அய்யம்பூமி மதுரை

அய்யம்பூமி மதுரை இப்போதும் , எப்போதும் அரசியல் நோக்கமற்ற சமூக நலம்....

மண் வளமே 🌱! மக்கள் வளம் 🌳 !
(1)

ஓர் இளைஞனின் துடிப்பு!“நாட்டைக் காக்கும் எங்களால், எங்கள் மலையைக் காக்க முடியவில்லையே!” — சங்கரலிங்காபுரம் இளைஞனின் குரல...
14/08/2026

ஓர் இளைஞனின் துடிப்பு!

“நாட்டைக் காக்கும் எங்களால், எங்கள் மலையைக் காக்க முடியவில்லையே!” — சங்கரலிங்காபுரம் இளைஞனின் குரல் இன்று போராட்டக் குரலாக மாறியுள்ளது!

கடந்த மே மாதம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த சங்கரலிங்காபுரம் கிராம மக்களின் சார்பில் பேசிய ஒரு இளைஞனின் குரல், பொதுசமூகத்தின் கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது.

அவர் எழுப்பியது வெறும் மனுவிற்கான நீதியை மட்டுமல்ல.
ஒட்டு மொத்த கிராமத்தின் வாழ்வாதாரத்திற்கான குரல் அது.
ஒரு தலைமுறையின் எதிர்காலத்திற்கான எச்சரிக்கை.
இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய சமூகக் கடமைக்கான அறைகூவல்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, எழுமலை அருகே அமைந்துள்ள சங்கரலிங்காபுரத்தைச் சுற்றியுள்ள மலைகள் அந்தப் பகுதி மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை.

அந்த மலைகளை நம்பி நூற்றுக்கணக்கான திறந்தவெளிக் கிணறுகள் உள்ளன. மலைகளைச் சார்ந்தே கண்மாய்கள், குளங்கள், ஓடைகள் உள்ளன. சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களின் குடிநீர், கால்நடை நீர், விவசாயம், மேய்ச்சல் என அனைத்திற்கும் இந்த மலைகள் முக்கிய ஆதாரமாக உள்ளன.

“நீரின்றி அமையாது உலகு” என்ற திருவள்ளுவரின் வார்த்தைகளை நினைவுபடுத்திய அந்த இளைஞன்,

"மலையை அழித்துவிட்டால் எங்களுக்கு தண்ணீர் கிடைக்காது. கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்காது. மேய்ச்சல் இருக்காது. அடிப்படை வாழ்வாதாரமே இந்த மலைதான்.”

என்று உருக்கமாகக் ஊடகங்கள் முன்பு கூறினார்.

சங்கரலிங்காபுரம் மற்றொரு தனிச்சிறப்பையும் கொண்ட கிராமம்.

ஊரில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் இருப்பதாகக் கூறிய அந்த இளைஞன்,

“நாட்டின் எல்லைகளைக் காக்க எங்கள் ஊர் இளைஞர்கள் செல்கிறார்கள். ஆனால் எங்கள் ஊரின் மலையை எங்களால் காக்க முடியவில்லை.”
என்றபோது, அது ஒரு சாதாரண வாக்கியமாக இருக்கவில்லை.

நாட்டைக் காக்கும் வீரர்களை உருவாக்கிய அதே மலைகள் இன்று பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டும் மனசாட்சியின் கேள்வியாக அது மாறியது.

ராணுவப் பயிற்சிக்கும் அந்த மலைப்பகுதிகள் பயன்படுகின்றன என்றும், அந்த மலைகள் அழிக்கப்பட்டால் எதிர்காலத்தில் இளைஞர்களின் ராணுவப் பயிற்சியும் பாதிக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு மலையை வெட்டுவது என்பது வெறும் கல்லை எடுப்பதல்ல!

மலையை வெட்டினால் அதன் தாக்கம் அந்த மலையோடு முடிந்துவிடாது.

புழுதி குடியிருப்புகளுக்குள் வரும்.

காற்று மாசுபடும்.

நீரோடைகளின் இயற்கையான நீர்வழித்தடங்கள் பாதிக்கப்படும்.

