WIM மதுரை வடக்கு மாவட்டம்

  • Home
  • India
  • Madurai
  • WIM மதுரை வடக்கு மாவட்டம்

WIM மதுரை வடக்கு மாவட்டம் பெண்களின் வலிமையே
தேசத்தின் வலிமை....!!

20/07/2026

மதுரை வடக்கு மாவட்டம் கிழக்கு தொகுதி கூட்டம் தலைவர் சையது ஒலியுல்லாஹ் தலைமையில் நடைபெற்றது...

தொகுதி செயலாளர் உத்தங்குடி சிக்கந்தர்
வரவேற்புரை வழங்கினார் ...

துணைத் தலைவர் செல்வக்கனி
தொகுதி அமைப்புச் செயலாளர் மதார் சிக்கந்தர் பொருளாளர் சையது இப்ராஹிம் கிழக்கு ஒன்றிய தலைவர் அப்துல் கரீம்
வர்த்தக அணி மாவட்ட இணைச்செயலாளர் முகமது அலி
நகரத் தலைவர்
ஜாபர் சாதிக்
மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்...

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர்
சீனி சிக்கந்தர்
கல்வியாளரணி மாவட்ட தலைவர் சபியுல்லாஹ்கான்
ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்

கட்சியின் கட்டமைப்பு விரிவாக்கம்
இளைஞர் அணி,
மகளிர் அணி தொழிற்சங்கம்
வர்த்தக அணி, IT WING
வளர்ச்சிப் பணிகள் குறித்தும்

மக்களுக்கான அடிப்படை வசதிகள்,சுகாதாரம் வளர்ச்சிக்கான திட்டங்கள்
அனைத்து பகுதிகளில் கிடைக்கப் பெற்றிட முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள்..

உள்ளாட்சித் தேர்தல்
எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் போட்டியிடும் இடங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

13/07/2026
28/06/2026
28/06/2026

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும்! - எஸ்டிபிஐ

ஒன்றிய அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள புதிய சட்டத் திருத்தம், ஒரு பக்கமிருக்கும் சமத்துவமின்மையைச் சரிசெய்வது போலக் காட்டி, இன்னொரு பக்கம் ஏழை எளிய மக்களுக்குப் புதிய அநீதியை இழைப்பதாக அமைந்துள்ளது. வறுமையில் வாடும் மிக ஏழ்மையான குடிமக்களின் பசியைப் போக்குவதற்குப் பதிலாக, அவர்களுக்குள் இருக்கும் பற்றாக்குறையை மட்டுமே இந்த புதிய திட்டம் பிரித்துக் கொடுக்கிறது. இது "அனைவருக்கும் உணவு" என்ற உன்னத உரிமையைப் பலவீனப்படுத்தும் செயலாகும் என்பதால், இந்தத் திருத்தங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜீத் ஃபைஸி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“இதுவரை "அந்தியோதயா அன்ன யோஜனா" திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு குடும்பத்திற்கு மாதந்தோறும் 35 கிலோ உணவுத் தானியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய திருத்தத்தின்படி, "ஒரு நபருக்கு இவ்வளவுதான்" என்று கணக்கிடப்பட்டு, குடும்பத்திற்கான அதிகபட்ச வரம்பாக அதே 35 கிலோ நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கணவன்-மனைவி என இரண்டு பேர் மட்டும் இருக்கும் முதியவர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறிய தனிக்குடும்பங்களுக்குக் கிடைத்து வந்த உணவுத் தானிய உதவி பாதியாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் வறுமை என்பது அவர்களின் பொருளாதாரப் பின்தங்கிய நிலையை வைத்து முடிவு செய்யப்பட வேண்டுமே தவிர, வெறும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து அல்ல. அரசின் இந்த நடவடிக்கை ஏழைகளுக்கான திட்டத்தின் மிக அடிப்படையான நோக்கத்தையே முற்றிலும் சிதைக்கிறது.

