SDPI Mayiladuthurai

SDPI Mayiladuthurai சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மயிலாடுதுறை மாவட்டம் அதிகாரபூர்வ முகநூல் பக்கம்.

21/08/2026
புதுச்சேரி மாநிலத்தின் புதிய தலைவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!புதுச்சேரி மாநிலத்தின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்ப...
21/08/2026

புதுச்சேரி மாநிலத்தின் புதிய தலைவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

புதுச்சேரி மாநிலத்தின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள
#சகோதரர்_MYS_H_முஹம்மது_பிலால் அவர்களுக்கு SDPI கட்சி மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அவரது தலைமையில் புதுச்சேரி மாநிலத்தில் கட்சியின் செயல்பாடுகள் மேலும் வலுப்பெற்று, மக்கள் நலப் பணிகள் சிறப்புடன் தொடர்ந்திடவும், அவர் தமது பொறுப்பில் மென்மேலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளைப் பெற்றிடவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

SDPI கட்சி
மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு! பொதுமக்களின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்ய SDPI ...
20/08/2026

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு! பொதுமக்களின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்ய SDPI கட்சி வலியுறுத்தல்!

-இது குறித்து SDPI கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் முஹம்மது ரஃபி அவர்கள் கூறுவதாவது..!

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் கடந்த சில வாரங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் வெறும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பல பல ஆண்டுகளாக விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் போதிய மழை இல்லாததாலும் வெகுவாக குறைந்துள்ளது. தினசரி வெறும் 10 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வருவதால், ஏழை எளிய மக்கள் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் அன்றாட சமையல் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக தங்கள் சொற்ப வருமானத்திலிருந்து பணம் கொடுத்து தனியார் குடிநீர் கேன்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் மேடான பகுதிகளுக்கு வழக்கமாக விநியோகிக்கப்பட்டு வந்த டேங்கர் லாரி குடிநீர் சேவையும் அவ்வப்போது நிறுத்தப்படுவதாக தெரிய வருகிறது. ஆகவே பொதுமக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்கத் தவறிய நகராட்சி நிர்வாகத்தை SDPI கண்டிக்கின்றது.

பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும்,குடிநீர் தட்டுப்பாடு தீவிரமாக உள்ள பகுதிகளில் தடையின்றி டேங்கர் லாரிகள் மூலம் போதிய அளவு குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும். கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய்களை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்று இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெளியீடு :-
SDPI கட்சி
தகவல் தொழில்நுட்ப அணி (IT WING)
மயிலாடுதுறை மாவட்டம்.

SDPI கட்சியின் தேசிய தலைவர் M.K.ஃபைஸி அவர்கள் பங்கேற்கும், SDPI தமிழ்நாடு state Leader's Conclave (தலைவர்கள் சங்கமம்) நி...
15/08/2026

SDPI கட்சியின் தேசிய தலைவர் M.K.ஃபைஸி அவர்கள் பங்கேற்கும்,
SDPI தமிழ்நாடு state Leader's Conclave (தலைவர்கள் சங்கமம்) நிகழ்ச்சி

📅 நாள்: ஆகஸ்ட் 29, 2026 (சனிக்கிழமை)

⏰ நேரம்: காலை 10.00 மணி

📍 இடம்: புதுக்கோட்டை

கட்சியின் மாவட்ட தொகுதி நகர கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது ...!

SDPI கட்சி
சோசியல் டெமாக்ரடிக்
பார்ட்டி ஆஃப் இந்தியா
மயிலாடுதுறை மாவட்டம்.

 #வர்த்தகர்_அணியின்_சார்பாக #இந்திய_சுதந்திர_தின  #நல்வாழ்த்துக்கள்!இந்திய திருநாட்டின் 80_வது சுதந்திர தின நல்வாழ்த்துக...
14/08/2026

#வர்த்தகர்_அணியின்_சார்பாக
#இந்திய_சுதந்திர_தின
#நல்வாழ்த்துக்கள்!

இந்திய திருநாட்டின் 80_வது சுதந்திர தின நல்வாழ்த்துகளை,நாட்டு மக்களுக்கும், வணிகர்களுக்கும் கட்சி #வர்த்தகர்_அணியின் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைந்து போராடி, தியாகங்களின் மூலம் பெற்ற சுதந்திரத்தை போற்றுவோம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முக்கிய பங்காற்றும் வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோரின் பங்களிப்பை நினைவுகூர்வோம்!

சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும்,அரசியலமைப்பின் மாண்புகளையும் பாதுகாப்போம்!

#ஒற்றுமையுடன்_வளர்வோம்!
#சுதந்திரத்தை_காப்போம்!

ுருஹானுதீன்
மாவட்டத் தலைவர்,
SDPI கட்சி | வர்த்தகர் அணி, மயிலாடுதுறை மாவட்டம்.

