MPK Sivagangai

MPK Sivagangai District Page of Sivagangai MPK - Mukkulathor Pulipadai Katchi

*த.வெ.க. ரீல்ஸ் அரசின் எதேச்சதிகார போக்கு, உதயநிதி கைது*முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் *சேது.கருணாஸ்* கண்ட அறிக்கை=====...
04/08/2026

*த.வெ.க. ரீல்ஸ் அரசின் எதேச்சதிகார போக்கு, உதயநிதி கைது*
முக்குலத்தோர் புலிப்படைத்தலைவர் *சேது.கருணாஸ்* கண்ட அறிக்கை
=======================================================================

திமுக சார்பில் 3.8.2026 அன்று தஞ்சையில் நடைபெற்ற காவிரி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் கருத்துகளை ஆக்கப்பூர்வமாக ஆர்ப்பாட்டத்தி முன் வைத்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் திரு உதய நிதி ஸ்டாலின் அவர்கள்!

நாளை 5.8.2026 சட்டசபை நடைபெறவிருக்கும் சூழலில் இந்த ஆட்சியின் ரீல்ஸ் தகிடுத்தித்தங்களை உதயநிதி சட்டமன்றத்தில் அம்பலப்படுத்திவிடுவார் என்ற அச்சத்தில் பொய்வழக்குப் புனைந்து கைது செய்திருக்கிறது த.வெ.க. ரீல்ஸ் மாடல் அரசு. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி அவர்கள் பேசிய பேச்சில் எந்தவிதமான ரெட்டை அர்த்த பேச்சோ, அல்லது உள்நோக்கம் நிறைந்த அவதூறோ இல்லை. ஆனால் அதை வெட்டி ஒட்டி ரீல்ஸ் பரப்பி பொய்வழக்காக புனைந்துள்ளனர்.

திமுக ஆட்சியில் காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டது. இன்றைய ஆட்சியில் காவிரி கால் ஒடிந்து கிடக்கிறது. இந்த கையாகத தனத்தை சுட்டிக் காட்டினால் கைது என்றால், மக்கள் உரிமைக்காக முதல்வர்தான் வாய்திறக்க மறுக்கிறார். நாங்களும் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டுமா? வாய்திறந்து மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால் கைது நடவடிக்கையா?

பேசுவதற்கெல்லாம் கைது என்பது கருத்தியல் உரிமை மீது கைவைக்கும் எதேச்சதிகாரப் போக்கு. தொடர்ந்து இது போன்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் த.வெ.க. அரசை நீதிமன்றங்கள் பல முறை எச்சரித்திருக்கிறது. த.வெ.க. அரசு நீதிமுன்றங்கள் முன் அசிங்கப்பட்டிருக்கிறது.

இன்று உதயநிதி கைதிலும் த.வெ.க. அரசு மக்கள் முன் வெட்கி தலைகுனியபோகிறது. அவர் அவதூறாகப் பேசினார் என்று கருதினால், வழக்குப்போடுங்கள், அதை சட்டபடி தி.மு.க. எதிர்கொள்ளும். எதற்கெடுத்தாலும் கைது என்றால் இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இங்ஙனம்

*சேது. கருணாஸ் BA., Ex.M.L.A.,*
தலைவர், முக்குலத்தோர் புலிப்படை

Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை
MPK ITWing

*தர்மேந்திர பிரதான் பதவி விலகல்* *மாணவப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! பணிந்தது மோடி அரசு!*===========================...
25/07/2026

*தர்மேந்திர பிரதான் பதவி விலகல்*
*மாணவப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! பணிந்தது மோடி அரசு!*
===============================================================
முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவர் சேது. கருணாஸ் அறிக்கை
================================================================

கடந்த சில நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் திடல் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடைபெறும் தொடர் போராட்டம், மாணவர்களின் போர்க்களமாக இருக்கிறது. ஒன்றிய அரசை அசைத்துப் பார்க்கும் மாணவர் புரட்சி இது. இந்திய வரலாற்றில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தேறி இருக்கிறது. ஆனால் நீட்தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம். வரலாற்று முக்கியதுவம் வாய்ந்தது.

