16/08/2026
சங்கரன்கோவில் ஏ.வி.கே கல்விக் குழுமத்தின் இரு பெரும் விழா
சங்கரன்கோவில் ஏ.வி.கே சிபிஎஸ்இ பள்ளி மற்றும்
ஏ.வி.கே கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி இணைந்து நாட்டின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது.
விழாவினை தொடர்ந்து பள்ளியின் 16-ஆம் ஆண்டு விளையாட்டு
விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,
ஏ.வி.கே கல்விக் குழுமத்தின் தலைவர்
டாக்டர்.S.அய்யாத்துரைப் பாண்டியர்
தலைமை ஏற்று தேசிய கொடியினை ஏற்றி தலைமை உரை ஆற்றினார்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மரியம் ஹஜ்ரா வரவேற்புரை ஆற்றினார்.
பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சதீஷ் விளையாட்டு சாதனைகளை ஆண்டறிக்கையாக சமர்ப்பித்தார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
ப்ரோ வாலிபால் லீக் வின்னர் 2023
இந்திய இரயில்வே இளநிலை பொறியாளர்
திரு.T.ராகுல்
மற்றும்
சர்வதேச விளையாட்டு வீரர்
அகில இந்தியப் பல்கலைக்கழக வெண்கலப் பதக்க வெற்றியாளர்
திரு.கார்த்திக் ராஜா
ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுழற் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டி கௌரவித்தார்கள்.
இந்நிகழ்வில்,
பள்ளியின் முதல்வர்
திரு.R.லட்ஷ்மணன்
மற்றும்
கல்லூரி முதல்வர்
டாக்டர்.ரேவதி
நிர்வாக அதிகாரி
டாக்டர்.U.காளித்துரை
மற்றும்
கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள்,
பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஏ.வி.கே கல்வி குழுமத்தின் நிர்வாகத்தினர் மற்றும் உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.
விழா முடிவில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன்
அமுதன் நன்றியுரை ஆற்றினார்.