 #இந்திய_திருநாட்டின்_80_வது  #சுதந்திர_தின_நல்வாழ்த்துக்கள்!SDPI கட்சி மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக கட்சியின் நிர்வாகிக...
14/08/2026

#இந்திய_திருநாட்டின்_80_வது
#சுதந்திர_தின_நல்வாழ்த்துக்கள்!

SDPI கட்சி மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக கட்சியின் நிர்வாகிகள்,செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்தியாவின் 80_வது சுதந்திர தின வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சியில் உரிமைகளையும் சுதந்திரத்தையும் இழந்து தவித்த நம் தேசத்திற்காக, தங்கள் உயிரையும் உடைமைகளையும் தியாகம் செய்து போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை இந்நாளில் நன்றியுடன் நினைவு கூர்வோம்! அவர்களின் தியாகத்தால் பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்து, சமத்துவமும்,சம நீதியும் நிறைந்த இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்!

#சுதந்திரத்தை_போற்றுவோம்!
#தியாகிகளை_நினைவு_கூர்வோம்!

வாழ்த்துக்களுடன்...!
ுஹம்மது_ரஃபி
மாவட்டத் தலைவர், SDPI கட்சி
மயிலாடுதுறை மாவட்டம்.

#இந்தியசுதந்திரதினம் #சுதந்திரதினவாழ்த்துக்கள்
#80வது_சுதந்திரதினம்
#சுதந்திரப்போராட்டவீரர்கள்
#தியாகிகளைநினைவுகூர்வோம்
#சுதந்திரத்தைபோற்றுவோம்
#சமத்துவம் #சமூகநீதி
#ஜனநாயகம்
ிழ்நாடு ிலாடுதுறை
ிலாடுதுறை_மாவட்டம்

பசியிலிருந்து விடுதலை!பயத்திலிருந்து விடுதலை!!SDPI கட்சியின் சீர்காழி சட்டமன்றத் தொகுதி மணிக்கிராமம் கிளைத் தலைவர் A.ஹஜ்...
13/08/2026

பசியிலிருந்து விடுதலை!
பயத்திலிருந்து விடுதலை!!

SDPI கட்சியின் சீர்காழி சட்டமன்றத் தொகுதி மணிக்கிராமம் கிளைத் தலைவர் A.ஹஜ்ஜி முஹம்மது அவர்களின் இல்ல திருமண விழா இன்று (13.08.26 வியாழக்கிழமை) மணிக்கிராமம் ஜாமியா மஸ்ஜிதில் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அவர்கள் கலந்து கொண்டு, H. அஸ்மா பர்வீன் / H.முஹம்மது உசைபா ஆகிய மணமக்களை வாழ்த்தினார்.

நடைபெற்ற திருமண விழாவில் SDPI கட்சி மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் முஹம்மது ரஃபி, மாவட்டச் செயலாளர் முஹம்மது ரவூப் மாவட்டப் பொருளாளர் அப்துல் காதர்,வர்த்தகர் அணி மாவட்டத் தலைவர் புருஹானுதீன், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி தலைவர் சம்சுதீன், சீர்காழி சட்டமன்றத் தொகுதி தலைவர் சகாபுதீன் செயலாளர் சபீர்தீன், விமன்ஸ் இந்தியா மூவ்மெண்டின் மயிலாடுதுறை மாவட்ட பொதுச் செயலாளர் சலீமா, மணிக்கிராமம் கிளை நிர்வாகிகள் செயல் வீரர்கள், உறவினர்கள், ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வெளியீடு :-
SDPI கட்சி I சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, தகவல் தொழில்நுட்ப அணி (IT WING) மயிலாடுதுறை மாவட்டம்.

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!!SDPI கட்சியின் சீர்காழி சட்டமன்றத் தொகுதி மணிக்கிராமம் கிளைத் தலைவர் A.ஹஜ...
12/08/2026

பசியிலிருந்து விடுதலை!
பயத்திலிருந்து விடுதலை!!

SDPI கட்சியின் சீர்காழி சட்டமன்றத் தொகுதி மணிக்கிராமம் கிளைத் தலைவர் A.ஹஜ்ஜி முஹம்மது அவர்களின் மகளார் H. அஸ்மா பர்வீன் / H.முஹம்மது உசைபா ஆகியோரின் திருமண விழாவிற்கு வருகை தரும் மாநிலப் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அவர்களையும், மண்டல, மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவரையும் அன்புடன் வருக! வருக! என வரவேற்கிறது.

நாள் :- 13.08.26 வியாழக்கிழமை,
காலை 11 மணி, இடம் :- ஜாமியா மஸ்ஜித்,மணிக்கிராமம்.

SDPI கட்சி I சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, மணிக்கிராமம் கிளை, சீர்காழி சட்டமன்ற தொகுதி, மயிலாடுதுறை மாவட்டம்.

12/08/2026

Address

Pattamangalam Street
Mayiladuthurai
609001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Mayiladuthurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share