பாண்டிய மறவர் சபை

பாண்டிய மறவர் சபை பாலா வேலுசாமிபாண்டியன்

26/09/2024

யார் பாண்டியன் ?

எங்கள் முக்குலத்தோரும் சரி, அதில் குறிப்பாக பிற பிரிவு மறவர்களும் கூட திருநெல்வேலி கொண்டையங்கோட்டை மற மன்னர்களை "பாண்டியன்" என அழைக்கும் வழக்கமும், விதியும் உண்டு அதுவே தென்பாண்டி சீமை வாழ்வியல் முறை. இன்றும் தென்பாண்டி சீமையில் அனைத்து சாதிகளும் பொதுவாகவே மறவர்களை "தேவமார்" "பாண்டியமார்" என அழைக்கும் வழக்கம் இன்றளவும் உண்டு. இது இங்குள்ள எல்லோருக்கும் தெரியும். இன்றைய சூழ்நிலையில் ஏற்க மனம் இல்லாமல் போகலாம். மன்னர்களின் உறவின் முறையினர் வாழும் பகுதிகளை "பாண்டியமார் தெரு" என்றும் பிற மறவர்கள் வாழும் பகுதியை "தேவமார் தெரு" என அழைக்கும் வழக்கமும் இருக்கு. சாதி வேற்றுமை ஒழிய வேண்டும் என ஒத்துழைத்து சில வழக்கத்தை மறந்து மனம் மாறி இருக்கிறோமே தவிர எங்கள் வரலாற்று பாரம்பரியத்தை மாற்ற நினைத்தால் எப்படி பொறுத்து கொள்ள முடியும். அது என்றுமே நடக்காது. சில நேரங்களில் சில உண்மைகளை உரக்க சொல்லி தான் ஆக வேண்டும். முக்குலத்தோருக்கும் அதில் குறிப்பா எல்லா மறவருக்கும் பாண்டிய மன்னனுடன் நெருங்கிய தொடர்பும் உறவும் இருந்ததை மறுக்கவும் இல்லை அதில் சந்தேகமும் இல்லை. ஆனால் பாண்டியன் கொண்டையங்கோட்டை மறவன்.

#தென்பாண்டி
#பாண்டியமார்
#தேவமார்
#திருநெல்வேலி
#கொற்கை
#பொதிகை
#கிளுவை
#புலித்தேவர்
#வெட்டும்பெருமாள்

 #பாண்டிய_மறவர்_சபை🎏தென்காசி பாண்டியன் ஸ்ரீ வல்லப மஹாராஜாவின் எல்லையில் நெடு நாட்களாக தொல்லை கொடுத்து வந்த எதிரியை கொன்ற...
26/09/2024

#பாண்டிய_மறவர்_சபை🎏

தென்காசி பாண்டியன் ஸ்ரீ வல்லப மஹாராஜாவின் எல்லையில் நெடு நாட்களாக தொல்லை கொடுத்து வந்த எதிரியை கொன்ற செங்கோட்டை பகுதி கிளுவை நாட்டில் கொண்டையன்கோட்டை மறவரில் திருவண்ணாத் தேவருக்கு கொடுத்த பட்டயம். 1205ல் கொடுக்கப்பட்ட பட்டயத்தை 18ம் நூற்றாண்டில் மீண்டும் புதுப்பித்து இருக்கிறார்கள். மானியமாக வழங்கப்பட்ட 22 கிராமங்கள் அனைத்தும் தென்காசி சங்கரன்கோவில் வட்டத்திற்கு உள்ளயே அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மிகவும் பிற்காலத்தில் தோராயமாக புதுப்பிக்கப்பட்டதில் இருந்து 200 வருடம் கழித்து அவசரகதியில் முறையான ஆய்வுகள் செய்யாத சில நூலாசிரியர்கள் இந்த கிளுவை கொண்டையன்கோட்டை நாட்டை இராமநாதபுரம் பகுதி கீழக்கரையாக இருக்குமென தவறான யூகத்தின் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது அந்த தவறான கருத்தை திருநெல்வேலி பகுதி கொண்டையன்கோட்டை மறவர்களை மானுடவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்த லூயிஸ் டுமான்ட் தனது ஆராய்ச்சியில் மறுத்து எழுதி இருக்கிறார். மேலும் "வாள்எழுபது" பாடலுக்கு உரை எழுதிய ஆசிரியரும் "வாள்எழுபது" பாடலில் சொல்லப்படாத, ஒரு தவறான கருத்தை தனது உரையில் திரித்து எழுதி இருப்பதும் உறுதியாகிறது. இவற்றுக்கு எல்லாம் முன்பே இதே தவறான கருத்தை ரெவரெண்ட் கால்டுவெல் எழுதியிருக்கிறார் "திருநெல்வேலி சரித்திரம்" நூலில் முன்னுக்கு பின் முரணாக மறவர்கள் இராமநாதபுரத்திலிருந்து வந்தவர்கள் என ஒரு பக்கத்தில் சில வரிகளில் எழுதி இருக்கிறார். தென்பாண்டி சீமை திருநெல்வேலி பகுதி கொண்டையன்கோட்டை மறவர்களை குறித்து சொல்லப்பட்டதில்லை அந்த தவறான கருத்து மறவர் எல்லோருக்கும் பொருந்தாது என்பதே நிதர்சனம். இந்த தவறான கருத்துக்களை எல்லாம் அடிப்படையாக கொண்டு நமக்கெல்லாம் இராமநாதபுரம் தான் பூர்வீகம் என தொடர்ந்து தவறான கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து, மேடைகளில் பேசியும், ஆய்வு கட்டுரைகள் எழுதியும் நமது வரலாலற்றை நம்மவர்கள் தவறான கோணத்தில் பதிவு செய்துள்ளார்கள். வரலாறு நமக்கு உண்மையை கற்றுத்தரும் போது பழைய தவறான கருத்தை நாம் திருத்திக்கொள்ள தான் வேண்டும். கிளுவை கொண்டையன்கோட்டை மறவர்களின் பூர்வீகம் இதன் வரலாறு மீண்டும் சரியான கோணத்தில் எழுதப்பட வேண்டும் அது மறவர் இடப்பெயர்ச்சி என சொல்லப்படுகிற தவறான கருத்தை தலைகீழ் புரட்டி போடும்.

#தென்பாண்டிசீமை
#கிளுவை
#கொண்டையன்கோட்டை
#திருநெல்வேலி
#புலித்தேவர்
#திருநெல்வேலிதலைவர்
#வெட்டும்பெருமாள்
#மச்சவம்சம்
#சந்திரகுலம்
#பாண்டியன்

பாண்டிய மறவர் சபை
நிறுவனர்:
Bala Velusamypandiyan

26/09/2024

#பாண்டிய_மறவர்_சபை🎏

Address

Sankarankovil

Website

Alerts

Be the first to know and let us send you an email when பாண்டிய மறவர் சபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share