இந்தத் தொடர் போராட்டத்தில் மாணவர்களை ஒடுக்க தில்லி காவல் துறை செய்து அட்டூழியங்கள் உலகமே கண்டு கதறியது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மாணவர் போராட்டம் பரவியது. தமிழ்நாட்டில் த.வெ.க. அரசு அதையும் தடுத்து ஒன்றிய அரசுக்கு மறைமுக ஆதரவைக் காட்டிக் கொண்டது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், இன்று (25.07.2026) தர்மேந்திர பிரதான் தனது ராஜினமாவை அறிவித்துள்ளார்.

இது நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டத்தின் பெரும் வெற்றியாகும்.
விவசாய போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் உள்ளிட்ட எத்தனையோ போராட்டங்களுக்கு பணியாத மோடி அரசு மாணவர் போராட்டத்திற்கு பணிந்து, ஒன்றி அமைச்சர் பதவி விலகியுள்ளார். நாடு தழுவிய போராட்டத்தின் பயனாக கிடைத்த வெற்றியாகும்.

இது மோடி அரசின் அராஜகத்திற்கு வைத்த முற்றுப் புள்ளி. மக்கள் திரள் போராட்டத்திற்கு முன்பு அரசு எப்போதும் அடி பணிந்துதான் ஆகவேண்டும் என்ற படிப்பினையை இனியாவது ஒன்றிய அரசு தெரிந்து கொள்ளட்டும்.

இங்ஙனம்
*சேது. கருணாஸ் Ex.MLA.,*
தலைவர், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி
Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை
MPK ITWing

*ஆவண படுகொலை தனி சட்டம் இயற்ற கூடாது -சேது கருணாஸ் மனு*ஆவண படுகொலை தனிசட்டம் இயற்றுவதற்கு முக்குலத்தோர் புலிப்படை நிறுவன...
06/07/2026

*ஆவண படுகொலை தனி சட்டம் இயற்ற கூடாது -சேது கருணாஸ் மனு*

ஆவண படுகொலை தனிசட்டம் இயற்றுவதற்கு முக்குலத்தோர் புலிப்படை நிறுவனதலைவர் சேது கருணாஸ் ex MLA அவர்கள் இன்று அந்த ஆணையத்தின் இயக்குனர் K N பாஷா அவர்களிடம் எதிர்ப்பு பதிவு செய்து மனுவாக அளித்தார் இந்த நிகழ்வில் மாநில துணை பொதுச்செயலாளர் பெருமாள் தேவர் உடனிருந்தார்
Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை
MPK ITWing

03/07/2026

திருவுடைய அய்யனார் சின்னக் கருப்பர் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் சமுத்திரம் ஊராட்சி தாஞ்சூரில் அமைந்துள்ளது.

1979 வரை அகமுடையார் இனத்தின் சிந்திரான் கரை பங்காளிகள் ஒரு ஓலைக் கொட்டகையில் இருந்து அருள்பாலித்து வந்தது. 1980 ம் ஆண்டு ஊரார்கள் சார்பாக நிதி வசூல் செய்து கோபுர கட்டிடமாக கட்டி குடமுழுக்கு நடைபெற்றது.

அதன்பிறகு ஆடிமாதம் 18 ந்தேதி அய்யானாரருக்கு பச்சை பரப்பி படையல் ஆடி 19 சின்னக் கருப்பருக்கு கருங்கிடாய் முனீஸ்வரருக்கு செங்கிடாய் காளீஸ்வரி க்கு பெட்டைக்கோழி நொண்டிக்கு சேவல் வெட்டி பூஜை நடைபெறும்.

இந்த கோயில் பங்காளிகள் சுமார் 100 தலைக்கட்டு கள் உள்ளனர் தாஞ்சூர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் பட்டணப்பட்டி, மயிலாடுதுறை மாவட்டம் மணக்கால் அருகில் சந்திரசேகர் புரம் மட்டும் இன்றி புதுக்கோட்டை அறந்தாங்கி திருச்சி சென்னை என்று பரவலாக கோயில் பங்காளிகள் வசித்து வருகிறார்கள்.

