Thaimai trust cbe /தாய்மை அறக்கட்டளை

Thaimai trust cbe /தாய்மை அறக்கட்டளை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thaimai trust cbe /தாய்மை அறக்கட்டளை, Social service, 7/8, Kamatchi Nagar(Ext), Surya Nagar 1st Street, Sivalingapuram, Ondipudur, coimbatore, tamilnadu, Coimbatore.

Thaimai Trust undertakes social activities, provides free materialistic support to bereaved peoples in coimbatore(இலவச நீத்தார் சேவை), supporting poor peoples in education, medical expenses,helping natural disasters

17/06/2026


#9159158155

17/06/2026

ஏழைகள் வீட்டு இறப்பு நிகழ்விற்கு உறவாக சென்று அவர் துன்பத்தை ஆற்றுப்படுத்தும் தாய்மை அறக்கட்டளை...

#இலவசநீத்தார்சேவை



"6ம் ஆண்டு ஓவிய போட்டி""6th Year Drawing Competition"தாய்மை அறக்கட்டளை சார்பாக "உலக புகையிலை ஒழிப்பு தினம்(மே 31)" மற்று...
06/06/2026

"6ம் ஆண்டு ஓவிய போட்டி"
"6th Year Drawing Competition"

தாய்மை அறக்கட்டளை சார்பாக "உலக புகையிலை ஒழிப்பு தினம்(மே 31)" மற்றும் "உலக சுற்றுச்சூழல் தினம்"(ஜூன் 5) ஆகியவற்றை முன்னிட்டு மே 24/5/2026 அன்று கோவை தியாகி NG ராமசாமி நினைவு மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பள்ளி மாணவர்கள் 1 ம் வகுப்பு முதல் 12m🙏🏻வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி நடத்த வேண்டும் என முடிவு செய்தவுடன், அதற்கான முன் ஆயுத்த பணிகளை ஒரு வாரம் முன்னதாகவே நிகழ்விற்கு வேண்டியதை பட்டியலிட்டு செயல்படுத்த துவங்கினோம்.

ஓரு மாதம் முன்பாகவே மாணவர்களும் பெற்றோர்களும் அறக்கட்டளை எண்ணில் அழைத்து போட்டி குறித்து விசாரிக்க துவங்கி விட்டார்கள்.

ஓவியப்போட்டிக்கு வரும் மாணவர்களுக்கு குடிநீர் வசதி, பதிவு செய்ய தனித்தனி பிரிவுகள், அவர்களை வரவேற்க சுவையான பச்சை காய்கறி சூப்,ரம்மியமான சூழல் என அனைத்தும் ஏற்படுகள் செய்யப்பட்டு இருந்தது.

ஓவிய போட்டிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக
திருவள்ளுவர் பேரவை திரு ஞானபிரகாசம் அவர்கள், புற்றுநோய் சிறப்பு மருத்துவர் அரிமா அன்பு அவர்கள்(Royal Care Hospital),
திருமதி M. சரண்யா தேவி அவர்கள் (District To***co control Cell), திரு முரளிகிருஷ்ணன் (District To***co control Cell), MindCare திருமதி பொன்மொழி(Psychological Councellor), Mindcare திருமதி எழில் (Psychological Councellor), திரு செல்வராஜ் (பசுமை பறவைகள்),திரு மருத்தாச்சலம் (சமூக ஆர்வலர்),திரு அங்குராஜு அவர்கள் (Sastha Constro Chemicals)(தாய்மை அறக்கட்டளை கெளரவ அறங்காவலர்), திரு ஈஸ்வரமூர்த்தி(தாய்மை அறக்கட்டளை கௌரவ ஆலோசகர்),
திரு மகேஸ்வரன்(தாய்மை அறக்கட்டளை கௌரவ ஆலோசகர்) மற்றும் திரு மதிவாணன் அவர்கள்(அரசு வக்கீல்)மற்றும் தாய்மை அறக்கட்டளை குழுவினரும் இருந்தனர்.

ஓவிய போட்டியின் நடுவர்களாக முகமலர்ச்சியோடு வருகை புரிந்த Dr ஐஸ்வர்யா அவர்களும், திரு விஸ்வநாதன் அவர்களும், திரு தெய்வீகன் அவர்களும் மாணவர்களுக்கு ஓவியங்கள் எப்படி வரைய வேண்டும்.? எப்படி தலைப்பை புரிந்து கொண்டு வரைவது..? ஓவியத்தின் அடிப்படை கூறுகள் பற்றியெல்லாம் எடுத்து கூறினார்கள்.

