02/04/2026
🚩 மதிமுகவுக்கு கட்டமைப்பு இல்லை என்றவர்களுக்கு திருத்தணி கொடுத்த பதிலடி!
அமைப்பே இல்லை... கட்சியே காலி..." – இலை உதிர்வதை பார்த்து மரம் பட்டுப்போய்விட்டதாகக் கணக்குப் போடும் சில "அரசியல் விமர்சகர்களுக்கு" காலம் கொடுத்திருக்கும் பதிலடி இது!
கொஞ்சம் திருத்தணியைத் திரும்பிப் பாருங்கள்!
தேமுதிகவின் முதல் பிரச்சாரக் கூட்டத்தில், விண்ணை முட்டும் அளவுக்கு விண்ணதிரப் பறந்தது நம் மதிமுக கொடிதான்! அமைப்பே இல்லை என்று நீங்கள் சொன்ன இடத்தில், அலை அலையாய் நம் தொண்டர்கள் நின்ற விதம் உங்கள் கணக்குகளைத் தவிடுபொடியாக்கிவிட்டது.
உண்மை என்னவென்றால்:
மரம் சாய்ந்துவிட்டதாக நினைப்பவர்களுக்குத் தெரியாது, அதன் வேர்கள் எவ்வளவு ஆழமாகப் படர்ந்திருக்கிறது என்று!
இது வெறும் கூட்டமல்ல; வைகோ எனும் தலைவன் மீது கொண்ட தீராத பற்று! திருத்தணியில் தெறித்தது கொடிகள் மட்டுமல்ல, தளர்ந்துவிடாத மறுமலர்ச்சி வீரம்! ---
மறுமலர்ச்சி முழக்கம் தொடரும்! 🚩
Durai Vaiko