Namma Mettur Dam

Namma Mettur Dam இது தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பற்றிய தகவல் அறியும் இடம்

திங்கள்கிழமை (18.12.2023) மேட்டூர் சார் ஆட்சியராக மதிப்பிற்குரிய திருமதி.நே. பொன்மணி.இ.ஆ.ப. ., அவர்கள் பணியில் சேர்ந்து ...
20/12/2023

திங்கள்கிழமை (18.12.2023) மேட்டூர் சார் ஆட்சியராக மதிப்பிற்குரிய திருமதி.நே. பொன்மணி.இ.ஆ.ப. ., அவர்கள் பணியில் சேர்ந்து கொண்டார். அவரது பணி சிறக்க வாழ்த்துகள். 💐

 #சேது_சமுத்திர_திட்டத்தின்_உண்மை_நிலவரம்.திமுக தேர்தல் அறிக்கையில் மீண்டும் சேது சமுத்திர திட்டம் இடம் பெற்றுள்ளது என்ற...
12/01/2023

#சேது_சமுத்திர_திட்டத்தின்_உண்மை_நிலவரம்.

திமுக தேர்தல் அறிக்கையில் மீண்டும் சேது சமுத்திர திட்டம் இடம் பெற்றுள்ளது என்று கூறுகிறார்கள். அதன் உண்மை நிலவரம். (2019 பொது தேர்தலுக்கு முன்பாக பதிவிட்டது)

இந்த சேது சமுத்திர திட்டம் என்பது ஏதோ காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என்று நினைப்பது மிக முட்டாள்தனமானது. இந்தியப் பெருங்கடலில் சென்னை துறைமுகத்திற்கு ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து வந்து செல்லும் கப்பல்கள் யாவும் இலங்கையை சுற்றிக் கொண்டு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை. இடையில் இருக்கும் கடல் பகுதி குறைவான ஆழம் என்பதால் பெரிய கப்பல்களால் அதில் பயணிக்க முடியாத நிலமை. இவ்வாறு இலங்கையை சுற்றிக் கொண்டு வருவதால் நேரம் மற்றும் பொருள் விரயம் ஏற்படுகிறது என்பதால் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளை இணைத்து ஆழப்படுத்தினால் அந்த இடைவெளி வழியாக கப்பல்கள் சுலபமாக செல்லலாம் என்பது தான் சேது சமுத்திர திட்டம். இந்த இடைவெளியில் தான் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் பகுதிவரை இராமர் பாலம் அமைந்துள்ளது. இதை இடிக்கப்போவதாக தெரிந்ததால் தான் இந்து இயக்கங்கள் போரட்டத்தை தொடங்கின.

இதன் ஆரம்பகாலம் 18ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. அப்போதைய பிரிட்டிஷ் புவியியல் வல்லுநர் ஜேம்ஸ் ரென்னல் இதை ஆராய்ந்து பார்த்து கப்பல்கள் செல்லும் பாதையை ராமேஸ்வரம் பகுதியில் தோண்டி ஆழப்படுத்துவன் மூலம் செய்யலாம் என்று அறிக்கை கொடுத்தார். பெரிதும் கண்டுகொள்ளப்படாத அந்த அறிக்கை 60 வருடங்கள் கழித்து 1838 ஆம் ஆண்டு முயற்சிக்கப்பட்டது. இருந்தாலும் பெரிய கப்பல்கள் செல்ல முடியாத சூழ்நிலை.

பின்னர் 1860 ஆம் ஆண்டு பிரிட்ஷ் அதிகாரி டெய்லர் அவர்களாலும் ஆய்வு செய்யப்பட்டு எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் விடப்பட்டது. பிறகு சுதந்திர இந்தியாவில் 1955 ஆம் ஆண்டு இராமசாமி முதலியார் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி தனது ஆய்வில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமே என்றும் இதை இராமர் பாலம் வழியாக செய்யாமல் மாற்றுப்பாதையில் செயல்படுத்தலாம் என்றும் பரிந்துரை செய்தது. இதன் மூலம் பல நன்மைகள் என்றும் அது குறிப்பிட்டது. ஆனால் இறுதியாக இதை செயல்படுத்த முன்வந்தது மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி.

