Tamizhaga Muslim Jama'ath - TMJ SSF SBS

Tamizhaga Muslim Jama'ath - TMJ SSF SBS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamizhaga Muslim Jama'ath - TMJ SSF SBS, Parrys, Parrys.

National Based Sunnath Jama-ath Social Activity Organization under All India Sunni Jammiyyathul Ulama

TMJ - Tamizhaga Muslim Jama'ath
SSF - Sunnath Jama'ath Student's Federation
SBS - Sunnath Jama'ath Balar Sangam

ரபிஉல் அவ்வல் பிறை தென்பட்டது
24/08/2025

ரபிஉல் அவ்வல் பிறை தென்பட்டது

15/08/2025

🌿 26ஆம் ஆண்டின் வளர்ச்சிப் பாதையில் – சமூக நன்மைக்கான உறுதியான நடை 🌿

அஸ்ஸலாமு அலைைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு…

அல்லாஹ்வின் பேரருளாலும், கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் துஆ பரக்கத்தினாலும், நல்லோர்கள்–நாதாக்களின் பாக்கியமான நல்லாசியாலும், நமது சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு – SSF இந்திய அளவில் தொடங்கி 52 ஆண்டுகளாக பல மாநிலங்களில் ஆலமரமாக கிளைகளை விரித்து, சமூக மேம்பாட்டின் பல துறைகளிலும் *இந்தியாவின் கிராண்ட் முஃப்தி சுல்தானுல் உலமா ஷைகுனா AP அபூபக்கர் பாகவி உஸ்தாத்* அவர்களின் சீறிய தலைமையிலும், பணியாற்றி வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே...

இப்பயணம், தமிழகத்தில் (கோவையில்) கண்ணியத்திற்குரிய KT தாஹிர் ஸக்காஃபி அவர்களின் பெரும் முயற்சியால் மரியாதைக்குரிய அல்ஹாஜ் N. அப்துல் ஹக்கீம் இம்தாதி ஹளரத் அவர்களின் பொற்கரங்களால், அதிகாரப்பூர்வமாக அடியெடுத்து வைத்த தினம் ஆகஸ்ட் 15.

இன்று, அதன் வளர்ச்சி வெளிப்பாடாக தாய் அமைப்பான தமிழக முஸ்லிம் ஜமாஅத் – TMJ (இளைஞர் மற்றும் பெரியவர்களுக்கான அமைப்பு) அழகிய நபி வழி தோன்றல் செய்யது அப்துல் ரஹ்மான் பாகவி அஹ்ஸனி தங்கள் அவர்களின் தலைமையில் உருவாகி,

அஹ்லுஸ்ஸுன்னத்தி வல்ஜமாஅத் கொள்கைகளை பின்பற்றுதல், (To follow the ideology of ahlussunnathi val jama-ath)

தேச ஒற்றுமைக்கும் சமூக மேம்பாட்டிற்கும் பாடுபடுதல், (To extend the national integration and social)

மத நல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தை காத்தல் (Harmony to respect and save the humanity)

என்ற தாரக மந்திரத்துடன், தமிழகத்தின் பல மாவட்டங்களில் திறம்படச் செயல்பட்டு வருகிறது.

இதன் கிளை அமைப்புகளாக,

சுன்னத் ஜமாஅத் ஜம்இய்யத்துல் முஅல்லிமீன் – SJM (ஆசிரியர்கள் சங்கம்): இந்திய இஸ்லாமிய கல்வி வாரியத்தின் பாடத்திட்டங்களை அனைத்து மதரஸா மாணவர்களிடம் கொண்டு சேர்த்தல்.

சுன்னத் ஜமாஅத் பாலர் சங்கம் – SBS (சிறுவர்கள் மன்றம்): சிறுவயதிலிருந்தே ஒழுக்க நெறி, பொதுநல சிந்தனை, கூட்டமைப்பின் அவசியம் ஆகியவற்றை விதைத்தல்.

