21/04/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ:
அல்ஹம்துலில்லாஹ்…
19-04-2026 அன்று கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்
Informix’26 – Career Guidance Program சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி சகோ. சுஹைல் அஹமது அவர்கள் கிர்அத் ஓதித் துவக்கி வைத்தார்.
பின்னர் SIO தஞ்சாவூர் மாவட்ட தலைவர் சகோ. அஹமது அஸ்லம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜனாப் ஷபிகுர் ரஹ்மான் அவர்களும், திருநாகேஸ்வரம் யூனிட் பொறுப்பாளர் ஜனாப் ஹாஹா மாலிக் அவர்களும் துவக்க உரை வழங்கினார்கள்.
சீமாட்டி சில்க்ஸ் உரிமையாளர் ஜனாப் S.M. பஷீர் அஹமது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து கோவை ஹிதாயா கம்யூனிட்டி காலேஜ் முதல்வர் மு. சலீம் மொய்தீன் அவர்கள் “Why do we need to study?” (Philosophy of Education) என்ற தலைப்பில் உரையாற்றினார்.
Sio ZAC உறுப்பினர் சகோ. அஹமது தஸ்லீம் அவர்கள் Psychometric Test நடத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற இணை அமர்வுகளில்,
Engineering துறையில் வாய்ப்புகள் குறித்து ZAC உறுப்பினர் சகோ. முஹம்மது அஸருதீன்,
Medicine மற்றும் Allied துறைகள் குறித்து GIO ZAC உறுப்பினர் திருமதி. ஜுவைரியா அப்பாஸ்,
Science துறைகள் குறித்து முதல்வர் மு. சலீம் மொய்தீன்,
Arts & Humanities துறைகள் குறித்து சகோ. அப்துல் ஹமீத், சகோ. அப்துல் ஜலீல், சகோ. இஜாஸ் அஹமது மற்றும் சகோ. முஹம்மது ரய்யான் ஆகியோர் வழிகாட்டுதல்கள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஒப்புதல் அளித்த அல் அமீன் பள்ளி நிர்வாகத்திற்கும்,
Principal Dr. Maria Sophia அவர்களுக்கும்,
Correspondent Janab Er. Mohamed Rafi அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர்களுக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக.
இந்த நிகழ்ச்சி மாணவர்களின் எதிர்காலத்தை தெளிவுபடுத்திய ஒரு சிறந்த முயற்சியாக அமைந்தது. அல்லாஹ் இந்த முயற்சியை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்தும் இத்தகைய நன்மையான செயல்களுக்கு தௌஃபீக் அருள்வானாக.
ஆமீன்.
'26