கண்மாய்களுக்கு வரும் நீர்வரத்து குறையும்.

கிணறுகளின் நீராதாரம் பாதிக்கப்படலாம்.

கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் குறையும்.

விவசாயம் பாதிக்கப்படும்.

பல்லுயிர்கள் தங்கள் வாழிடங்களை இழக்கும்.

“இதனால் 2,000 விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்; உணவுச்சங்கிலியும் பாதிக்கப்படும்” என்று அந்த இளைஞன் எச்சரித்தார்.

ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் இருந்த பறவைகள், விலங்குகள், ஓணான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட உயிரினங்கள் படிப்படியாக மறைந்து வருவதையும் அவர் குறிப்பிட்டார்.

“எங்களுக்கு எந்தச் சலுகையும் வேண்டாம்; இருப்பதைப் பாதுகாத்தால் போதும்!”

அந்த உரையின் மிக முக்கியமான வரிகளில் இதுவும் ஒன்று.

“எங்களுக்கு எந்தச் சலுகையும் வேண்டாம். இருப்பதைப் பாதுகாத்தால் போதும்.”

மக்கள் அரசிடம் கேட்பது புதிய திட்டமோ, புதிய உதவியோ அல்ல.

தங்களிடம் இருக்கும் இயற்கை வளத்தை அழிக்காமல் விட்டாலே போதும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை.

அந்த மலையை அழிப்பதால் தங்கள் கிராமத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது என்றும், மாறாக தங்களுடைய வாழ்வாதாரமே அழிந்துபோகும் என்றும் மக்கள் கூறுகின்றனர்.

அதனால்,
“இப்போது மட்டுமல்ல; எப்போதும் இந்த மலைகளை வெட்டக்கூடாது. இங்கு மட்டுமல்ல; எல்லா இடங்களிலும் மலைகளை அழிப்பதை நிறுத்த வேண்டும்” என்ற பரந்த பார்வையையும் அந்த இளைஞன் முன்வைத்தார்.

“மனு மட்டும் கொடுக்கமாட்டோம்; களத்திலும் நிற்போம்!”

அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சேடப்பட்டி ஒன்றியம் உள்ளிட்ட இடங்களில் மனு அளிக்க வந்த மக்கள் ஒரு உறுதியை வெளிப்படுத்தினர்.

“மனு கொடுப்பதோடு நின்றுவிட மாட்டோம். களத்திலும் நிற்போம். தீர்வு கிடைக்கும் வரை உறுதியாக போராடுவோம்.”

என்று அந்த இளைஞன் அறிவித்தார்.அதுவெறும் அறிவிப்பு அல்ல.ஓணான் கரடினை காக்கும் பிரகடனமாக இருந்தது.

இன்று அந்த வார்த்தை செயலாக மாறியுள்ளது.

சங்கரலிங்காபுரம் ஓணான் கரடு பகுதியில் கல்குவாரிகள் அமைக்க தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிராக, நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று 13.08.26 அன்று வியாழக்கிழமை அன்று கைகளில் கருப்புக்கொடிகளை ஏந்தி களத்தில் இறங்கியுள்ளனர்.

தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மக்கள் எடுத்திருக்கும் தொடர்ச்சியான போராட்டத்தின் அடுத்த கட்டம் இது.

மனு கொடுத்த இளைஞனின் குரல் இன்று மக்களின் கைகளில் இருக்கும் கருப்புக்கொடியாக மாறியுள்ளது.

அழிக்கப்படும் மலையின் துயரத்திற்கான அடையாள கொடி அது.

பாதிக்கப்படும் விவசாயியின் எதிர்ப்பின் அடையாளம்.
நீருக்காக போராடும் மக்களின் அடையாளம்.
வருங்கால தலைமுறையின் வாழ்வுரிமைக்கான அடையாளம்.

சங்கரலிங்காபுரம் மக்களின் தொடர்ச்சியான போராட்டம் வெல்லட்டும்!

இயற்கையையும், மலைகளையும், நீர்நிலைகளையும், விவசாயத்தையும், பல்லுயிர்களையும் பாதுகாக்க களத்தில் நிற்கும் மக்களோடு துணை நிற்பது ஒரு சிலரின் கடமை அல்ல.

இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் கடமை.

மலைகள் அழிக்கப்பட்ட பிறகு அவற்றை மீண்டும் உருவாக்க முடியாது.

நீராதாரங்கள் அழிந்த பிறகு அவற்றை மீட்டெடுப்பது எளிதல்ல.

ஒரு தலைமுறையின் வாழ்வாதாரம் அழிந்த பிறகு அதை மீண்டும் கொண்டு வர முடியாது.

எனவே,

**மலையை காப்போம்!

நீரை காப்போம்!
விவசாயத்தை காப்போம்!
பல்லுயிர்களை காப்போம்!
சங்கரலிங்காபுரம் மக்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம்!**

தொடர்ச்சியான மக்கள் போராட்டம் வெல்லட்டும்!
இயற்கையை பாதுகாக்கும் மக்களின் குரல் வெல்லட்டும்! இவ்வாறு - #டங்ஸ்டன்_திட்டம்_எதிர்ப்பு மற்றும் #இயற்கை_வள_பாதுகாப்பு மக்கள் கூட்டமைப்பினர் இந்த நிகழ்வை வெளிக்கொண்டு ஆதரவளித்து வருகின்றனர். இந்த நிலையில்

எங்கெங்கு இருந்தோ இயற்கையை காக்க ஆதரவு பெருகி வரும் நிலையில்.நம் பகுதி இளைஞருக்கு நாம் துணை நிற்க்காமல் போனால் எப்படி? இது வெறும் ஒரு ஊரின் பிரச்சனை இல்லை ,நம் பகுதிக்கே பெரும் இயற்கை சீற்றத்தை உருவாக்கும் #ஓனான் கரட்டின் முக்கியத்துவம் இயற்கையை அழித்தால் என்ன நிகழும் என்பதற்க்கு தற்ப்போது நிழவிவரும் மழை பற்றாக்குறை ஒரு சிறு உதாரணம். ஆகவே இயற்கையை காப்போம். என்று மள்ளப்புரம்,சூலப்புரம்,துள்ளுக்குட்டிநாயக்கனூர்,சங்கரலிங்காபுரம் ,பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் இதன் பால் விழிப்புணர்வு பெற வேண்டும் மேலும் இதனை அரசு தன் கவனத்தில் கொண்டு உடனடியாக நாட்டை காத்து நிற்க்கும் நம் பகுதி இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களது ஊரை காத்து நின்றால் மன நிம்மதியோடு எல்லையில் உறங்குவார்கள்.

இந்த துடிப்பான இளைஞருக்கும், நம்மாழ்வார் இயக்கத்திற்க்கும் போராட்டத்தில் கலந்துகொண்ட நம் பகுதி சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றியை அய்யம்பூமி மதுரை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்
#அய்யம்பூமி
#ஓனான்கரடு
#கல்குவாரி
#மக்கள்போராட்டம்
#மண்_வளமே! #மக்கள்_வளம்!
District Collector,Madurai

13/08/2026

நம் பகுதியான பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி சங்கிலிங்காபுரம் இயற்கையும் புரதான சின்னங்களையும் அழிக்க நினைக்கும் தனியார் கல்குவாரி உரிமைத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்யக்கோரி போராட்டம்..

இப்போராட்டத்தை நம்மாழ்வார் இயக்கம் ஒருங்கிணைத்து முன்னெடுத்தது.இந்த போராட்டத்தில் நம் மள்ளப்புரம் ஊராட்சி பகுதியை சார்ந்த ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

என்றும் இயற்கையின் குறளாய் இருப்போம்.

மண் வளமே! மக்கள் வளம்!

