21/06/2026
ஜூன் 21 - SDPI கட்சியின் 18-வது துவக்க தினம்!
அன்பார்ந்த SDPI கட்சியின் நெஞ்சமர்ந்த உறவுகள், தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும், நமது பேரியக்கத்தின் உதய தின (ஜூன் 21) நல்வாழ்த்துகளை உளமாறத் தெரிவித்துக் கொள்கிறேன்!
SDPI கட்சியின் கடந்து வந்த 17 ஆண்டு கால வரலாறு என்பது, கொள்கை அடிப்படையிலான அசைக்க முடியாத மக்கள் போராட்டங்களின் உன்னத அடையாளமாகும். இந்தப் பயணத்தில், அடித்தட்டு மக்களை ஓரணியில் திரட்டி, சமரசமற்ற அரசியல் களத்தில் புதிய பரிமாணங்களை உருவாக்கி, இந்திய அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது நமது கட்சியின் தனித்துவமாகும். புதுமையான செயல்திட்டங்கள், புரட்சிகரமான சிந்தனைகள் மற்றும் தூய்மையான மாற்று அரசியல் அணுகுமுறையால், SDPI கட்சி இன்று ஒட்டுமொத்த மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
சாமானிய மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டுணர்ந்து, அவற்றை ஆள்வோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பொருட்டு, “பசியிலிருந்து விடுதலை - பயத்திலிருந்து விடுதலை” எனும் புரட்சிகர கொள்கை முழக்கங்களை தேசமெங்கும் ஓங்கியொலித்த இயக்கம் நமது இயக்கமாகும். "Our politics is for a cause, not for a career" என்ற வரிகளுக்கு ஏற்ப, SDPI கட்சியின் அரசியல் என்பது சுய ஆதாயங்களுக்கானது அல்ல; மாறாக, அது குடிமக்களின் பசியையும் பயத்தையும் போக்கி, உண்மையான ஜனநாயக அரசியலை நோக்கி மக்களை அணிதிரளச் செய்யும் உன்னத இலட்சியத்தைக் கொண்டது.
சமூக நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கான அறப்போராட்டங்களில் SDPI கட்சி எப்போதும் முன்னணியில் நின்று களம் காணும் என்பதை இந்த நன்னாளில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சியின் இந்த 17 ஆண்டு கால வரலாற்றுப் பயணத்தில், தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருந்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
மக்களுக்காக, மக்களால் இயங்கும் இந்த பேரியக்கம், என்றென்றும் வென்று நடைபோடும்!
-முகம்மது முபாரக் M.A.,
தலைவர், SDPI கட்சி - தமிழ்நாடு.
| |
|
|