இந்த ஆட்சிகாலத்தில் 2008ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ராஜேந்திர பச்சோரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு இராமர் பாலத்தை சிதைக்காமல் மாற்றுப்பாதையில் செயல்படுத்தும் வழிமுறைகள் ஆராயப்பட்டது ஆனால் 2013 ஆம் ஆண்டு தனது அறிக்கையை வெளியிட்ட இந்த கமிட்டி சேது சமுத்திர திட்டம் பொருளாதார ரீதியாகவும் சுற்றுச்சூழல் ரீதியாகவும் எந்த நன்மையையும் தராது என்று தெரிவித்துவிட்டது.

https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/pachauri-warns-of-ecological-consequences-on-sethusamudram/article4591153.ece

இதில் இருக்கும் பொருளாதார நன்மைகள் எல்லாம் மிகச்சிறியதே. உதாரணத்திற்கு இந்த திட்டத்தால் ஏற்படும் உள் ஈட்டு விகிதம்(IRR - internal rate of return) வெறும் 2.6% மட்டுமே. அதாவது இதற்காக செலவு செய்யப்படும் தொகை மூலம் கிடைக்கும் வருவாயின் அளவை மதிப்பிடும் முறைக்கு பெயர் தான் உள் ஈட்டு விகிதம். அப்படி பார்த்தாலும் மிக குறைந்த இலாபத்தையே இது தரும் என்பதால் அரசு நிறைவேற்றுவதில் எந்த பலனும் இல்லை. மேலும் இந்த திட்டத்தால் 30000 டன் எடை கொண்ட கப்பல்கள் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால் இன்று 60,000 டன் முதல் 150,000 டன் எடை கொண்ட பெரிய கப்பல்கள் தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. அதனால் அவை இந்த பாதையில் கண்டிப்பாக செல்லமுடியாது.

மேலும் இந்த பகுதியில் மீன்வளம் நிறைந்துள்ளது. இந்த திட்டத்தால் மீன்வளம் பாதிக்கப்படும் என்று அந்தப் பகுதி மீனவர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். மிக அறிய உயிரினமான பவழபாறைகள் நிறைந்த இடம் இது. இந்த திட்டத்தால் அவையும் அழிந்துபோக வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதால் இந்த பகுதியில் வாழும் 400க்கும் மேற்பட்ட அறிய வகை கடல்வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது. பொருளாதார சுற்றுச்சூழல் ரீதியாக சந்தித்த எதிர்ப்பைவிட மதரீதியா சந்தித்த எதிர்ப்பு மிகப்பெரியது. இராமர் பாலத்தை இடிக்க கூடாது என்ற வாதம் மிகப்பெரிய அளவில் வைக்கப்பட்டது.

ஆனால் இந்த எல்லா வாதங்களையும் கேட்டு நாம் வருகின்ற முடிவு, மொத்தமாக இந்த திட்டத்தால் பெரிதாக எந்த நன்மையும் இல்லை; மாறாக கடல்வாழ் உயிரிங்கள் அழிவதைத் தவிர. மேலும் இந்த திட்டத்தை எதிர்த்த பாஜக அல்லது இந்து அமைப்புகள் இதை செயல்படுத்தவே கூடாது என்று சொல்லவில்லை. மாறாக இராமர் பாலத்தை இடிக்காமல் வேறு பாதையில் செயல்படுத்த ஆட்சேபனையில்லை என்று தான் தெரிவித்தன. கடந்த பல ஆண்டுகளாக இதை ஆய்வு செய்துவந்த அறிஞர்களும் இராமர் பாலத்தை இடிப்பது சரியில்லை என்றும் பாம்பன் பகுதியில் செயல்படுத்துவது தான் சரியென்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இப்படி இந்த திட்டத்தில் பொருளாதார சுற்றுச்சூழல் ரீதியாக நன்மைகளைக் காட்டிலும் இழப்புகளே அதிகம் என்று உறுதிசெய்யப்பட்ட பின்னரும் அதை எதிர்த்து எந்த பொடலங்கா போராளிகளும் போராடபோது வெறும் இந்து அமைப்புகளை மட்டும் பார்த்து நீங்கள் சேது சமுத்திர திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பீர்களா என்று கேட்பது எவ்வளவு கேனத்தனமானது! இப்பவும் சொல்கிறோம்.. மாற்றுப்பாதையில் இந்த திட்டத்தை அமுல்படுத்துவதில் இங்கு யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் வேண்டுமென்றே பத்து பைசாவுக்கு பிரயோஜனமில்லாவிட்டாலும் மக்களின் வரிப்பணத்தை ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து இராமர் பாலத்தை இடித்து தான் நிறைவேற்றுவோம் என்றால் அதை எதிர்க்கதான் செவய்வோம்.