100 தலைகட்டு வரி வசூல் செய்தாலும் இந்த கோயில் ஊர் கட்டுப்பாட்டில் செயல்படும். நடிகரும் முக்குலத்தோர் புலிப் படை தலைவர் சேது கருணாஸ் அவர்களின் மூதாதையர் தான் கோயில் பூஜாரி ( அவர்கள் வீட்டின் பட்டப்பெயர் பூஜாரி வீடு) அவர்கள் தான் இந்த ஆடிமாத பூஜையை கூட்டவேண்டும். பட்டணப்படி கிருஷ்ணன் வகையறா தான் கோயில் சாமியாடி மற்றும் கோயில் கிடாய் வெட்டி தாஞ்சூர் ஆண்டியப்பதேவர் வகையறா என்று இருந்தாலும் பூஜை போட்டதும் கிடாய் மற்றும் பிரசாதம் வழங்கும் உரிமை ஊரில் ஒப்படைத்து ஊரார்கள் மூலமாக தலைகட்டு வாரியாக உருண்டை சோறு விநியோகம் நடைபெறும். (தலைக்கட்டு என்பது ஒரு கனவன் மனைவி)

இந்த கோயில் பங்காளிகள் சுப.சிங்காரம் சுப. சகாதேவன், பெரிசின்னையா, க.குணசேகரன், பட்டணப்பட்டி நாகப்பன் சேர்வை சேதுசேர்வை மற்றும் முக்குலத்தோர் புலிப் படை தலைவர் சேது கருணாஸ் ஆகியோரின் ஆலோசனை படி தலைகட்டுவரி மற்றும் ஊர் வசூல் செய்து 2017 ஆவணியில் கோயில் புதிதாக கட்டி அய்யனார் கோயில் கோபுரம் முன்பாக மண்டபம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தனிதனியே கோபுரத்துடன் கோயில் கட்டி குடமுழுக்கு நடைபெற்றது. எந்த அய்யனார் சின்னக்கருப்பர் சாமிகளுக்கு இல்லாத துதி பாடல் இந்த கோயிலுக்கு உண்டு.

மண்ணிலே தானாய் தோன்றி!
மண்பதனை காவல் செய்ய!
தென்புல தாஞ்சி தனில்!
திருவுடைய அய்யனார் ஆகி
வின் புகழ் கொண்ட எங்கள் விமலடியே போற்றி....!!

Sethu Karunaas

30/06/2026
11/06/2026

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நிறுவனர் சேது கருணாஸ் ex MLA அவர்கள்
இயக்குனர் இமயத்திற்கு இறுதி மரியாதையை செலுத்தினார்
Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை
MPK ITWing

10/06/2026

ஜூன் 10 வாளுக்கு வேலி அம்பலத்தின் பிறந்தநாள் நாள்

தென்பாண்டி சிங்கம் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்திய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நிறுவனர் சேது கருணாஸ் ex MLA
Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை
MPK ITWing

*தமிழ் சினிமாவின் மறையாத ஆன்மா பாரதிராஜா - நடிகர் கருணாஸ் இரங்கல் அறிக்கை*Sethu Karunaas முக்குலத்தோர் புலிப்படை  MPK IT...
10/06/2026

*தமிழ் சினிமாவின் மறையாத ஆன்மா பாரதிராஜா - நடிகர் கருணாஸ் இரங்கல் அறிக்கை*
Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை
MPK ITWing

மேகதாது அணைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்....Sethu Karunaas முக்குலத்தோர் புலிப்படை
01/06/2026

மேகதாது அணைக்கு எதிரான ஆர்ப்பாட்டம்....
Sethu Karunaas
முக்குலத்தோர் புலிப்படை

Address

Sivaganga

Alerts

Be the first to know and let us send you an email when MPK Sivagangai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share