#இயற்கை
#கல்குவாரி
#மக்கள்போராட்டம்

13/08/2026

மள்ளப்புரம் ஊராட்சி பழனியப்பா தியேட்டர் பின்புறம் இருக்கின்ற மள்ளப்புரம் காலனி குடியிருப்பு பகுதியில் தெருவிளக்கு ஒரு வாரங்களாக எரிவில்லை? புகார் அடிப்படையில் உடனடியாக சரி செய்து கொடுத்த ஊராட்சி நிர்வாகத்துக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் நன்றி

12/08/2026

ஓனான்க்கரட்டு அருகில் பாபிநாயக்கன்பட்டி மள்ளப்புரம் துள்ளு குட்டி நாயக்கனூர் சூலப்புரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் விவசாய நிலங்கள் இருக்கின்றது இந்த கல்குவாரி செயல்பட்டால் கண்டிப்பாக உங்கள் விவசாய நிலங்கள் பாழ்படும் நீர் நிலையிலும் அடியோடு பாதிக்கப்படும் மேச்சல் நிலங்கள் பாதிக்கப்படும் வனவிலங்குகள் வாழ்விடம் பறவை வாழ்விடமும் பாதிக்கப்படும் ஆகவே இதை கருத்தில் கொண்டு மேற்கண்ட ஊராட்சி சேர்ந்த ஓனான்கரட்டு பெருமாள் மலை சலுப்பான் கரடு அருகில் இருக்கின்ற விவசாயிகள் இதில் ஆதரவாக கலந்து கொள்ள அறிவுறுத்துகிறோம் 🙏🤝

🌿🐘 உலக யானைகள் தினம் – நமது பகுதியின் பொறுப்பு!நமது அய்யம்பூமி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள இயற்கை வளம் ந...
12/08/2026

🌿🐘 உலக யானைகள் தினம் – நமது பகுதியின் பொறுப்பு!

நமது அய்யம்பூமி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள இயற்கை வளம் நிறைந்த பகுதியாகும். நம்மைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளிலும் யானைகள் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வாழ்வதற்கான இயற்கையான சூழல் உள்ளது. யானைகள் ஒரு விலங்கு மட்டுமல்ல; அவை காடுகளின் ஆரோக்கியத்தையும், விதைப் பரவலையும், நீர்நிலைகள் மற்றும் உயிர்ச்சூழலின் சமநிலையையும் பாதுகாக்கும் முக்கியமான உயிரினங்கள். யானைகள் வாழும் காடுகள்தான் வளமான காடுகள்; வளமான காடுகள்தான் நமக்கும் எதிர்கால சந்ததிக்கும் வாழ்வாதாரம். எனவே வனப்பகுதிகளை பாதுகாப்போம், யானைகளின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்காமல் காப்போம், யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்களைத் தவிர்க்க விழிப்புணர்வுடன் செயல்படுவோம். 🐘🌳 யானைகளைப் பாதுகாப்பது இயற்கையைப் பாதுகாப்பது மட்டுமல்ல… நமது எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகும்!

அய்யம்பூமி – மதுரை மாவட்டம்
இயற்கையை நேசிப்போம்… எதிர்காலத்தை பாதுகாப்போம்! 🌿
#உலகயானைகள்தினம் #யானைகளைபாதுகாப்போம் #யானைகள்பாதுகாப்பு #காட்டைபாதுகாப்போம் #இயற்கையைபாதுகாப்போம் #மேற்குதொடர்ச்சிமலை #மேற்குதொடர்ச்சிமலைகள் #வனவிலங்குகள் #வனஉயிரினபாதுகாப்பு #யானைவாழ்விடம் #மனிதயானைமோதல் #இயற்கைபாதுகாப்பு #சுற்றுச்சூழல்பாதுகாப்பு #அய்யம்பூமிமதுரை

11/08/2026

🔥 சதுரகிரி காட்டுத்தீ – இது ஒரு எச்சரிக்கை! 🌳

நாளை ஆடி அமாவாசை 🙏
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியை நோக்கி வரும் நேரத்தில், நம் புனித மலையையும் அதன் இயற்கையையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு.

🕉️ சாமியை தரிசிப்போம்… சதுரகிரியையும் காப்போம்!
🌳 ஒரு சிறிய அலட்சியம், பல ஆண்டுகள் வளர்ந்த காட்டை அழித்துவிடும்.

இந்த விழிப்புணர்வு செய்தியை அதிகமாக பகிருங்கள்.
ஒருவரிடம் சென்றாலும், ஒரு மரம் காப்பாற்றப்படலாம். ❤️🌿

மண் வளமே! மக்கள் வளம் !

