DYFI Kurunthencode Panchayat

DYFI Kurunthencode Panchayat இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI

30/10/2023
26/09/2021

பிஎம் கேர்ஸ் நிதியம் அரசாங் கத்துக்குச் சொந்தமில்லாதபோது, அதற்கு நிதியளியுங்கள் என்று அர சின் பல்வேறு துறைகள் ஏன் கோரு கின்றன என்று ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி யுள்ளன. அதுமட்டுமல்லாமல் பிஎம் கேர்ஸ்நிதி குறித்து வெளிப்படைத் தன்மை இருப்பது அவசியம், அரசு ஊழியர்களை ஏன் நிதியளிக்கக் கோருகிறார்கள், அரசின் இணைய தளங்களும் நிதியளிக்க விளம்பரம் ஏன் செய்கின்றன என்றும் அவை வினவுகின்றன. பிஎம் கேர்ஸ் நிதியம் குறித்த வழக்கில் கடந்த வாரம் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், பிஎம் கேர்ஸ் ஒன்றிய அரசுக்கு சொந்தமா னது அல்ல எனத் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்வி்களை எழுப்பி வரு கின்றன. அரசின் செலவினத்துறை, நிதித் துறை, அரசி்ன் அதிகாரப்பூர்வ போர்டல்கள் அனைத்திலும் இன் னும் பிஎம் கேர்ஸுக்கு நன்கொடை அளியுங்கள் என விளம்பரம் வெளி யிடப்பட்டு வருகிறது. இந்த அர சின் இணையதளங்கள் india.gov.in அதிகாரப்பூர்வ இணைய தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு நன் கொடை வழங்கிடுங்கள் என கடந்த ஆண்டு மார்ச் மாதம் விளம்பரம் செய்யப்பட்டு இன்னும் அது தொடர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு ஊழி யர்களும் தங்களின் ஒருநாள் ஊதி யத்தை பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு கொரோனா நன்கொடை வழங்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு அறி வுறுத்தியது. இது தொடர்பாக 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி ஒன்றிய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா அனைத்து அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறு வனங்கள் செயலாளர்கள் ஆகியோ ருக்கு கடிதம் எழுதி அரசு ஊழி யர்கள் நன்கொடை வழங்கிடக் கோரி யிருந்தார். இது தொடர்பாக 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டமைப் பும், பிஎம் கேர்ஸ்நிதியத்துக்கு நன் கொடை வழங்க ஆதரவு தெரிவிப்ப தாகத் ட்விட்டில் தெரிவித்திருந்தது.

அதிகாரிகள் நழுவல்

ஒன்றிய அரசின் மூத்த அதிகாரி கள் இருவர் கூறுகையில் ஊழியர்கள் தாமாக முன்வந்து நன்கொடை வழங்க அமைச்சகங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன. ஆனால், பிஎம் கேர்ஸ் நிதியம் அரசாங்கத்துக்கு சொந்தமானது அல்ல என்று அப்போது தெரியாது எனத் தெரி வித்தனர். தில்லி உயர் நீதிமன்றத்தில் பிரத மர் அலுவலகத்தில் இணைச் செய லாளர் தாக்கல் செய்த பிரமாணத்தி ரத்தில் பிஎம் கேர்ஸ் நிதியம் அரசாங் கத்துக்கு சொந்தமானது அல்ல என அறிவித்தபின் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சனையை மீண்டும் கை யில் எடுத்துள்ளன.

சீத்தாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி ட்விட்டரில், 2020 ஏப்ரல் மாதம் ஒன்றிய அரசு அறிவிப்பில் 2021 மார்ச் மாதம் வரை அரசு ஊழி யர்கள் தங்கள் ஊதியத்தில் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்தி ருந்தது. பிஎம் கேர்ஸ் நிதி அர சாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல என்றால், எதற்காக அந்த உத்த ரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

பிஎம் கேர்ஸ் கொள்ளையை நிறுத்துங்கள்

இந்த மோசடி, கொள்ளை நிறுத் தப்பட வேண்டும், அதில் உள்ள நிதி அனைத்தும் தணிக்கை செய்யப் பட்டு கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

து.ராஜா

சிபிஐ பொதுச் செயலாளர் து. ராஜா கூறுகையில், “கடந்த காலத் தில், நாடாளுமன்றத்தின் உள்ளே யும், வெளியேயும் பிஎம் கேர்ஸ் நிதி குறித்து கேள்விகள் எழுந்தன. பிரத மரின் தனிப்பட்ட நிதியி்ல்லை, தனி யார் நிதியில்லை, கட்சியின் நிதியும் இல்லை. மக்கள் பங்களிப்பால் உரு வான நிதி. இந்த நிதியத்துக்கு பங்களிப்புச் செய்தவர்கள் அனை வரின் பெயரை வெளியிடுவதும், எவ்வாறு செலவிடப்பட்டது என் பதை தெரிவிப்பதும்தான் வெளிப்ப டைத்தன்மையாகும்” என்றார்.