மிக முக்கியமாக, இந்தியாவின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் இருக்கும் உண்மையான சவால்களை இந்தத் திருத்தம் எதிர்கொள்ளத் தவறிவிட்டது. கடந்த பல ஆண்டுகளில் ஏழைகளாக மாறிய கோடிக்கணக்கான தகுதியான மக்களுக்கு இன்னும் ரேஷன் அட்டை கிடைக்காமல் வெளியில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், காலாவதியான 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இன்னும் பயனாளிகள் பட்டியல் நீடிப்பதுதான். இந்த புதிய சட்டம் அந்தப் பெரும் பிழையைச் சரி செய்ய முன்வரவில்லை. அதேபோல, பெரிய குடும்பங்களாக இருந்தாலும் அதிகபட்சம் 35 கிலோதான் தரப்படும் என்ற பிடிவாதமான உச்ச வரம்பையும் மாற்றவில்லை. மேலும், ஏழை மக்களுக்கு வெறும் அரிசி, கோதுமை போன்ற தானியங்களை மட்டும் தராமல், உடம்புக்குச் சத்து தரும் பருப்பு, எண்ணெய் போன்ற பிற ஊட்டச்சத்துப் பொருட்களையும் சேர்த்து வழங்க வேண்டும் என்ற அவசியத்தையும் இந்தச் சட்டம் முற்றிலும் புறக்கணித்துள்ளது.

மக்களாட்சியில் ஓர் அரசின் கடமை என்பது நாட்டில் உணவுப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதும், வறுமையை ஒழிப்பதுமே ஆகும். அதைவிடுத்து, வறுமையில் வாடும் ஏழைகளிடமிருந்தே உணவைப் பறித்து, இன்னொரு ஏழைக்குக் கொடுக்கும் ஒரு மோசமான செயலாகவே இந்த புதிய திருத்தம் அமையும். எனவே, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தாண்டி, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு 35 கிலோ உணவுத் தானிய உரிமை எவ்விதக் குறைப்புமின்றி தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். உடனடியாக தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் புதிய பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விடுபட்ட கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்குப் புதிய ரேஷன் அட்டைகளும், ஊட்டச்சத்துப் பொருட்களும் வழங்கப்பட வேண்டும்” என அவர் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார்.

28/06/2026

SDPI கட்சியின் தமிழ்ச்சுடர் விருதுகள் 2026-க்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன!

SDPI கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கடந்த 9 ஆண்டுகளாக உரியவர்களை தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆளுமைகளின் பெயரால் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகின்றது. அதன்படி இந்த ஆண்டும் (2026) சிறந்த ஆளுமைகளுக்கு தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விருதுக்கு தகுதி வாய்ந்தவர்களை பரிந்துரை செய்யக் கூடியவர்கள் 2026, ஜூலை 15 ஆம் தேதிக்குள் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

--------------
விருதுகளும் - தகுதிகளும்

1. கண்ணியமிகு காயிதே மில்லத் விருது - சிறந்த பொது வாழ்விற்கான விருது

2. சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் விருது - ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக பாடுபடுபவர்களுக்கான விருது

3. கல்வித்தந்தை - மெளலானா டாக்டர் அபுல் கலாம் ஆசாத் விருது - கல்விச் சேவைக்கான விருது

4. தந்தை பெரியார் விருது - மனித உரிமை, சமூகநீதி களத்தில் தொடர்ந்து பணியாற்றி வருபவர்களுக்கான விருது

5. பேரறிஞர் அண்ணா விருது - பன்முகத் தன்மை கொண்ட தலைவர்களுகான விருது

6. அறிவுக்கடல் சயீத் சாஹிப் விருது - அரசியல் தளத்தில் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைகளுக்காக போராடும் எஸ்டிபிஐ செயல்வீரருக்கான விருது

7. கவி. கா. மு. ஷெரீப் விருது - தமிழ், இலக்கியம்-எழுத்து-வரலாறு- இவைகளில் சிறந்து விளங்குவதற்கான விருது

8. புரட்சியாளர் டாக்டர் பழனி பாபா விருது - பாசிச அடக்குமுறைக்கு எதிராக களம் கண்டவர்களுக்கான விருது

9. வணிக மேதை B.S.A.அப்துர் ரஹ்மான் விருது - சிறந்த தொழில் துறை சேவைக்கான விருது

10. அன்னை தெரசா விருது - சமூக சேவைக்கான விருது

--------------

தங்கள் பரிந்துரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

SDPI விருது தேர்வுக்குழு 2026
SDPI கட்சி தலைமை அலுவலகம்
4 / 7, இப்ராஹிம் சாஹிப் தெரு,
மண்ணடி, சென்னை - 600 001

தொலைப்பேசி: 044 25230136
வாட்ஸ்அப் : 93810 40078

இப்படிக்கு

-அச.உமர் பாரூக்,
விருது தேர்வுக்குழு தலைவர்,
மாநில துணைத் தலைவர்,
SDPI கட்சி, தமிழ்நாடு

| | ிருதுகள்2026
ிழ்ச்சுடர் | #தமிழ்ச்சுடர்விருது2026
|
|

| |
#தமிழ்ச்சுடர் | #விருதுகள் |

28/06/2026

இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்களுக்கான பிசி.எம் தகுதி அரசாணை ரத்து: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய எஸ்டிபிஐ வலியுறுத்தல்!