#சதுரகிரி #சுந்தரமகாலிங்கம் #ஆடிஅமாவாசை #காட்டுத்தீ #சதுரகிரியை_காப்போம் இயற்கையை_காப்போம் வனப்பாதுகாப்பு மேற்குதொடர்ச்சிமலை பசுமையை_காப்போம் விழிப்புணர்வு Sathuragiri SundaraMahalingam AadiAmavasai SaveSathuragiri SaveForests ForestFire SaveWesternGhats NatureAwareness TamilNadu TamilReels ReelsTamil TamilInstagram

🕉️ சதுரகிரி சுந்தர மகாலிங்கம் – காப்போம் புனித மலையையும், அதன் வனத்தையும் 🌳🔥ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர...
11/08/2026

🕉️ சதுரகிரி சுந்தர மகாலிங்கம் – காப்போம் புனித மலையையும், அதன் வனத்தையும் 🌳🔥
ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க ஆண்டுதோறும் செல்வது வழக்கம். ஆனால் இந்த புனித மலையின் அடையாளம் கோவில் மட்டுமல்ல… அதைச் சுற்றியுள்ள அடர்ந்த மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள், அரிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் நீராதாரங்களும்தான்.
தற்போது சதுரகிரி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், மனிதர்களின் கவனக்குறைவு, தீப்பற்றக்கூடிய பொருட்கள், புகைபிடித்தல், எரியும் பொருட்களை வீசுதல் போன்றவை காட்டுத்தீ பரவுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
🙏 சாமியை தரிசிப்பது மட்டும் பக்தி அல்ல… சாமி வாழும் இயற்கையை பாதுகாப்பதும் பக்திதான்.
🚫 காட்டுப்பகுதியில் புகைபிடிக்க வேண்டாம்.
🚫 தீக்குச்சி, பட்டாசு, எரியும் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.
🚫 உணவு சமைத்தால் நெருப்பு முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.
🚫 பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை வனப்பகுதியில் வீசாதீர்கள்.
🚫 புகை அல்லது தீ தென்பட்டால் உடனடியாக வனத்துறை/அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும்.
🌳 ஒரு சிறிய அலட்சியம் பல ஆண்டுகள் வளர்ந்த காட்டையே அழித்துவிடும்.
“சதுரகிரியை தரிசிப்போம்… சதுரகிரியை காப்போம்!”
“சுந்தர மகாலிங்கத்தின் மலை — நம் தலைமுறைகளுக்காக பாதுகாக்க வேண்டிய இயற்கைச் செல்வம்.” 🙏🌳
#சதுரகிரி #சுந்தரமகாலிங்கம் #ஆடிஅமாவாசை #காட்டுத்தீ #காடுகளை_காப்போம் #மேற்குதொடர்ச்சிமலை #வனப்பாதுகாப்பு #இயற்கையை_காப்போம்

09/08/2026

நமது தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் நம் பகுதி சமூக ஆர்வளர்களாலும், இளைஞர்களாலும், பெரியோர்களாலும் குறிப்பாக நம் பகுதி மக்களின் உதவியுடனுமே நம் பகுதிக்கு தேவையான சமூக செயல்கள் சார்ந்த செய்தியும் , செயல்பாட்டின் தகவல்களையும் பதிவேற்றம் செய்யப்படுகிறது . இதனை யாரும் தனி நபர் விவாதமாகவோ ? அரசியல் பார்வையாகவோ எண்ணி கமெண்டுகளில் வாதம் செய்யும் நோக்கில் பதிவு செய்ய வேண்டாம்.ஏதேனும் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள், வழிகாட்டியாக இருங்கள் என்று #அய்யம்பூமி குழுவினரின் சார்பாக வேண்டிக்கொள்கிறோம். அய்யம்பூமி என்றால் அனைவரையும் உள்ளடக்கியது தான்.

09/08/2026

Address

Peraiyur(TK),Madurai(DT).
Madurai
625535

Telephone

9655437502

Website

Alerts

Be the first to know and let us send you an email when அய்யம்பூமி மதுரை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category