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இந்த பாலத்தை ஆய்வு செய்து இது ஏதோ இயற்கையாக தோன்றியது அல்ல. கண்டிப்பாக மனித உழைப்பினால் தான் இது ஏற்பட்டிருக்க வேண்டும் என்று விஞ்ஞானபூர்வமாக கருத்து தெரிவித்தது. எதெற்கெடுத்தாலும் அறிவியலையையும் வெள்ளைக்காரனையும் துணைக்கு கூப்பிடும் கும்பல் இதை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டது ஏனோ?

யாருக்கும் பெரிய நன்மையை தராத இந்த திட்டத்தை வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுத்த முனைந்த அரசு என்ன காரணம் இருக்க முடியும். கொள்ளையடிப்பதை தவிர.. இதுவரை இந்த திட்டத்தில் செலவிடப்பட்ட தொகை அத்தனையும் வீண். கடலில் கரைத்த பெருங்காயம் என்பார்கள். உண்மைதான். சேது சமுத்திர திட்டத்தை பொறுத்தவரையில் மக்களின் வரிப்பணம் கடலில் தான் கரைக்கப்பட்டது.

#மீள்பதிவு

வீரத் துறவி  #சுப்பிரமணிய_சிவா #நினைவு_நாள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர...
23/07/2022

வீரத் துறவி #சுப்பிரமணிய_சிவா
#நினைவு_நாள்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோராவர்கள்.

'வீரமுரசு' எனப் புகழப்படும் சுப்பிரமணிய சிவா பற்றி பார்ப்போம். வீரத்துறவி என்று தலைப்பில் கொடுத்துவிட்டு, இவர் ஓர் சுதந்திரப்போராட்ட வீரர் என்கிறீர்களே என ஐயப்பாடு எழலாம். ஆம்! இவர் அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே சுதந்திரத்துக்காகப் போராடினார், ஆகையால் இந்தத் தலைப்பு அவருக்கு மிகவும் பொருந்தும்.

இவர் 04-10-1884 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள். இவருக்கு இரு சகோதரிகள் அவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள், ஒரு சகோதரன் வைத்தியநாதன் என்று பெயர். இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார். தூத்துக்குடியில் போலீஸ் ஆபீசில் அட்டெண்டராக வேலை பார்த்தார். வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார். அவரின் நினைவாக அவ்வூரின் பேருந்து நிலையம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த தியாகிக்குச் செலுத்தும் அஞ்சலி அது. சிறு வயதில் வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். 1906இல் கர்சான் வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிளந்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தேமாதரம்' எனும் சுதந்திர கோஷம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கினார். சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' பாரதியார் தூண்டிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார். அவர் பேச்சில் அனல் வீசியது. அந்த சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபின் சந்திர பால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார். தெற்கில் இம்மூவரின் மேடைப்பேச்சு, சென்னையில் பாலரின் சொற்பொழிவு இவை சேர்ந்து சுதந்திர நாதம் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. 1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் கை ஓங்கியது. அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் பாடுபட்டார். தொழிலாளர் பிரச்சினையிலும் இவர் கவனம் சென்றது. அந்தக் காலத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தித் தலைவர்கள் பேசிவந்தார்கள். சிவாவும் தன் பேச்சு துவங்கு முன்பாக 'வந்தேமாதரம்', 'அல்லஹுஅக்பர்', என்று முழக்கமிடுவாராம்.

தெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி. சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றதும், அப்பீலில் அது குறைக்கப்பட்டதும் நமக்குத் தெரியும். சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் முதலில் ஆறாண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்தத் துன்பம் அளவற்றது. சிறை இவருக்கு அளித்த சீதனம் பார்த்தவர் அஞ்சும் தொழுநோய். இதனை அவர் "கொடியதோர் வியாதி கொல்லுது என்னை" என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். 1912இல் இவர் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன் ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஒரு மேஜை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட் ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார். அங்கு மக்கள் கூடும் ஒரு நல்ல இடத்தில் மேஜையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம். அப்போது அங்கு கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சார்ம் செய்வாராம். இப்படித் தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார்.

இரண்டாம் முறையாக இவர் இரண்டரை வருடங்கள் நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். "ஞானபானு" எனும் பெயரில் இவர் ஓர் பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியும், வ.வெ.சு.ஐயரும் இந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள். அதன் பின்னர் 'பிரபஞ்சமித்திரன்' எனும் பெயரிலும் இவர் ஒரு பத்திரிகை நடத்தினார். இரண்டாம் முறை இரண்டரை ஆண்டுகள் சிறை சென்று விடுதலையானபின் தொழுநோயின் கடுமை அதிகமாக இருந்ததாலும் இவர் மிகவும் வருந்தினார். சேலம் மாவட்டத்தில்(தற்போதைய தர்மபுரி) இருந்த பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார். அதற்காக சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923இல் அடிக்கல்லும் நாட்டினார்.

மறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஒரு ஆண்டு சிறைவாசம். அதுகுறித்து இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். இவர் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. தீவிர வாதமே இவரது எண்ணம். இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது. எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடியினால் கால்நடைப் பயணம் இவற்றல் ஓய்ந்து போனார். இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் ஒதுக்கப்பட்டார். மனம் உடைந்த சிவா 23-7-1925இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார். வாழ்க தீரர் சுப்பிரமணிய சிவாவின் புகழ்!

பாப்பாரப்பட்டி அல்லது ஓகேனக்கல் பகுதிக்கு பயணம் செய்பவர்கள் இவரது மணிமண்டபம் மற்றும் பாரதமாதா ஆலயத்திற்கு சென்று வாருங்கள்.

சங்ககிரி மலைக் கோட்டைசேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் ‘சங்கரி துர்க்கம்’ என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டையாகும்...
22/04/2022

சங்ககிரி மலைக் கோட்டை
சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் ‘சங்கரி துர்க்கம்’ என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டையாகும். இது சேலத்திலிருந்து 35 கிமீ வடக்கில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம் :-

இந்த கோட்டை சங்கு போன்ற வடிவம் கொண்டதால் இதற்க்கு சங்ககிரி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த கோட்டையில் ஆள் இறங்கும் குழி, தோல் உரிச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை, உரிட்டிவிட்டான் பாறை ஆகியவற்றில் தண்டனை பெறுபவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கொள்ளப்படுவதால் சங்ககிரி என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

வரலாறு :-

வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டையின் உயரம் 5 கி.மீ சங்ககிரி மலைக்கோட்டை தமிழகத்தின் மிக உயரமான மலைக்கோட்டையாகும். மலை அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை இக்கோட்டையில் ஒன்பது வாயில்கள் உள்ளன.

மலையிலுள்ள பாறைகள் மிக அழகான முறையில் செதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களும் மிகவும் உறுதிவாய்ந்தவையாக உள்ளன. கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் திப்பு சுல்தானால் இக்கோட்டைப் பலப்படுத்தப்பட்டது என அறியப்படுகிறது. 9 ஆவது வாயிலில் 1799 என்ற ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது ஆங்கிலேயர்களால் இவ்வாயில் கட்டப்பட்டிருக்கலாம்.

கோட்டையின் 3வது வாயிலில் வரதராசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இன்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. இக்கோவிலுள்ள கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தூண்கள் வேலைப்பாடு மிகுந்தவை. இக்கோவிலின் ஒரு பகுதி இந்தியத் தொல் பொருள் துறையினரால் புணரமைக்கப்பட்டுள்ளது. 5 ஆவது வாயிலை அடுத்து படைவீரர்கள் தங்குமிடம் சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது. 5 ஆம் 6 ஆம் வாயில்களுக்கிடையில் இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலம் ஒன்றும் அதனருகில் மர்மமான சுரங்கப்பாதை ஒன்றும் உள்ளது. 6 ஆவது வாயிலுக்கருகில் வெடிமருந்து வைப்புக் கிடங்கு ஒன்று உள்ளது.

கோட்டையின் உச்சியில் சென்ன கேசவப் பெருமாள் கோவில் உள்ளது. முக்கிய விழா நாட்கள் தவிர பிற நாட்களில் இக்கோவிலின் உற்சவர் மலை அடிவாரத்தில் வைக்கப்படுகிறார். மலையடிவாரத்தில் சோமேஸ்வரசுவாமி கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோட்டை இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் பாதுகாப்பில் உள்ளது

கோட்டையில் உள்ள வழிபாட்டுத் தளங்கள் :-

1. தீரன் சின்னமலையை இக்கோட்டையில் ஆங்கிலேயர் 1805ம் ஆண்டு சூலை 31ந் தேதி (ஆடி 18 அன்று) தூக்கிலிட்டார்கள். கீழ் அரணில் சிவன் கோவில்

2. வரதராசப் பெருமாள் கோவில்

3. சென்ன கேசவப் பெருமாள் கோவில்

4. தஸ்தகீர் மகான் தர்கா

5. கெய்த் பீர் மசூதி

வெளிநாடுகளிலெல்லாம் ஒரு 50 வருடத்திற்கு முந்தைய ஒரு மண் குட்டை கண்டாலும் உடனே அதனை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து பராமரிக்க ஆரம்பித்துவிடுவார். அதனால் தான் வெளிநாடுகளில் சுற்றுலா தளங்கள் படம் போடுகின்றன. ஆனால் நம் ஊரிலோ?… 200 வருடங்கள் பெருமை வாய்ந்த பகுதிகளைக் கூட பராமரிக்காமல் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட பகுதிகளில் ஒன்று தான் இந்த சங்ககிரி மலை.