ஓவிய போட்டியின் இடையே பெற்றோர்களுக்கு "Parenting Tips" "How to Handle Adolescent Childrens..?""Avoiding mobile usage and Making healthy usage of Mobiles " குறித்து கேள்வி பதில் நிகழ்வாக மன நல ஆலோசகர்கள் திருமதி எழில் மற்றும் பொன்மொழி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

Royal care சிறப்பு புற்றுநோய் மருத்துவர் திரு அன்பு அவர்கள் புகையிலை மூலம் ஏற்படும் நோய்களின் அறிகுறிகள்,உடல் சார்ந்த பாதிப்புகள் குறித்து மாணவர்களிடையே எடுத்து கூறினார்.

மாவட்ட புகையிலை ஒழிப்பு பிரிவு அதிகாரி Dr சரண்யா தேவி அவர்கள் பள்ளிகளில் எப்படி புகையிலை நுழைகிறது..? அதை எப்படி அடையாளம் காண்பது... தவிர்ப்பது..? புகையிலை வைத்திருந்தால், பகிர்ந்தால் என்ன தண்டனை என்று எளிய தமிழில் விளக்கினார்.
அதனை தொடர்ந்து திரு முரளிகிருஷ்ணன் அவர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரையும் ஒருசேர "புகையிலை பயன்படுத்த மாட்டோம்" என உறுதி மொழி எடுக்கப்பட்டது.

பசுமை பறவைகள் திரு செல்வராஜ் அவர்கள் மரக்கன்றுகள் எவ்வாறு... எத்தனை நாளில் நட வேண்டும்.. குழி எந்த அளவில் எடுக்க வேண்டும் என்று சுருக்கமாக கொங்கு தமிழில் சிறுவர்களுக்கு எடுத்து கூறினார்.

அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பரிசிலும் 27 முதல் 14 வரை ஆச்சர்யமூட்டும் பரிசுகள் பொதிந்து வைக்கப்பட்டு இருந்தது.பரிசுகள் கட்டாயம் அவர்களை ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசும், Glass Source Drawing ஒன்றும், சான்றிதலும் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் பெற்றோர்களும் மாணவர்களும் புகையிலை குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து பயனுற வேண்டும் இந்நிகழ்வை தாய்மை அறக்கட்டளை முன்னெடுக்கிறது.
இவ்வருடமும் 106 மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு அடைந்து இருப்பார்கள் என்ற எங்களின் அகமகிழ்வை சொல்லில் விளக்க முடியாது.

நன்றி



***coday



#தாய்மைஅறக்கட்டளை

🙏🏻🙏🏻🙏🏻

🌱 தாய்மை அறக்கட்டளை (Thaimai Trust) 🌱"ஒரு சிறிய உதவி... ஒரு பெரிய மாற்றம்!"நமது சமூகத்தில் உதவி தேவைப்படும் பல குழந்தைகள...
31/05/2026

🌱 தாய்மை அறக்கட்டளை (Thaimai Trust) 🌱

"ஒரு சிறிய உதவி... ஒரு பெரிய மாற்றம்!"

நமது சமூகத்தில் உதவி தேவைப்படும் பல குழந்தைகள், முதியவர்கள் மற்றும் குடும்பங்கள் உள்ளனர். அவர்களின் வாழ்க்கையில் ஒரு புன்னகையை உருவாக்குவது நமது அனைவரின் பொறுப்பாகும்.

தாய்மை அறக்கட்டளை தொடர்ந்து கல்வி, சமூக நலன், விழிப்புணர்வு மற்றும் மனிதநேய சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.

🤝 நீங்கள் வழங்கும் சிறிய ஆதரவும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றக்கூடும்.

✨ மனிதநேயம் வளரட்டும்...
✨ அன்பும் கருணையும் பரவட்டும்...
✨ சமூக மாற்றம் நம்மிலிருந்தே தொடங்கட்டும்...

#தாய்மைஅறக்கட்டளை

🎨🌍 Our children are the heartbeat of our future, and their vision for a better world inspires us every day.On May 24, TH...
26/05/2026

🎨🌍 Our children are the heartbeat of our future, and their vision for a better world inspires us every day.

