Nagercoil City Municipal Corporation

Nagercoil City Municipal Corporation OFFICIAL PAGE OF NAGERCOIL CORPORATION OFFICE

நாகர்கோவில் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்களிடையே விழிப்புண...
24/08/2026

நாகர்கோவில் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக.மாநகரம் முழுவதும் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கப்பட்டு, கடைகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்றைய தினம் கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பில் விழிப்புணர்வு விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட்டு ,கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஓட்டும் நடவடிக்கையை வணக்கத்துக்குரிய மேயர்( பொ) திருமதி.மேரி பிரின்சி லதா அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் திருமதி . இரா. ஐஷ்வர்யா இ.ஆ.ப ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

எனவே கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே துணிப்பைகளை கொண்டு வருவதற்கு கடை உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பொதுமக்களும் கடைகளுக்குப் பொருட்கள் வாங்கச் செல்லும்போது, வீட்டிலிருந்தே துணிப்பைகளை எடுத்துச் சென்று பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள நுண் உர செயலாக்க மையங்கள் மூலமாக இயற்கை உரம் விற்பனை நடைபெற்று வருகிறது 5 கிலோ அட...
21/08/2026

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள நுண் உர செயலாக்க மையங்கள் மூலமாக இயற்கை உரம் விற்பனை நடைபெற்று வருகிறது

5 கிலோ அடங்கிய பை ரூபாய் :30 என்று விற்பனை செய்யப்படுகிறது.

தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தில் வாங்கிக் கொள்ளலாம்

நகர பசுமையாக்கும் ( Urban Greening ) திட்டத்தின் கீழ் மாநகர பகுதிகளில் உள்ள பூங்காக்கள், சாலையோரங்கள் மற்றும் அரசு பள்ளி...
18/08/2026

நகர பசுமையாக்கும் ( Urban Greening ) திட்டத்தின் கீழ் மாநகர பகுதிகளில் உள்ள பூங்காக்கள், சாலையோரங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன .

இதன் தொடர்ச்சியாக மாநகரை அழகுப்படுத்தும் வண்ணம் மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள ரவுண்டானாக்கள், சென்டர் மீடியங்களை அழகுப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அதன்படி வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள சென்டர்மீடியன் சீரமைக்கப்பட்டு, கண்கவர் ஓவியங்கள் வரைந்து புதிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

80-வது  #சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் வணக்கத...
15/08/2026

80-வது #சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் வணக்கத்துக்குரிய மேயர் (பொ) மற்றும் துணை மேயர் மேரி பிரின்சி லதா அவர்கள் தேசிய கொடியேற்றினார்கள்.
தொடர்ந்து மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு
மாநகராட்சி ஆணையர் திருமதி. இரா.ஐஷ்வர்யா இ.ஆ.ப கேடயம் மற்றும் நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள்

நிகழ்வில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விஜய் வசந்த் அவர்கள்.
மண்டல தலைவர்கள் ,மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

நாகர்கோவில்  மாநகராட்சி  பகுதியில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி  பொருட்கள்  பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனை மீற...
12/08/2026

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறி மாநகராட்சி பகுதியில் பயன்படுத்துவதாக புகார்கள் வந்ததை அடுத்து மாநகராட்சி ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாநகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பயன்படுத்திய கடைகளில், நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது .

நாகர்கோவில் மாநகர பகுதியில் நடைபாதைகள் அல்லது சாலைகளை ஆக்கிரமித்து பதாகைகள் வைத்து இருந்தால் மாநகராட்சி whatsapp எண்ணில்...
11/08/2026

நாகர்கோவில் மாநகர பகுதியில் நடைபாதைகள் அல்லது சாலைகளை ஆக்கிரமித்து பதாகைகள் வைத்து இருந்தால் மாநகராட்சி whatsapp எண்ணில் புகார் அனுப்பலாம்.

இரண்டாவது கட்டமாக நாகர்கோவில் மாநகர பகுதிகளில் உள்ள செல்லப் பிராணிகள் மட்டும் சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும்...
08/08/2026

இரண்டாவது கட்டமாக நாகர்கோவில் மாநகர பகுதிகளில் உள்ள செல்லப் பிராணிகள் மட்டும் சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் முகாம் இன்றைய தினம் எறும்புகாடு அரசு கால்நடை மருந்தகத்தில் வைத்து நடைபெறுகிறது.

பொதுமக்கள் இதனை பயன்படுத்தி தங்கள் வீடுகளில் உள்ள செல்ல பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசியினை போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளில் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பவர்களின் கடைகள் மாநகராட்சி ஆண...
07/08/2026

நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளில் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பவர்களின் கடைகள் மாநகராட்சி ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சீல் வைத்து மூடப்பட்டு வருகின்றன
அதன்படி நேற்றை தினம் ஆம்னி பேருந்து நிலைய கடைகள் மற்றும் கோட்டாறு கூழக்கடை கடைகளில் நிலுவை பாக்கி இருந்த கடைகள் சீல் வைத்து மூடப்பட்டது.

 #நாகர்கோவில் மாநகர பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் பயன்பாட்டிற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.மாந...
04/08/2026

#நாகர்கோவில் மாநகர பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் பயன்பாட்டிற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகளை மறைத்து வைத்து விற்பனை செய்த கடைகளில் , சோதனை மேற்கொண்டு நெகிழி பைகள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Address

Nagercoil
Nagercoil
629001

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when Nagercoil City Municipal Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share