12/10/2025
அரியர்ஸ் இருந்தாலும் ஐடி வேலை.. சென்னை HCL நிறுவனத்தில் பணி.. அக்.13-14ல் இண்டர்வியூ
சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. இந்த பணிக்கு பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, எம்பிஏ, எம்காம், பிஎஸ்சி, பிசிஏ மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் அரியர்ஸ் இருப்பவர்களும், தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது Process Associate (Voice Process) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யபப்ட உள்ளனர். இது Banking Domain சார்ந்த பணியாகும்.
இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி பிகாம், பிபிஏ, எம்பிஏ, எம்காம், பிஎஸ்சி, பிசிஏ உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு அரியர்ஸ் இருந்தாலும் பரவாயில்லை. அதேபோல் தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். மாறாக பிஇ, பிடெக் இன்ஜினியரிங், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புராசஸ் அசோசியேட் பிரிவில் ஓராண்டு வரை அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அவ ஆனால் அவர்கள் அதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் இன்டர்பர்ஷனல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். Inbound & Outbound Calls பணி செய்ய தயாராக இருக்க வேண்டும்.
Advertisement

HCL ஐடி வேலைவாய்ப்பு.. 2023, 2024ல் டிகிரி முடித்தோர் விண்ணப்பிக்கலாம்.. சென்னையில் பணி
"HCL ஐடி வேலைவாய்ப்பு.. 2023, 2024ல் டிகிரி முடித்தோர் விண்ணப்பிக்கலாம்.. சென்னையில் பணி"
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுதவிர அலுவலகத்தில் Cab வசதி ஏற்படுத்தி தரப்படும். இன்பர்நேஷன் டிரெய்னர்ஸ் மூலமாக பயிற்சி அளிக்கப்படும்.
பணி என்பது ஷிப்ட் அடிப்படையில் இருக்கும். இதனால் எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பணிக்கு தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக இரவு பணி செய்யவும் ரெடியாக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.
இந்த பணிக்கான இண்டர்வியூ அக்டோபர் 13 மற்றும் அக்டோபர் 14 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ Face To Face முறையில் நடக்கும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Technologie - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Road, Ambattur, Chennai என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.