21/08/2026
தென் மாநில முதல்வர்கள் மாநாடு: துணைநிலை ஆளுநர் பங்கேற்பு கூட்டாட்சிக்கு எதிரானது
புதுச்சேரி மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கோவளத்தில் ஆகஸ்ட் 20 வியாழனன்று நடை பெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பங்கேற்றது கூட்டாட்சி முறைக்கு எதிரானது எனக் குற்றம் சாட்டி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழு கடுமையாகக் கண்டித்துள்ளது.
ஆளுநர் பங்கேற்பு ஏன் தவறு?
முதல்வர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டுக்கு ஆளுநர்கள் யாரும் அழைக்கப்படவில்லை; வழக்கமாக மாநிலத்தை முதல்வரே பிரதிநிதித் துவப்படுத்த வேண்டும் என்றிருக்க. வேண்டுமென்றே புதுவை துணை நிலை ஆளுநரும் முதல்வரும் பங்கேற் பதாகவும், ஆளுநரைத் தொடர்ந்து முதல்வர் பேசுவதாகவும் அறிவிக்கப் பட்டது. இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும் கூட்டாட்சி முறைக்கும் எதிரானது என்றும், வாக்களித்த புதுச் சேரி மக்களின் ஜனநாயக உணர்வை புறக்கணிக்கும் மேலாதிக்கப் போக்கின் வெளிப்பாடு என்றும் மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கூட்டணியில் விரிசல்
முதல்வர்கள் மாநாட்டில் ஆளுநருக்கு என்ன வேலை என்று கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கட்சி, இது பா.ஜ.க.என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலின் வெளிப்பாடு என்றும், நிரந்தர சபாநாயகரை இன்னும் தீர்மானிக்காததன் தொடர்ச்சி என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. அதி ருப்தியை வெளிப்படுத்திய முதல்வர் என். ரங்கசாமியின் நிலைப்பாடு நியாய மானது என்று கூறியுள்ள கட்சி, புதுச்சேரி மக்களையும் முதல்வரையும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் இரண்டாம் பட்சமாக நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.
காங்கிரஸ் மீதும் விமர்சனம்
மாநிலத்திலும் ஒன்றியத்திலும் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ். மாநில அந்தஸ்தை வழங்கவோ பெறவோ வாய்ப்பிருந்தும் அதைப் பயன்படுத்தவில்லை என்றும். மாநாட்டில் பங்கேற்றிருந்தால் அந்தஸ்து கிடைத்திருக்கும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி இப்போது கூறுவது வேடிக்கையானது என்றும் கட்சி விமர்சித்துள்ளது.
பாஜக கூட்டணியில் அந்தஸ்து சாத்தியமில்லை
பா. ஜ. க.வுடன் கூட்டணியில் இருந்து கொண்டு மாநில அந்தஸ்தையோ உரிமைகளையோ பெற முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள மார்க்சிஸ்ட் கட்சி, என்.ஆர். காங்கிரஸின் தயவில் சட்டமன்றப் பதவிகளைப் பெற்று புதுச்சேரியை மக்கள் விரோதத் திட்டங்களின் சோதனைக் களமாகப் பாஜக பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. உரிமைகள், மாநில அந்தஸ்து, வளர்ச்சி, வேலைவாய்ப்பு, நலத்திட்டங்களை உண்மையாகச் செயல்படுத்த வேண்டுமானால் முதல்வர் பொருத்தமான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்
எனவும் கோரியுள்ளது. 'வேட்டைக்காடாக புதுச்சேரி'
மின்துறைத் தனியார்மயம். ப்ரீபெய்ட் மீட்டர், "டிஜிட்டல் காயின்" பெயரில் ரேஷன் முறை சீரழிவு, 'நில பொருளாதாரம்' எனக் கடல்வளச் குறையாடல், விபி ஜி ராம் ஜி திட்டப் பெயரால் 100 நாள் வேலைத்திட்ட முடக்கம், தாய்மொழிக் கல்வி மறுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஒன்றிய அரசு புதுச்சேரியை இந்துத்துவா கார்ப்பரேட் சக்திகளின் வேட்டைக் காடாக மாற்றி வருவதாகவும் கட்சி சாடியுள்ளது.
ஒன்றிணைந்து போராட அழைப்பு
ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளுக்கும். கூட்டாட்சி முறைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் எதி ராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என்றும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற மாநில முதல்வர்கள் வலுவான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தீக்கதிர் 21.08.2026