சங்ககிரி கோட்டை சேலத்தில் உள்ள முக்கிய வரலாற்று இடமாகும். சங்ககிரி மலையில் இது கட்டப்பட்டுள்ளது. அனால் பராமரிப்பு இல்லாததால் வரலாற்று புகழ் வாய்ந்த இக்கோட்டை தற்பொழுது சிதிலமடைந்துள்ளது. இக்கோட்டையில்தான் கொங்குநாட்டு சிங்கமான "தீரன் சின்னமலை" தூக்கிலிடப்பட்டார் என்று வரலாறு கூறுகிறது. இதை ஆட்சி செய்தவரும் அவரே. கோட்டைக்கு 10 சுற்று சுவர்கள் உள்ளன. இப்பகுதியில் அதிகப்படியான மூலிகைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

சங்ககிரி கோட்டை பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தால் கட்டப்பட்டு பின்னர் ராணுவ துருப்பாக திப்பு சூல்தானுக்கும், அதன் பிறகு ஆங்கில அரசுக்கும் பயன்படுத்தப்பட்டது.

கடைசியில் கொங்கு நாடு என்று அழைக்கப்பட்ட பகுதிகளுக்கு இது வரி வசூல் மையம் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஆனது. ஜூலை 31, 1805 அன்று மாவீரன் தீரன் சின்னமலை இங்கு தான் தூக்கிலிடப்பட்டார். அதைத் தவிர அந்த கோட்டையின் முக்கிய வரலாறு, அதன் பின்னால் இருக்கும் பல சுவாரசியாமான தகவல்கள் சரிவர தெரியவில்லை.

மலை உச்சியில் பாதி இடம் வெறும் பாறை தான். மொத்தம் தோராயமாக ஒரு ஐந்து ஏக்கர் பரப்பளவு மேலே இருக்கும். கடைசி நிழல் மண்டபத்தை விட்டு வெளியே வந்தவுடன் முதலில் ஒரு பெரிய பாறையும் அதன் மேல் ஒரு சிறிய அனுமார் கோவிலும் இருக்கிறது. இதை தாண்டிதான் அடுத்து செல்ல முடியும். இந்த பாறையை ஒட்டி கீழே ஒரு தண்ணீர் பாலி இருக்கிறது. அதாவது அந்த பாறையின் சரிவில், கீழே ஒரு சுவர் எழுப்பி, அங்கு தேங்கும் மலை நீரை அப்போது சேகரித்து வைத்து வந்துள்ளனர். அதாவது அந்த காலத்து மலை நீர் சேகரிப்பு திட்டம். இது குடிப்பதற்கும், புலங்குவதற்க்கும் அப்போது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கலாம். இதை விட்டால் அப்போது அந்த மலை உச்சியில் தண்ணீர் கிடைக்க வேறு வழி இல்லை. ஏன் இப்போதும் கூட அங்கு வாழ்ந்துக் கொண்டு இருக்கும் குரங்குகளுக்கு அது பயன்பட்டு கொண்டு இருக்கிறது.

அடுத்து அதன் அருகிலேயே இருக்கிறது வரதராஜ பெருமாள் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தான் இன்று சிறப்பு பூஜை. அதாவது புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் மட்டும் பூஜை செய்யப்படும். அன்று தான் முதல் சனிக்கிழமை. வருடத்தின் மற்ற நாட்களில் இந்த கோவில் பூட்டியே தான் இருக்கும். யாரேனும் பூஜைக்கு கொடுத்தால் மட்டுமே மற்ற நாட்களில் மேலே வந்து திறப்பார்கள். அது ஒரு சிறிய கோவில் தான். ஒரு பெரிய பாறை மேல் சற்று உயரத்தில் கட்டப்பட்டு இருக்கிறது.

