We The Leaders Ramanathapuram

We The Leaders Ramanathapuram We The Leaders | Lead the Change

ஐயா அப்துல்கலாம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பல்வேறு அமைப்பினரோடு,  We The Leaders Foundation சா...
15/08/2026

ஐயா அப்துல்கலாம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பல்வேறு அமைப்பினரோடு, We The Leaders Foundation சார்பாக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

|| ||

12/08/2026

மரத்திற்காகக் கண்ணீர் விட்ட தாய்!

மரக்கன்றுகளை வீட்டிற்கே அனுப்பிய தலைவர் #அண்ணாமலை

We The Leaders Foundation | K.Annamalai

06/08/2026

தலைவர் அண்ணாமலையின் ஆக்கபூர்வ அரசியல்

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி அருகே விதிமீறலாக உள்ள 129 டாஸ்மாக் கடைகள் குறித்து ஆதாரங்களுடன் கடிதம் எழுதியுள்ளாரே அண்ணாமலை இது உங்கள் கவனத்திற்கு வந்ததா?

#தவெக அமைச்சர்

அண்ணன் #அண்ணாமலை….

மதிப்பிற்குரிய அண்ணாமலை அவர்களின் கோரிக்கை அன்றே எங்கள் கவனத்திற்கு வந்தது கூடிய விரைவில் அவற்றை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

We The Leaders Foundation | K.Annamalai

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் We The Leaders Ramanathapuram அமைப்பின் சார்பாக 20நாட்களுக்கு முன்பே ப...
06/08/2026

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் We The Leaders Ramanathapuram அமைப்பின் சார்பாக 20நாட்களுக்கு முன்பே புகார் மனு கொடுக்கப்பட்டது.

இராமநாதபுரம் குப்பைக் கிடங்கு முறையாக பராமரிக்கப்படவில்லை,

இதனால் அந்த பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று அபாயமும் , அருகிலுள்ள பட்டா நிலதாரர்களுக்கு இடையூறும் ஏற்படுகிறது என அந்த பகுதி தன்னார்வலர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கும், முதல்வருக்கும் புகார் அளித்தோம்.

இந்நிலையில் கடந்த இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பாக அங்கு ஒரு மிகப்பெரிய தீ பரவல் ஏற்பட்டு அந்த மாசுடன் கூடிய புகை குடியிருப்பு பகுதி முழுவதையும் சூழ்ந்து இருக்கிறது.

// தீ பரவலுக்கு பின்பு மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று பார்வையிட்டது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் அங்கு தேவையான வசதிகளையும் செய்து தர முன் வர வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறோம். //

K.Annamalai || Ramanathapuram Collector

05/08/2026
04/08/2026

சமூக அக்கறையையும் சுய ஒழுக்கத்தையும் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்...
நாளைய தேசம் அவர்கள் கைகளில் தான்!!

K.Annamalai || We The Leaders Foundation

தலைவர் அண்ணாமலை அவர்கள் கடற்கரையை தூய்மை செய்வோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற முன்னெடுப்பு மக்களிடத்தில் நல்ல மாற்ற...
02/08/2026

தலைவர் அண்ணாமலை அவர்கள் கடற்கரையை தூய்மை செய்வோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற முன்னெடுப்பு மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை கொண்டுவரும்.

ஒவ்வொரு குடிமக்களும் நாம் சுய ஒழுக்கத்துடன் இருந்தால் தமிழகத்தையும் தூய்மையாக வைத்திருக்க முடியும்.

குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டாதீர்கள்.

சுற்றுச்சூழலை பாதுகாப்போம், அடுத்த தலைமுறை வாழ வழிவகுப்போம்...

"மாறுவோம் மாற்றுவோம்"

#மரம்_நடுவோம் #போதை_ஒழிப்போம் #மழைநீர்_சேமிப்போம் #சுற்றுச்சூழல்_பாதுகாப்போம்.

K.Annamalai || We The Leaders Foundation .

We The Leaders Foundation  அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் முடிவுகளைத் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜ...
01/08/2026

We The Leaders Foundation அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் முடிவுகளைத் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் கனிவான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் 129 டாஸ்மாக் (TASMAC) சில்லறை விற்பனைக் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

எனவே, இக்கடைகளை உடனடியாக மூடவும், எங்கள் குழந்தைகள் கல்வி கற்கும், வழிபடும் மற்றும் பயணம் செய்யும் இடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

K.Annamalai .

இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை மற்றும் வழிவிடு முருகன் கோவில் அருகில் உள்ள டாஸ்மாக் கடை ஆகியவற்றை நிரந்தரமாக மூட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

We The Leaders Ramanathapuram || We The Leaders - Mudukulathur || we the leader's பரமக்குடி .

31/07/2026

👏

31/07/2026

நமது இளைஞர்களை சீரழிக்கும் போதைப்பழக்கத்திற்கு எதிராக, நமது இராமநாதபுரம் மாவட்டம் பேரையூரில் இருந்து, ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம் வரை, 135 கிலோமீட்டர் தொலைவு, விழிப்புணர்வு நடைபயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள சகோதரர் திரு.அன்பரசு அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது வெறும் நடைபயணம் அல்ல; லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை காக்கும், சமூகப் பொறுப்புணர்வின் வெளிப்பாடு. வெயில், களைப்பு என அனைத்துத் தடைகளையும் கடந்து, "போதை இல்லாத தமிழகம்" என்ற உயரிய இலக்கை, மக்களிடம் கொண்டு சென்ற சகோதரர் திரு. அன்பரசு அவர்களின் இந்த முயற்சி அனைவருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.

நமது சமூகம் போதையிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான மற்றும் பொறுப்புள்ள சமூகமாக உருவாக, நாம் அனைவரும் உறுதியேற்போம். இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம்.

K.Annamalai .

Address

Kenikkarai
Ramanathapuram
623501

Website

Alerts

Be the first to know and let us send you an email when We The Leaders Ramanathapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share