EPS ARMY SALEM

EPS ARMY SALEM AIADMK EPS ARMY SALEM

22/06/2026

மேகதாது குறித்து சட்டப்பேரவை தலைவருடன் கடுமையான வாக்குவாதத்தில் அதிமுக EPS. #அதிமுக EPS ARMY SALEM

09/06/2026
06/06/2026

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்த தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!!

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் EPS ARMY SALEM #அஇஅதிமுக

கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள்,சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, எடப்பாடி ...
06/06/2026

கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர், மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள்,

சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, எடப்பாடி பேருந்து நிலையத்தில், தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெறச் செய்த எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

#அஇஅதிமுக #எடப்பாடியார் ARMY SALEM

மீண்டு வருவோம் வென்று காட்டுவோம்   EPS ARMY SALEM...
04/06/2026

மீண்டு வருவோம் வென்று காட்டுவோம் EPS ARMY SALEM...

02/06/2026

மீண்டும் வருவோம். மிகப்பெரிய வெற்றியோடு....🌱✌🏻💯🙏

#அஇஅதிமுக #எடப்பாடியார் EPS ARMY SALEM

கழக பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தமிழர், மாண்புமிகு திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் மேலா...
01/06/2026

கழக பொதுச்செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தமிழர், மாண்புமிகு திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் மேலான ஆணையின்படி,

சேலம் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில், ஆத்தூர் நகர கழக அலுவலகம் முன்பு,

மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்ட கழக வர்த்தக அணி இணை செயலாளர் திரு.கே.எஸ்.மகேந்திரன் அவர்களின் திருவுருவ படத்திற்கு,

சேலம் புறநகர் மாவட்ட கழக ஆற்றல்மிகு செயலாளர் அண்ணன் திரு.ஆர்.இளங்கோவன் அவர்கள் தலைமையில், மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்,

கழக விவசாய அணி துணை செயலாளர், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.ஏ.பி.ஜெயசங்கரன் அவர்கள்,

ஆத்தூர் நகர கழக ஆற்றல்மிகு செயலாளர் அண்ணன் திரு.அ.மோகன்.எம்.ஏ., அவர்கள்,

மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், நகர சார்பு அணி நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.!

#அஇஅதிமுக #எடப்பாடியார் #

01/06/2026

தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்கள், தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அவரது ஒரு வயது மகன் பள்ளிப் படிப்பில் சேர்வது முதல், கல்விப் பயணம் முழுவதும் அவரின் கல்விச் செலவை
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
ஏற்றுக்கொள்ளும். மேலும், அவரது குடும்பத்தாருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
ரூ. 30 லட்சம், தஞ்சை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ரூ. 25 லட்சம் குடும்ப நல நிதியாக வழங்கப்படும்.

என் உயிருக்கு உயிரான கழக உடன்பிறப்புகளே…

தயவு செய்து பொறுமையாக இருங்கள். எந்த ஒரு தவறான முடிவையும் எடுத்துவிடாதீர்கள். எத்தனையோ சோதனைகளை, சூழ்ச்சிகளை நாம் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம்.

“அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை” என்ற மாண்புமிகு அம்மா அவர்களின் பொன்மொழியை நெஞ்சில் ஏந்தி முன்நோக்கி செல்ல வேண்டிய நேரம் இது.

அன்புத் தம்பி திரு. K.S. மகேந்திரன் அவர்களின் தியாக உணர்வு கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. ஆனால், அதை நாம் களத்தில், நமது செயலில் காட்டுவோம்.

நெருப்பாற்றில் எதிர்நீச்சல் அடித்தே வெற்றிக் கரை கண்ட இயக்கம் இது. அதனால், எதையும் வென்ற நாம், இந்த சூழலையும் வெல்வோம்!

தன் இறுதி மூச்சு வரை கழகத்தையே சுவாசித்து நேசித்த மாவீரன் K.S. மகேந்திரன் அவர்களின் நினைவாக, அனைத்து கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களிலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திட வேண்டுமென அனைத்து மாவட்டக் கழகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

Address

Salem Attur
Salem
636107

Website

Alerts

Be the first to know and let us send you an email when EPS ARMY SALEM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share