06/12/2025
ராசிபுரம் நகராட்சியில் நகரமன்ற கூட்டம் (5.12.25) ல் நடைபெற்றது. ராசிபுரம் நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் ஒய்.நிவேதிதா அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் ராசிபுரம் நகர மன்ற துணைத் தலைவர் கோமதி ஆனந்தன், நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.