...
02/08/2026

போற்றுவார் போற்றட்டும்!
தூற்றுவார் தூற்றட்டும்!
என் கடன் மக்கள் பணி செய்து கிடப்பதே!

கும்பகோணம் அண்ணல் அக்ரஹாரம் ரயில்வே கேட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு எனது தொடர் முயற்சியின் பலனாக அமையவுள்ள ரயில்வே மேம்பாலம் (ROB) பணிகளை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆய்வு செய்தோம், மேம்பால பணிகளின் போது பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக மாற்றுப் பாதை ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தினோம்.

முன்னதாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கும்பகோணம் ரயில் நிலையத்தின் முன்புறம் இருக்கும் நுழைவு வாயிலைப் போன்று பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பின்புறமும் நுழைவு வாயில் அமைப்பது குறித்தும், திருநாகேஸ்வரம் குட்செட் (Goods shed) மேம்படுத்தும் பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினோம்.

நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கோவி.செழியன் Mla, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், ரயில்வேத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் மொழியில் நம்மால் பயணடைந்தவர்கள் நமக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்று எதிர்பாராமல், நம்மால் முடிந்தவரை மக்கள் பணியாற்றிட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து பணியாற்றுவேன்.

காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக ஒன்றிய அரசு அறிவிக்க, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற...
25/07/2026

காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக ஒன்றிய அரசு அறிவிக்க, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வருக்கு மாநிலங்களவை உறுப்பினர் திரு சு.கல்யாணசுந்தரம் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் திரு சு.கல்யாணசுந்தரம் எம்பி அவர்களது கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ந...
22/07/2026

மாநிலங்களவை உறுப்பினர் திரு சு.கல்யாணசுந்தரம் எம்பி அவர்களது கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கியுள்ளது.

கும்பகோணம் கோவிலாச்சேரி முதல் கொண்டாங்குடி வரை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பொறியியல் கல்லூரி முதல் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை ஆபத்தான வகையில் மாணவர்கள் தினமும் சாலையைக் கடப்பதை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதோடு
சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்ததையொட்டி ரூபாய் 12 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் (Service Road) சேவை சாலை அமைக்க நிதி ஒதுக்கி அனுமதி அளித்துள்ளது.

(முரசொலி, தினத்தந்தி நாளிதழ்கள் செய்தி வெளியீடு)

M. K. Stalin DMK - Dravida Munnetra Kazhagam

21/07/2026

மக்களை மதிக்காத மனிதாபிமானமற்ற ஒன்றிய அரசு!

16/07/2026

நாடாளுமன்ற குறித்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்:

மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.

ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.

தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்!

Address

Kumbakonam

Website

Alerts

Be the first to know and let us send you an email when S Kalyanasundaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share