On May 24, THAIMAI TRUST proudly organized a Drawing Competition in Coimbatore, where young artists expressed powerful messages through creativity, imagination, and awareness.

As we approach 🚭 World No To***co Day and 🌱 World Environment Day, these students reminded us that a healthy life and a greener earth go hand in hand.

We are delighted to celebrate the talented young participants and winners whose artwork beautifully reflected the importance of:
✨ Healthy Living
✨ Environmental Protection
✨ Creativity & Awareness

This event was more than a competition — it was a meaningful step toward encouraging the next generation to think creatively and responsibly for a better tomorrow.

Together, let us continue building a cleaner, healthier, and greener Coimbatore. 💚

***coDay

6ம் வருட விழிப்புணர்வு ஓவிய போட்டி குறித்து செய்தி வெளியிட்ட "தினமலர்" நாளிதலுக்கும், செய்தியாளர் சிவா அவர்களுக்கும் நெஞ...
22/05/2026

6ம் வருட விழிப்புணர்வு ஓவிய போட்டி குறித்து செய்தி வெளியிட்ட "தினமலர்" நாளிதலுக்கும், செய்தியாளர் சிவா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

🙏🏻🙏🏻🙏🏻




Share and support this Awareness Drawing competition... May 24th this sunday... at NGR Memorial Higher sec school.  ***c...
22/05/2026

Share and support this Awareness Drawing competition... May 24th this sunday... at NGR Memorial Higher sec school.


***coDay


#தாய்மைஅறக்கட்டளை

24/05/2026 Sunday Thaimai Trust initiatedDrawing Competition On behalf ofWorld No To***co Day(May31)&World Environment D...
21/05/2026

24/05/2026 Sunday

Thaimai Trust initiated

Drawing Competition
On
behalf
of
World No To***co Day(May31)
&
World Environment Day(June5)
At
NGR Memorial Higher sec school, Ramanuja Nagar, Kamarajar Road,
Coimbatore-15

Titles:
💥Say No to To***co
Or
💥Save Environment

Timing:1 Hour
Event Timing: 8.30 am to 12.30 am

Attractive prizes and Certificates for participants..

*15ம் நாள் நீர் மோர் சேவை* தெய்வத்திரு முரளி வீரமணி அவர்கள் நினைவாக இன்று நீர்மோர் வழங்கப்பட்டது. நண்பர் ஸ்ரீதர் என்னுடை...
16/04/2026

*15ம் நாள் நீர் மோர் சேவை*

தெய்வத்திரு முரளி வீரமணி அவர்கள் நினைவாக இன்று நீர்மோர் வழங்கப்பட்டது.
நண்பர் ஸ்ரீதர் என்னுடைய பால்ய கால பள்ளி நண்பர். இப்போதும் நட்பு பாராட்டி வருவதோடு மட்டுமல்லாமல்... தாய்மை அறக்கட்டளையின் பல்வேறு சேவைகளில் பங்கெடுத்தும், உதவிகள் பல புரிந்தும் வருகிறார். இந்நிலையில் சென்ற வருடம் எதிர்பாராத விதமாக இறந்து போன தன்னுடைய அண்ணன் தெய்வத்திரு முரளி வீரமணி அவர்களின் நினைவாக.., பொதுமக்கள் பயனுற இன்றைய நாள் நீர்மோர் வழங்க அன்போடு கேட்டுக்கொண்டார்.

அவர் வேண்டுகோளுக்கு இணங்க இன்று வசந்த மில்ஸ் பகுதியில் வைத்து 300 பேர்களுக்கு சுவையான மசாலா நீர் மோர் வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய தாய்மை அறக்கட்டளை உளமாற பிரார்த்திக்கிறது.

நன்றி

🙏🏼🙏🏼🙏🏼



#நீர்மோர்சேவை
#தாய்மைஅறக்கட்டளை

Address

7/8, Kamatchi Nagar(Ext), Surya Nagar 1st Street, Sivalingapuram, Ondipudur, Coimbatore, Tamilnadu
Coimbatore
641016

Alerts

Be the first to know and let us send you an email when Thaimai trust cbe /தாய்மை அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thaimai trust cbe /தாய்மை அறக்கட்டளை:

Share

Category