04/07/2026
இராமேஸ்வரத்தில் நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகளுக்கு நிர்வாகத் தோல்வியை காரணம் எனவே முழு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும், தேசிய தேர்வு முகமை (NTA) செயல்பாடுகள் குறித்து தானாக முன்வந்து நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும், தமிழகத்திற்கு உடனடியாக நீட் விலக்கு வழங்க வேண்டும், மருத்துவ மாணவர் சேர்க்கை அதிகாரத்தை மீண்டும் மாநில அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக மாதர் சங்க தாலுகா தலைவர் வெங்கடேஸ்வரி தலைமையிலும், வாலிபர் சங்க தாலுகா குழு உறுப்பினர் ரூபாதரணி முன்னிலையிலும் இன்று (04/7/2026 )நடைபெற்றது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ஆரோக்கிய நிர்மலா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் டி.மாரிகுமார், முன்னாள் வாலிபர் சங்க பொருளாளர் ஜி.சிவா, வாலிபர் சங்கர் தாலுகா செயலாளர் க.கலைச்செல்வன், மாதர் சங்க தாலுகா செயலாளர் கே.சுமதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் DYFI உறுப்பினர் T.பிரசாத், வாலிபர் சங்க தாலுகா துனை செயலாளராக வழக்கறிஞர் கண்டன உரையாற்றினர்.தாலுகா தலைவர் அஞ்சனா தாலுகா குழு உறுப்பினர் நம்புசெல்வம், ஜேம்ஸ், வாலிபர் சங்க நிர்வாகிகள் முனியசாமி,யு.பாக்யராஜ், ஜே.முனியராஜ், தமிழ்ச்செல்வன், கதிர் மற்றும் மாதர் சங்கத் தோழர்களும், பலர் கலந்து கொண்டனர்.
*AIDWA-DYFI*