கோவிலின் சில பேருக்கு மேல் நிற்க முடியாது. முகப்பின் கீழே பள்ளம் தான். ஆக அந்த பாறை மேல் ஏறுவதற்கு கற்களால் அடுக்கப்பட்ட படிதான். கோவிலின் கீழே ஒரு லிங்கம் போன்ற ஒரு உருவம் பாறையில் செதுக்கப்பட்டு அதன் அருகில் உருது மொழியில் எழுதி இருக்கிறது.

சங்ககிரி மலைக்கோட்டை ஒரு சுற்றுலா தளமாக்கப்பட வேண்டும். கேட்பாரற்று கிடக்கும் தீரன் சின்ன மலை தூக்கிலிடப்பட்ட அந்த இடத்தை நினைவிடம் ஆக்க வேண்டும். இந்த மலைக்கோட்டையின் வரலாற்றை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவை அனைத்தையும் சாத்தியப்படுத்த இந்த மலைகோட்டையை தற்போது கையகப்படுத்தி வைத்திருக்கும் தொல்பொருள்துறையால் மட்டுமே முடியும்.

இன்று உலக சிட்டுக்குருவி தினம்,  சிட்டுக்குருவிகளை காப்பது என்பது நம்மை நாம் காத்துக்கொள்ளுவது போன்றதாகும். 1950 களில் ச...
20/03/2022

இன்று உலக சிட்டுக்குருவி தினம், சிட்டுக்குருவிகளை காப்பது என்பது நம்மை நாம் காத்துக்கொள்ளுவது போன்றதாகும். 1950 களில் சீன கம்யூனிஸ்ட் அரசின் ஒரு முட்டாள்தனமான திட்டத்தால் சிட்டுக்குருவிகளை அழிந்து அதனால் பஞ்சம் வந்து சுமார் 5 கோடி மக்கள் பட்டினியால் உயிரிழந்தனர்.

CHINA'S FOUR PESTS CAMPAIGN!

மிகப்பெரிய மக்கள் புரட்சி நடந்தி 1949ல் சீனாவில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த மாவோ, 1958 ஆம் ஆண்டு "பெரும் பாய்ச்சல்" (Great Leap Forward) என்கிற திட்டத்தை அறிவிக்கிறார். அதில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த விசயங்களை அறிவித்து, அதிலும் குறிப்பாக நிலம் அரசுக்கு தான் சொந்தம் என்றும் மக்கள் உணவு உற்பத்தியில் பணியாற்றலாம் என்று புரட்சிகரமான திட்டத்தை அறிவிக்கிறார். பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் இருந்தாலும் அந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழல் குறித்த பார்வை இல்லாதால், ஒரு மிகப்பெரிய கேடுவிளைவிக்க கூடிய திட்டத்தை அறிவிக்கிறார். அந்த திட்டத்தின் பெயர் "four pests campaign" அதாவது தேவையற்ற பூச்சிகளாக கருதப்பட்டவற்றை அழிப்பது. அழிக்கப்பட வேண்டிய நான்கு பூச்சிகளாக அவர்கள் கருதியது #எலிகள், #ஈக்கள், #கொசுக்கள் மற்றும் #சிட்டுக்குருவிகள். சிட்டுக்குருவிகள் மக்களுக்காக விளைவிக்கப்படும் தானியங்களை உண்டுவிடுகின்றன என்று கருதிய சீன அரசாங்கம் சிட்டுக்குருவிகளை ஒழிப்பதர்காக தொடங்கப்பட்டது தான் "சிட்டுக்குருவி பிரச்சாரம்". அடுத்த 2 முதல் 3 வருடங்களில், சிட்டுக்குருவிகளை அழிப்பதற்காக மக்கள் பல்வேறு உத்திகளை கையாள தொடங்கினார்கள்,

#குருவிகளின் கூட்டை அழித்து, முட்டைகளை உடைப்பது, அதிகமான ஒலி எழுப்பக்கூடிய இசைக்கருவிகளை அடித்து பறவைகளை நெடுந்தூரத்திற்கு விரட்டுவது என்று மக்கள் இறங்கி விளையாடினார்கள்.
#சிட்டு குருவிகள் பல்வேறு நாடுகளின் தூதரகங்களின் கட்டிடங்களில் "தஞ்சம்" புகுந்தாலும் தூதரகங்களுக்கு வெளியே நின்று மக்கள் கொட்டடித்து அவற்றை விரட்டி கொன்று குவித்தார்கள். அவ்வாறு அதிகமான குருவிகளை கொன்றவர்களுக்கு அரசு பரிசுகளை வழங்கியது.