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பிலிருந்து இஸ்லாமிற்கு மாறியவர்களுக்கு 'பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்' (BCM) சான்றிதழும், அதன்படியான இடஒதுக்கீடு பலன்களும் வழங்க வழிவகை செய்து, கடந்த திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க 2024-ஆம் ஆண்டு அரசாணை எண் 31-ஐ, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் தீர்ப்பு சமூக நீதிக் கோட்பாட்டிற்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் நீண்டகால உரிமைகளுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகும்.

மதமாற்றத்தின் மூலம் ஒருவருடைய ஆன்மீக நம்பிக்கை மாறலாமே தவிர, அவர் பிறப்பால் எதிர்கொண்ட சமூக மற்றும் கல்வி ரீதியிலான பின்தங்கிய நிலை ஒரே நாளில் மாறிவிடுவதில்லை. இந்த எதார்த்தமான சமூக நீதிக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் விரிவான பரிந்துரைகளின் பேரிலுமே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கமே சமூக, கல்விப் பின்தங்கிய நிலையைப் போக்குவதுதான் என்பதைத் தாண்டி, மதக் கோட்பாடுகளை மட்டுமே பிரதானமாக வைத்து நீதிமன்றம் இந்த விவகாரத்தை அணுகியுள்ளது. இது, நீதிமன்றம் சமூக நீதிக் கண்ணோட்டத்தைக் கவனிக்கத் தவறியதையே காட்டுகிறது.

மதமாற்ற உரிமை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். ஆனால், மதம் மாறிய ஒரே காரணத்திற்காக ஒருவர் அனுபவித்து வந்த இடஒதுக்கீட்டுப் பாதுகாப்பைப் பறிப்பது என்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் சிவில் உரிமைகள் மற்றும் சமூக நீதி அரசியலின் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலாகும்.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் உடனடியாக ஆஜராக வேண்டும் என நீதியரசர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில், அவர் நேரில் ஆஜராகி குறிப்பிட்ட இந்த அரசாணை குறித்து தெளிவாக நீதிமன்றத்தில் விளக்கிய போதும், நீதியரசர்கள் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளனர். சமூகநீதி நலன் சார்ந்த வழக்குகளில், அண்மைக்காலமாக நீதிமன்றங்களின் இத்தகைய மிகக் கடுமையான சட்டப் பார்வைகளும், கோட்பாட்டு அணுகுமுறைகளும், எதார்த்தமான சமூகப் பின்னணிகளை விட, மாற்றுப் பார்வைகளின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு, சமூக நீதியைக் காக்கும் பொருட்டு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். சிறந்த மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையையும், அரசாணை எண் 31-ன் சட்டப்பூர்வ தன்மையையும் நிலைநாட்ட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

💚❤SDPI கட்சி மதுரை வடக்கு மாவட்டம் 💚❤மகளிர் அணி (WIM) மாவட்ட செயற்குழு கூட்டம் (27-06-2026) நடைபெற்றது. *மாவட்ட தலைவர் க...
28/06/2026

💚❤SDPI கட்சி மதுரை வடக்கு மாவட்டம் 💚❤மகளிர் அணி (WIM) மாவட்ட செயற்குழு கூட்டம் (27-06-2026) நடைபெற்றது.

*மாவட்ட தலைவர் கதீஜா* தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமை உரையாற்றினார்.

*மாவட்ட பொதுச் செயலாளர் சையது அலி பாத்திமா* வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில் *மாவட்ட துணைத்தலைவர் பரக்கத் பானு, மாவட்ட செயலாளர்கள் நிலவர் நிஷா, ஷகிலா பேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரிஸ்வானா* ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு அழைப்பாளராக *SDPI கட்சி வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன்* கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

1.கிளை வாரியாக தேர்தல் நடத்தி அடுத்த மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும்.
2.கட்சியில் அதிகப்படியான உறுப்பினர்களை இணைக்க வேண்டும்.
3.செயல்படாத கிளைகளுக்கு நேரில் சென்று நிர்வாகிகளை சந்தித்து மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.
4.தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற கண்டனத்தோடு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தின் இறுதியாக மாவட்ட துணைத் தலைவர் பரக்கத் பானு நன்றி உரையாற்றினார்.

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when WIM மதுரை வடக்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share