அல்ஹம்துலில்லாஹ்!
தனது 26ஆம் ஆண்டின் துவங்கும் இந்நன்னாளில், நமது இந்திய தேச சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும், நம் அமைப்பின் காலம் சென்ற தலைவர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் நினைவுகூர்ந்து, அவர்களுக்கும், அவர்கள் பின் துணை நின்ற குடும்பத்தார்களுக்கும் பிரார்த்தனை செய்வோமாக...

எல்லாம் வல்ல அல்லாஹ், இனியும் பல்லாண்டுகள் அவர்களின் வழியில் உறுதியோடு நின்று, எதிர்வரும் சவால்களை சாதனைகளாக மாற்றி, நம் சமூகம் பல்சமய உறவுகளோடு, அவரவர்களுக்கு கொடுத்த சுதந்திரத்தை பேணிக் காத்து, நாட்டை வளர்ச்சி பாதையில் அமைதியோடும், ஒற்றுமையோடும், மனிதநேயத்தோடும், அழைத்து செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!

ஆமீன் யாரப்பல் ஆலமீன்....

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
ஜனாப் S. சபீர் அலி MBA.,
செயலாளர், TMJ தமிழ்நாடு

15/08/2025
07/08/2025

Thamizhaga Muslim Jama'ath - TMJ

Theme Songs... SSF Tamilnadu Sheikh Abubakr Ahmad الشيخ أبوبكر أحمد SSF India TMJ-SSF-Media Coimbatore Sarthangl Thangal Hakkimimdhadhi Hakkimimdhadhi

02/08/2025

THAMIZHAGA MUSLIM JAMA'ATH

THEME SONG
▶️ RELEASING TOMORROW

TMJ - TAMILNADU

27/07/2025

THAMIZHAGA MUSLIM JAMA'ATH

THEME SONG
▶️ 𝙲𝙾𝙼𝙸𝙽𝙶 𝚂𝙾𝙾𝙽

TMJ - TAMILNADU

ஏழை எளிய மக்களின்பசி தீர்த்த 1000 நாட்கள்சென்னை அரசு மருத்துவமனையில் தினமும்காலை உணவு விநியோகம்1000-வது நாள்நிறைவு விழாந...
23/07/2025

ஏழை எளிய மக்களின்
பசி தீர்த்த 1000 நாட்கள்

சென்னை அரசு மருத்துவமனையில் தினமும்
காலை உணவு விநியோகம்

1000-வது நாள்
நிறைவு விழா

நாள் 27-7-2025
ஞாயிற்றுக்கிழமை
மாலை 6-30 முதல்

இடம்
மெஜஸ்டிக் மஹால்,
சிங்கப்பூர் பிளாசா, எக்மோர் சென்னை

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது

தமிழக முஸ்லிம் ஜமாஅத் TMJ
சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு SSF
சென்னை மாவட்டம்

தொடர்புக்கு
9600903222,
9025786313,
9043100693

17/07/2025

25/06/2025

Global Peace Conference @ Calicut Tower



தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் சார்பாக,ஏழை எளிய மாணவர்கள் பயனடையும் வண்ணம் *ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை த...
28/05/2025

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் சார்பாக,
ஏழை எளிய மாணவர்கள் பயனடையும் வண்ணம் *ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில்
கல்வி உதவித்தொகை திட்டம்.

விண்ணப்பிக்க:
https://forms.gle/rRgpGtXa8RD6ndgXA

(அல்லது)

"கல்வி உதவி தொகை திட்டம்"
வக்ஃபு வாரிய தலைமை அலுவலம்.
எண் 1, ஜாஃபர் சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை-600001.

என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

போற்றத்தக்க திறமை இருந்தும் பொருளாதாரத் தடையால் கல்வியை தொடர முடியாத தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மாணவ மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
--
கே நவாஸ்கனி MP
தலைவர் - தமிழ்நாடு வக்ஃபு வாரியம்.

Address

Parrys
Parrys
600001

Alerts

Be the first to know and let us send you an email when Tamizhaga Muslim Jama'ath - TMJ SSF SBS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tamizhaga Muslim Jama'ath - TMJ SSF SBS:

Share