#சீனா முழுவதும் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கைகளில் மிகவும் குறைந்த அடுத்த அடுத்த ஆண்டுகளில் உணவு உற்பத்தி வெகுவாக குறைந்தது, கொன்று குவித்த பிறகு தான் அவர்களுக்கு தெரிந்தது, சிட்டுக்குருவிகள் உணவு தானியங்களை மட்டும் உண்ணவில்லை, ஆனால் பல்வேறு பூச்சிகளை அவை சாப்பிட்டன என்றும் சிட்டுக்குருவிகள் இல்லாதலால் "வெட்டுக்கிளி" போன்ற பூச்சிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து, அவை மனிதர்களுக்கு தேவைப்படும் உணவை அழித்தன, என்று தெரிந்து கொண்டார்கள். 1960களின் தொடக்கத்தில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட, இரண்டும் சேர்ந்து மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டு சுமார் ஐந்து கோடி மக்கள் பட்டினியால் உயிர் இழந்த சோகம் சீனாவை உலுக்கியது. இதை அறிந்து கொண்ட சீன அரசு அழிக்கப்படவேண்டிய பட்டியலில் இருந்து சிட்டுக்குருவியை நீக்கிவிட்டு " #மூட்டைப்பூச்சிகளை" அந்த பட்டியலில் இணைத்து கொண்டது தான் பெரிய முரண்.

உலக சிட்டுக்குருவிகள் தினம்.

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி, அதன் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடந்த 2010-ம் ஆண்டு முதல், மார்ச் 20-ந் தேதியை ‘உலக சிட்டுக் குருவிகள் தினம்’ என்ற பெயரில் கடைப் பிடித்து வருகிறோம். அரிய வகையாக மாறி வரும் சிட்டுக்குருவிகளைக் காக்க, தினமும் வீட்டின் முன்பாகவோ, மாடியிலோ, சிறிதளவு தண்ணீரும், உணவும் வைத்தாலே இவற்றின் வாழ்க்கையில் புத்துயிர் பிறக்கும்.

#மீள்பதிவு

METTUR WATER LEVEL:On 09-11-2021 at 11 am: 119.10/120 அடி/FeetInflow: 26,475 கன அடி/CusecsOutflow: 1,047 கன அடி/CusecsAv...
09/11/2021

METTUR WATER LEVEL:

On 09-11-2021 at 11 am: 119.10/120 அடி/Feet

Inflow: 26,475 கன அடி/Cusecs

Outflow: 1,047 கன அடி/Cusecs

Available Water: 91.88/93.47 T.M.C

Water Level: Increasing⬆️

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை.
08/11/2021

அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை.

மகாகவி பாரதியாரின் உண்மையான உருவம் தமிழ் மக்கள் அனைவரின் உள்ளங்களில் பசுமரத்தாணி போல  பதிவாவதற்கு காரணமான நமக்குக் கிடைத...
12/09/2021

மகாகவி பாரதியாரின் உண்மையான உருவம் தமிழ் மக்கள் அனைவரின் உள்ளங்களில் பசுமரத்தாணி போல பதிவாவதற்கு காரணமான நமக்குக் கிடைத்துள்ள புகைப்படங்கள் வெறும் ஐந்து மட்டும்தான். அவை......

1.பாரதியும் மனைவி செல்லம்மாவும். 1917-ல் விஜயராகவன் என்ற அன்பரின் தூண்டுதலின்பேரில் எடுத்த புகைப் படம்.

2.1917-ல் புதுவையில், முந்திய படம் எடுத்த
அதே நாளில் எடுத்த மற்றொரு படம்.
உட்கார்ந்திருப்பவர்கள்: புதல்வி சுகுந்தலா(பாப்பா), மனைவி செல்லம்மாள்.
நிற்பவர்கள்: புதல்வி தங்கம்மா, நண்பர் ராமு, நண்பர் விஜயராகவன், பாரதி.

3. 9.11.1919 இல் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்தில் பாரதியும் இளம் நண்பர்களும் இடமிருந்து வலம்: அ.மு.க.மு.க.கறுப்பன் செட்டியார், ராய.சொக்கலிங்கன், பாரதி, சொ.முருகப்பா, கி.நாராயணன் செட்டியார். பின்னால்: மு.நடராசன்; சிறுவன் பெயர் தெரியவில்லை.

4. சனவரி 1920 இரண்டாவது முறையாக காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கத்திற்கு பாரதி வந்தபொழுது.

5.பாரதியின் இயற்கையான பரபரப்புத் தன்மையை அற்புதமாய்க் காட்டும புகைப்படம். இது 1920-ல் தமது உற்ற நண்பர் பாரதிதாசனுக்காக கவிஞர் சென்னையில் எடுத்துக்கொண்ட படம். மிகப் பிரபலமான பாரதி முகமும் இதுவே...