நகைச்சுவை செய்கிறதா அரசு?

காங்கிரஸ் மூத்த தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறாடாவுமான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் ஒரு நிதியம் பிரதம ருக்காக, பிரதமரால், பிரதமரே நிர்வாகிக்கப்படுகிறது. நிதியத்திற்கு பிரதமர் பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் அது அரசின் நிதி அல்ல. என்ன நகைச்சுவை எனக் கூறியுள்ளார்.

தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்

பிஎம் கேர்ஸ் நிதியை ஏன் இந்தி யத் தலைமைக் கணக்குத் தணிக்கை யாளர் தணிக்கைக்கு உட்படுத்த முடி யாது என்பது புரிந்துகொள்ள முடியா மல் இருக்கிறது. அரசாங்கத்தின் சொந்த உரிமைகோரல் உண்மை யாக இருந்தால் நிதியத்தில் வெளிப் படைத்தன்மையை கடைப்பிடிக்கி றதா? இந்த நிதி எங்கிருந்து வந்தது? எவ்வாறு செலவிடப்படுகிறது என் பது விடைதெரியாமல் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

20/09/2021

மக்கள் விரோத, விவசாய விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை அமுல்படுத்தும்
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசிற்க்கு எதிராக மக்கள் விசாரணை மன்றம் CPIM Kanyakumari முகநூல் பக்கத்தில் இன்று நேரலை செய்யப்படும்

26/07/2021
குருந்தன்கோடு சந்திப்பில் பெட்ரோல் சமையல்எரிவாய்வு விலை உயர்வை கண்டித்து, தோழா் செல்வன் அவா்கள் தலைமையில் ஆர்ப்பட்டம் 3/...
04/07/2021

குருந்தன்கோடு சந்திப்பில் பெட்ரோல் சமையல்எரிவாய்வு விலை உயர்வை கண்டித்து, தோழா் செல்வன் அவா்கள் தலைமையில் ஆர்ப்பட்டம் 3/7/21 அன்று மாலை 5,30 !மணிக்கு நடைபெற்றது. தோழா் விஜயகுமாா், உட்பட தோழா்கள் கலந்து கொண்டாா்கள் கோரிக்கையை விளக்கி தோழா் ஆறுமுகம்பிள்ளை பேசினாா்.

21/05/2021

இன்று அதிகாலை எனது தொலைபேசிக்கு வந்த அழைப்பில்...
DYFI அகில இந்திய தலைவரும், கேரளா அமைச்சருமான தோழர்.PA.முகம்மதுரியாஸ் என்னுடன் பேச சொன்னதாக கோழிக்கோடு மாவட்ட கோவிட் தடுப்பு சிறப்பு அதிகாரி அனீஷ்IAS அவர்கள் பேசினார். சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லஷ்மி என்கிற கோவிட் நோயாளிக்கு ஆக்சிஜன் வேண்டும். உங்களால் ஏற்பாடு செய்ய முடியுமா? என கேட்டார். அதற்கு நான் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் ஆய்வுக்கு வரும் நிகழ்ச்சிகள் உள்ளது. அதிகாரிகள் அதில் கவனம் செலுத்தி கொண்டு பிஸியாக இருப்பார்கள், இருந்தாலும் முயற்சிக்கிறேன் என்றேன்.
உடனே அவர் "முடிந்தால் பாருங்க, இல்லாவிட்டால் கொழிக்கோடு அனுப்பிவைங்க, நாங்கள் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறோம்" என்றார்.
நீங்க நோயாளியின் தொலைபேசி எண் கேட்டேன் கொடுத்தார். உடனே நாம் தலையிட்டு சேலத்தில் உள்ள மருத்துவ அதிகாரிகளிடம் பேசி சம்ந்தப்பட்ட லஷ்மி அவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டோம்.
அப்போது இந்த விவகாரம் எப்படி தோழர்.முகம்மதுரியாஸ் அவர்களிடம் சென்றது என விசாரித்தபோது நமக்கு தெரியவந்தது; கேரளா கோழிக்கோடு மாவட்டம் பேப்பூர் தொகுதியில் வசிக்கும் ஒரு பெண்மணி அத்தொகுதி MLA ரியாஸ் அவர்களுக்கு போன் செய்து எனது சகோதிரி லஷ்மி தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். உடனே தோழர்.ரியாஸ் தரையிட்டு அனீஷ் என்கிற IAS அதிகாரியிடம் சொல்லி தலையிட்டுள்ளார்.
(இன்று மாலைதான் தோழர்.ரியாஸ் பொதுப்பணி மற்றும் சுற்றுலா துறை அமைச்சராக பதிவியேற்றுள்ளார் என்பது கவனத்தில் கொள்க)
, ....
P A Muhammad Riyas DYFI Kerala

Address

Kurunthencode
Nagercoil
629802

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Kurunthencode Panchayat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share