Thingal Nagar

Thingal Nagar Thingal Nagar is one of third Largest town in Kanyakumari District Thingal Nagar is the Important town in Kanyakumari Disrtict

01/09/2026
🍁தமிழ்நாட்டில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்புப் பணி வெற்றிகரமாக நிறைவு!👉1.15 லட்சம்+ பணியாளர்கள் மூலம் 1...
01/09/2026

🍁தமிழ்நாட்டில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்புப் பணி வெற்றிகரமாக நிறைவு!

👉1.15 லட்சம்+ பணியாளர்கள் மூலம் 100% டிஜிட்டல் முறையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 ஜனவரி-பிப்ரவரியில் நடைபெறும்.

வணிக சிலிண்டர் விலை ரூ.9.50 உயர்வு!- 19 கிலோ வணிக LPG சிலிண்டர் விலை செப்டம்பர் 1 முதல் ரூ.9.50 உயர்த்தப்பட்டுள்ளது.- செ...
01/09/2026

வணிக சிலிண்டர் விலை ரூ.9.50 உயர்வு!

- 19 கிலோ வணிக LPG சிலிண்டர் விலை செப்டம்பர் 1 முதல் ரூ.9.50 உயர்த்தப்பட்டுள்ளது.

- சென்னையில் புதிய விலை ரூ.2,916.50; டெல்லியில் ரூ.2,747.50.

- விலை உயர்வு ஹோட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பு கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும்.

- வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ LPG சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.

பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை முதலமைச்சர் திட்டத்திலேயே இதைப் பற்றி நாங்கள் பேசி இருக்கிறோம். முதலமைச்சரும் அதில் ஆர்வ...
01/09/2026

பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை

முதலமைச்சர் திட்டத்திலேயே இதைப் பற்றி நாங்கள் பேசி இருக்கிறோம். முதலமைச்சரும் அதில் ஆர்வம் காட்டுகிறார் ஆகவே எந்த இடங்களில் அரசு நிலங்கள் இருக்கிறதோ அதை தேர்வு செய்து பத்திரிகையாளர்களுக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள ஐந்து ரோடு சந்திப்பு, எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியமான பகு...
01/09/2026

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள ஐந்து ரோடு சந்திப்பு, எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியமான பகுதியாக உள்ளது. இவ்வழியாக செல்லும் பெரும்பாலான பேருந்துகள் சங்கரலிங்கம் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.
இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் பொதுமக்கள், அருகில் உள்ள நடைபாதையை பயன்படுத்தாமல் சாலை வழியாகவே நடந்து செல்வதாக கூறப்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், தினந்தோறும் சிறுசிறு விபத்துகள் நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, நடைபாதையில் செல்ல வேண்டிய பயணிகள் சாலையில் இறங்குவதைத் தடுக்கும் வகையில், நடைபாதையின் ஓரத்தில் தடுப்பு கம்பி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“நடைபாதையை விட்டு மக்கள் சாலையில் இறங்குவதைத் தடுக்க தடுப்பு கம்பி அமைக்கப்படுமா?” என்பதே தற்போது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு.!   |   |
01/09/2026

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு.!

| |

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களின் 2026 செப்டம்பர்   மாத மின்தடை தேதி...
01/09/2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களின் 2026 செப்டம்பர் மாத மின்தடை தேதி...

*WE THE LEADERS இயக்கத்தின் சார்பில் சமூக நலன் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு**போதைப்பொருள் தடுப்ப...
01/09/2026

*WE THE LEADERS இயக்கத்தின் சார்பில் சமூக நலன் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு*

*போதைப்பொருள் தடுப்பு மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு* குறித்த விழிப்புணர்வு நிகழ்வு

கன்னியாகுமரி மாவட்டம், *பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி, திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், திருவட்டார் பேருந்து நிலையத்தில்*, 𝐖𝐄 𝐓𝐇𝐄 𝐋𝐄𝐀𝐃𝐄𝐑𝐒 𝐅𝐎𝐔𝐍𝐃𝐀𝐓𝐈𝐎𝐍 சார்பில்,

*“போதைப்பொருள் இல்லாத தமிழகம் – தூய்மையான மற்றும் பசுமையான தமிழகம்”* என்ற நோக்கத்துடன், *போதைப்பொருள் தடுப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள்* பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு (*30-08-2026*) அன்று நடைபெற்றது.

*WE THE LEADERS இயக்கத்தின் தலைமை மக்கள் சேவகர், பசுமை தலைமுறையின் வழிகாட்டி & தமிழக இளம் தலைமுறையின் எதிர்கால வழிகாட்டி, மானமிகு கு.அண்ணாமலை* அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,

*கன்னியாகுமரி மாவட்ட WE THE LEADERS இயக்கத்தின் மக்கள் சேவகர் E.S.சகாயம்* அவர்களின் தலைமையிலும்,

*திருவட்டார் ஒன்றிய WE THE LEADERS இயக்கத்தின் சேவகர்கள் தேவசிங், அர்பின், சுரேஷ், அஜித், லாரன்ஸ், ஜெஸ்டின் மற்றும் கண்ணன்* ஆகியோர்கள் தலைமையிலும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் *பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதைப்பொருளின் தீமைகள், போதைப்பழக்கத்தால் ஏற்படும் சமூக பாதிப்புகள், சுற்றுப்புறத் தூய்மை, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு* ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்வில் *துவரங்காடு ராஜேஷ், கடுக்கரை செந்தில்* உள்ளிட்ட 25-ற்கும் மேற்பட்ட WTL இயக்கத்தின் சேவகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

*“போதை இல்லா தமிழகம் – தூய்மையான தமிழகம் – பசுமையான தமிழகம்” என்ற இலக்கை நோக்கி, இளைஞர்களை போதைப்பொருளில் இருந்து பாதுகாப்பதோடு, நமது சுற்றுப்புறச் சூழலையும் பாதுகாக்க தொடர்ந்து மக்கள் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுவோம்* என உறுதியேற்கப்பட்டது.

*போதையை ஒழிப்போம்* *சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்*

*இளைஞர்களை காப்போம்!*
*வளமான தமிழகத்தை உருவாக்குவோம்!*


#போதைஇல்லாததமிழகம்
#சுற்றுப்புறசூழல்
#சுற்றுச்சூழல்பாதுகாப்பு
#போதைக்குஎதிராக
#இளைஞர்களை_காப்போம்





01/09/2026

கன்னியாகுமரி நகராட்சியில் அமைந்துள்ள விவேகானந்தார் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கு கன்னியாகுமரிக்கு தினமும் 5000 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் படகில் செல்வதற்கான நுழைவு சீட்டு வாங்குவதற்கு பூம்புகார் படகு தளத்தில் ஒரே ஒரு கவுண்டர் மட்டும்தான் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கன்னியாகுமரி நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளிலும் இதுபோன்று கவுண்டர்கள் திறக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய் சுந்தரம் சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்

Address

Thingal Nagar, Neyyoor Po, K. K. Dist
Tamil Nadu
629802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thingal Nagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share