Madurai District Police

Madurai District Police We are Officers, men & women of Madurai District Police who are committed to make Madurai District feel safe & secure .

Madurai District Police are committed to excellence in law enforcement, have high priority to protect human life, have primary goal of preventing crime and to reduce fear of crime. Madurai District Police aims to provide service with understanding, response with compassion, to maintain high levels of integrity & professionalism in all actions, and to safe guard the rights of citizens

நடை ரோந்து (Foot Patrolling) மூலம் குற்றங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினர் மதுரை மாவட்டத்தில...
04/09/2026

நடை ரோந்து (Foot Patrolling) மூலம் குற்றங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினர் மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில், காவல்துறையினர் தீவிர நடை ரோந்து (Foot Patrolling) பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று (04.09.2026) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த கண்காணிப்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய இடங்கள், பேருந்து நிலையங்கள், குடியிருப்புகள் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்த அதிரடி நடை ரோந்து மூலம் திருட்டு, வழிப்பறி மற்றும் சமூக விரோத செயல்கள் போன்ற குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


சாலைப் பாதுகாப்பில் புதிய மைல்கல்: மதுரை மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் அதிநவீன ANPR கேமராக்கள்.மதுரை மாவட்டத்தில் குற்...
04/09/2026

சாலைப் பாதுகாப்பில் புதிய மைல்கல்: மதுரை மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் அதிநவீன ANPR கேமராக்கள்.

மதுரை மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கவும், சாலைப் பாதுகாப்பை நவீனப்படுத்தவும், மாவட்டம் முழுவதும் 30 முக்கிய இடங்களில் அதிநவீன தானியங்கி 'ANPR' (Automatic Number Plate Recognition) கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இக்கண்காணிப்பு அமைப்பின் களச் செயல்பாடுகளையும் முன்னேற்பாடுகளையும் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டுத் தீவிர ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய புறவழிச்சாலைகள் (Bypass), நான்கு வழிச்சாலைகள் மற்றும் எல்லைச் சந்திப்புகள் என குற்றவாளிகள் தப்பியோட வாய்ப்புள்ள 30 இடங்கள் இதற்கெனத் துல்லியமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இக்கருவிகள் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களைக் கூட இரவு, பகல் பாராது துல்லியமாகப் படம்பிடித்துத் தரவுத்தளத்துடன் ஒப்பிடும் திறன் வாய்ந்தவை.

கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரின் வாகனங்களை உடனுக்குடன் அடையாளங் கண்டு சுற்றிவளைக்கவும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் (Hit-and-Run) வாகனங்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவும், போக்குவரத்து விதிமீறல்களைக் களையவும் இத்தொழில்நுட்பம் வினையூக்கியாகச் செயல்படும்.

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பான, விபத்தில்லா பயணத்திற்கும், பொதுமக்கள் அச்சமின்றி அமைதியான முறையில் வாழ்வதற்கும் வழிவகுக்கும். இத்திட்டம், மதுரை மாவட்ட பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில்  பெண...
04/09/2026

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,


மதுரை மாவட்ட காவல்துறை: 04.09.2026.பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி கைதுமதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்...
04/09/2026

மதுரை மாவட்ட காவல்துறை

: 04.09.2026.

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி கைது

மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், சோழவந்தான் காவல் நிலைய சரகம், சோழவந்தான் பெரிய கடை வீதியில் குடியிருந்து வரும் சதீஸ்கண்ணன், வயது 36, த/பெ தங்கராஜ் என்பவரது வீட்டில் இன்று 04.09.2026 அதிகாலை சுமார் 12.45 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக சோழவந்தான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் தொடர்புடைய குற்றவாளி நாகர்ஜுன், வயது 23, த/பெ சங்கிலி, பூமேட்டுத்தெரு, சோழவந்தான், மதுரை என்பவர் கைது செய்யப்பட்டு, பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மதுரை மாவட்ட காவல்துறை கஞ்சா வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மூவருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம்.📌மதுரை மாவட்டம...
04/09/2026

மதுரை மாவட்ட காவல்துறை
கஞ்சா வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மூவருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம்.

📌மதுரை மாவட்டம் சோழவந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா வைத்திருந்த
A1: அஜீத் @ கோழி அஜீத் (25)
A2: மருது @ செனமருது ( 28)
A3: அதீஸ்வரன் @ சிவா ( 27) ஆகியோர்களுக்கு தலா மூன்று வாரங்கள் சிறை தண்டனையும் ரூ20,000 அபராதமும் விதித்து முதன்மை NDPS நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..

📌வழக்கில் விசாரணை செய்து தண்டனை பெற்றுக் கொடுத்த விசாரணை அதிகாரியையும் நீதிமன்ற காவலரையும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்..


மதுரை மாவட்ட காவல்துறை..
04/09/2026

மதுரை மாவட்ட காவல்துறை..


மதுரை மாவட்ட காவல்துறை 📌கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடம் சிறைத்தண்டனை மற்றும்  ரூ.1000 அபராதம்"📌மதுரை மாவட்...
03/09/2026

மதுரை மாவட்ட காவல்துறை

📌கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம்"

📌மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் 2021ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி 1) வேலன்- 10 வருடம் சிறைத்தண்டனை & அபராதம் ரூ.1.000
பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறையினர்.

📌திறம்பட வழக்கை விசாரணை செய்த விசாரணை அதிகாரி மற்றும் நீதிமன்ற காவலரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.


நடை ரோந்து (Foot Patrolling) மூலம் குற்றங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினர் மதுரை மாவட்டத்தில...
03/09/2026

நடை ரோந்து (Foot Patrolling) மூலம் குற்றங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்கும் மதுரை மாவட்ட காவல்துறையினர் மதுரை மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில், காவல்துறையினர் தீவிர நடை ரோந்து (Foot Patrolling) பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று (03.09.2026) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த கண்காணிப்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கிய இடங்கள், பேருந்து நிலையங்கள், குடியிருப்புகள் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்த அதிரடி நடை ரோந்து மூலம் திருட்டு, வழிப்பறி மற்றும் சமூக விரோத செயல்கள் போன்ற குற்றங்கள் முன்கூட்டியே தடுக்கப்பட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இன்று 03.09.2026 மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் அவர்களின் உத்தரவின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு...
03/09/2026

இன்று 03.09.2026 மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் அவர்களின் உத்தரவின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சந்திரக்குமார் அவர்களின் அறிவுத்தலின்படியும் (ம) காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.பிரிதி அவர்களின் மேற்பார்வையில் உசிலம்பட்டி உட்கோட்டத்திற்கு உட்பட்ட எழுமலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமணம், குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.மேலும் போக்சோ சட்டம் குறித்தும், குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181, மாணவர்களுக்கான உதவி எண் 14417 மற்றும் காவலன் செயலி (SOS) குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில் மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பொம்மையசாமி, உசிலம்பட்டி மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.வசந்தா, மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.மருதுபாண்டியன், திருமதி.தேவி, பெண் தலைமை காவலர்கள் திருமதி.கலைச்செல்வி, திருமதி.மேனகா, மற்றும் சிறப்பு சிறார் காவல் அலகு சமூகப் பணியாளர் திரு.ராஜாராம் நோபல் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Address

District Police Office, Surveyor Colony, Alagar Kovil Main Road , Madurai
Tamilnadu
625007

Telephone

+91 0452 2562277

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madurai District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Madurai District Police:

Shortcuts

Share