METTUR WATER LEVEL:On 05-09-2021 at 7 pm: 71.10/120 அடி/FeetInflow: 22,875 கன அடி/CusecsOutflow: 5,653 கன அடி/CusecsAvai...
05/09/2021

METTUR WATER LEVEL:

On 05-09-2021 at 7 pm: 71.10/120 அடி/Feet

Inflow: 22,875 கன அடி/Cusecs

Outflow: 5,653 கன அடி/Cusecs

Available Water: 33.650/93.47 T.M.C

Water Level: Increasing⬆️

29/08/2021

METTUR WATER LEVEL:

On 29-08-2021 at 11 am: 67.230/120 அடி/Feet

Inflow: 13,296 கன அடி/Cusecs

Outflow: 6,650 கன அடி/Cusecs

Available Water: 30.370/93.47 T.M.C

Water Level: Increasing⬆️

Rare pictures of construction of Mettur Dam 1925 - 1934
26/08/2021

Rare pictures of construction of Mettur Dam 1925 - 1934

ஏறாதே; ஏறினால் இறங்காதே! -  #கண்ணதாசன் எழுதிய 'நம்பிக்கை மலர்கள்' என்னும் நூலிலிருந்து.. புகழ் பெறக் கூடாது; பெற்ற பின் ...
07/08/2021

ஏறாதே; ஏறினால் இறங்காதே! - #கண்ணதாசன் எழுதிய 'நம்பிக்கை மலர்கள்' என்னும் நூலிலிருந்து..

புகழ் பெறக் கூடாது; பெற்ற பின் அதை இழக்கக் கூடாது. தண்ணீரில் சுத்தமாகக் குளித்தவன் சேற்றை அள்ளிப் பூசிக்கொள்ளக் கூடாது.

அரசன் தானே விரும்பி ஆண்டியானால் அது பெருமை. அரச போகத்தை அனுபவித்தவன் ஆண்டி நிலைக்குத் தள்ளப்பட்டால் அது அவமானம்.

மலையேறுவது கடினம்; உருண்டு விழுவது சுலபம். ஏறும்போது எச்சரிக்கையாக இருந்தால் விழவேண்டிய அவசியம் வராது.

வள்ளல் தான் கட்டிய சத்திரத்தில் தானே பரதேசியாகப் போகலாமா?

ஆணவம் இல்லாமல் முன்னேறுவது, அளவோடு அந்தப் புகழை அனுபவிப்பது.

எய்துங்கள் ஒன்றை; எய்திய இடத்திலேயே நிற்க முயலுங்கள்.

புகழெய்தி விட்ட ஒருவன், இகழ்ச்சிக்கு ஆளானால், தகுதியற்ற நிலையிலேயே புகழெய்தி இருக்கிறான் என்று பொருள்.

ஒரு குவளை தண்ணீரை ஒரு சொம்பு தாங்கும், ஒரு சொம்பு தண்ணீரை ஒரு குவளை தாங்காது.

அடுத்தவனைப் புத்தகம் எழுதச் சொல்லி, தன் பெயரைப் போட்டு ஒருவன் வெளியிட்டால், அந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவன் பதில் சொல்ல முடியாது. அந்தப்புகழ் அவனுக்கு ஒட்டவும் ஒட்டாது.

திறமைக்கேற்றப் புகழே, தீராத புகழ்.

தகுதிக்கு மீறிய பட்டங்கள், இருக்கின்ற குறைந்த தகுதியையும் சாகடித்து விடும்.

தாத்தாவின் சட்டையைப் பேரன் போட்டுக் கொண்டால், பார்ப்பவர்கள் சிரிப்பார்களே தவிர, வணங்க மாட்டார்கள்.

ஏறாதே; ஏறினால் இறங்காதே! சம நிலத்தில் ஓடும் நதியைப் போல் ஜாக்கிரதையாக இரு.

படிக்கட்டில் ஏறும் போது மூச்சு வாங்கினால் ஒவ்வொரு படியிலும் நின்று போ. ஏறியவுடன் மாரடைப்பு வருகிற மாதிரி ஏறாதே!

புகழ் விளம்பரமில்லாமல், மயக்கமில்லாமல் இருந்தால் பழி வந்தாலும் கூட அது உன்னையும் தாக்காது; ஊராருக்கும் தெரியாது.

Address

Indane Nagar, Jagirredipatty
Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Mettur Dam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Namma Mettur Dam:

Share