Theni District Congress Committee

Theni District Congress Committee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Theni District Congress Committee, Political organisation, 126, கம்பம் சாலை, Theni.

தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேனி மாவட்ட மகளிர் காங்கிரஸ் அமைப்பினரின் ஆலோசனை பொதுக்கூட்டம்  பழனிசெட்டிபட்டி பே...
12/10/2015

தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேனி மாவட்ட மகளிர் காங்கிரஸ் அமைப்பினரின் ஆலோசனை பொதுக்கூட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மாவட்ட காங்கிரஸ் எம்.பி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினரும், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவியுமான விஜயதாரணி எம்.எல்.ஏ கலந்து கொண்டார். கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் மற்றும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவருமான டி. அப்பு (எ) பாலசுப்பிரமணியம், தேனி நகர் காங்கிரஸ் தலைவர் எம்.கே. முனியாண்டி முன்னிலை வகித்தனர். தேனி பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம். முத்துப்பாண்டி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இராஜா முகமது, வர்த்தக காங்கிரஸ் தலைவர் இ.ரா. சங்கரநாராயணன் , தேனி நகர் மன்ற உறுப்பினர் கே. சுந்தர்ராஜ் மற்றும் மகளிர் காங்கிரஸ் உறுப்பினர்களும், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக அண்ணல் மகாத்மா காந்தி பிறந்த தினம் மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு த...
12/10/2015

தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக அண்ணல் மகாத்மா காந்தி பிறந்த தினம் மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு மாவட்ட முழுவதும் மதுவிலக்கு மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சின்னமனூர் நகர் காங்கிரஸ் மற்றும் சின்னமனூர் வட்டாரம், போடி நகரம், கோம்பை பேரூராட்சி, கூடலூர் நகராட்சி, பெரியகுளம் வட்டாரம் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு...

இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி அஞ்சல் தலைகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்ததைக் கண்டித்து தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்...
19/09/2015

இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி அஞ்சல் தலைகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்ததைக் கண்டித்து தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக 18/09/2015 அன்று மாவட்ட தலைநகரான தேனியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.பி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த அறவழி ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளரும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவருமான அப்பு (எ) பாலசுப்பிரமணியம் மற்றும் தேனி நகர் காங்கிரஸ் தலைவர் எம்.கே.முனியாண்டி முன்னிலை வகித்தனர். மேலும் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.அழகராஜா, பேச்சாளர்கள் சிவமணி மற்றும் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாவட்ட துணைத் தலைவர்கள் பாலசுப்பிரமணியம், முத்துவேல்ராஜ், இராமர, மாவட்ட செயலாளர்களான அப்துல் ஹக்கீம், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஸ்ரீதர்,மனோகரன், சன்னாசி, பழனிச்சாமி, தேனி நகர் மன்ற உறுப்பினர்களான சுந்தர்ராஜ், சுப்புலட்சுமி, வசந்தா , நகரத் தலைவர்களான முசாக் மந்திரி, முருகன், போஸ், வட்டாரத் தலைவர்களான மொய்துன் அப்துல் காதர், புருசோத்தமன், இராஜேஷ் கண்ன், இராமகிருஷ்ணன், ஆரோக்கியராஜ், அசோக்ராஜ், தேனி நகரச் செயலாளர்களான அபுதாஹீர், எஸ். முத்தையா, மகளிரணியை சேர்ந்த சோமுத்தாய், எழிலரசி, வசந்தா மற்றும் மாவட்ட காங்கிரஸ் வர்த்தக அணி தலைவர் சங்கர நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆளும் மத்திய மோடி அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

காங்கிரஸ் துணைத் தலைவர் இராகுல்காந்தி 23ம் தேதி திருசசியில் நடக்கும் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச...
24/07/2015

காங்கிரஸ் துணைத் தலைவர் இராகுல்காந்தி 23ம் தேதி திருசசியில் நடக்கும் காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இது தொடர்பான தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தேனி-பழனிசெட்டிபட்டியில் நடந்தது.

மாவட்ட தலைவர் எம்.பி.முருகேசன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.அழகராஜா சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் அப்பு என்கின்ற பாலசுப்பிரமணியன், தேனி நகர தலைவர் முனியாண்டி முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு திருச்சி வரும் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் இராகுல் காந்திக்கு மிகச் சிறப்பான முறையில் வரவேற்க தேனி மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார். மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. 70 சதவீதம் விவசாயிகள் உள்ள இந்தியாவில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கொண்டு வந்து விவசாயிகளை அச்சுறுத்துகிறார். இதனால், மோடி மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் இணையும் என்ற நம்பிக்கையுள்ளது. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் விளையும் பொருட்களை, அனைத்து மாநிலங்களிலும் விற்க உரிமை வேண்டும். கேரள அரசு தமிழக காய்கறிகளுக்கு விதித்துள்ள நிபந்தனைகளை நீக்க வேண்டும் என்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள், நகர, வட்டார தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 113வது பிறந்த நாள் விழாவினை கம்பம் நகர் காங்கிரஸ் ...
19/07/2015

தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 113வது பிறந்த நாள் விழாவினை கம்பம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. கூடலூர் எம்.பி.முருகேசன் தலைமையில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கம்பம் நகர் காங்கிரஸ் தலைவர் திரு. போஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். உடன் தேனி மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சோமுதாய், தேனி மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர்கள் திரு. பதுரூதீன், எம்.பி. ராமர், பொதுச்செயலாளர் திரு. எஸ். மனோகரன், சாட்டை சாதிக், கம்பம் தீன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கர்மவீரர் காமராஜர் அவர்களின் 113வது பிறந்த நாள் விழாவினை தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் தேனி மாவட்ட கா...
19/07/2015

கர்மவீரர் காமராஜர் அவர்களின் 113வது பிறந்த நாள் விழாவினை தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவருமான திரு. அப்பு (எ) பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் கொடியேற்றி அய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கர்மவீரர் காமராஜர் அவர்களின் 113வது பிறந்த நாள் விழாவினை ஆண்டிபட்டி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக அதன் தலைவர் திரு. க...
19/07/2015

கர்மவீரர் காமராஜர் அவர்களின் 113வது பிறந்த நாள் விழாவினை ஆண்டிபட்டி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக அதன் தலைவர் திரு. கே. ராஜேஷ்கண்ணன் தலைமையில் கொடியேற்றி அய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்து பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஆண்டிபட்டி பேரூர் காங்கிரஸ் தலைவர் திரு. துரைக்கண்ணு ஆசிரியர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு. ஆர்.பி.சரவணன் ஏற்பாடு செய்தார். உடன் ஆனந்தராஜ், முருகன், தேனி மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ், ராஜாமணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கல்விக் கண் திறந்த கர்ம வீரர் ஐயா காமராஜர் அவர்களின் 113வது பிறந்த நாளான 15-07-2015 புதன் கிழமை தேனி மாவட்ட காங்கிரஸ் கம...
16/07/2015

கல்விக் கண் திறந்த கர்ம வீரர் ஐயா காமராஜர் அவர்களின் 113வது பிறந்த நாளான 15-07-2015 புதன் கிழமை தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேனி நகரில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை பள்ளியில் உள்ள காமராஜர் ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி.முருகேசன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து ஐயாவிற்கு மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் திரு. அப்பு (எ) பாலசுப்பிரமணியம், மாவட்ட துணைத் தலைவர் முத்துவேல்ராஜ், தேனி நகர் காங்கிரஸ் தலைவர் எம்.கே. முனியாண்டி, தேனி வட்டார காங்கிரஸ் தலைவர் திரு. ஆரோக்கியராஜ், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரு. அப்துல் ஹக்கீம், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கருப்பசாமி, தேனி நகர் காங்கிரஸ் துணைத் தலைவர் சையது அபுதாஹீர், நகர் காங்கிரஸ் தலைவர் செயலாளர் முத்தையா, தேனி பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் முத்துபாண்டி, இளைஞர் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ஞானசேகரன், சுதாகர், துரைப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திடுவோம் என்ற தலைப்பில் வெ...
11/07/2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திடுவோம் என்ற தலைப்பில் வெளியான புத்தகம்.....

21/06/2015
20/06/2015
01/05/2015

மாராட்டிய மாநிலத்தில் நேற்று நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, விவசாயிகளை சந்தித்து பேசினார்.
விவசாயிகள் பிரச்சினை
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் பிரச்சினையை கையில் எடுத்து இருக்கிறார்.
டெல்லியில் சமீபத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டு பேசிய அவர், பின்னர் பஞ்சாப் மாநிலத்துக்கு சென்று விவசாயிகளை சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்திலும் பேசினார்.
ராகுல் காந்தி நடைபயணம்
மராட்டிய மாநிலத்தில் கணிசமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இந்த நிலையில், ராகுல் காந்தி நேற்று மராட்டிய மாநிலத்துக்கு சென்று நடைபயணம் மேற்கொண்டு விவசாயிகளை சந்தித்து பேசினார்.
இதற்காக நேற்றுமுன்தினம் இரவு நாக்பூர் நகருக்கு வந்த அவர், நேற்று காலை அமராவதி மாவட்டத்தில் உள்ள கன்ஜி கிராமத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூர நடைபயணத்தை தொடங்கினார். இதற்காக அவர் கன்ஜி கிராமத்துக்கு சென்ற போது வழியில் கொண்டாலி, தாலேகான் கிராமங்களில் ஏராளமான காங்கிரசார் சாலையில் திரண்டு நின்று ராகுல் காந்தியை வரவேற்றனர். தாலேகான் கிராமத்தில், சாலையில் நின்றவர்களிடம் ராகுல் காந்தி சிறிது நேரம் பேசிவிட்டு கன்ஜி கிராமத்துக்கு சென்றார்.
கொளுத்தும் வெயிலில்...
கன்ஜி போய்ச் சேர்ந்ததும் ராகுல் காந்தி அங்கிருந்து ராம்கோன் கிராமத்துக்கு 15 கிலோ மீட்டர் தூர நடைபயணத்தை தொடங்கினார். முன்னதாக, கன்ஜி கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் நிலேஷ் வால்கே, அம்பாதாஸ் வாகிலே ஆகியோரின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அந்த கிராமத்தில் அனாதை இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலரையும் சந்தித்து பேசினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் ஷாபூர் கிராமத்தின் வழியாக தனது நடைபயணத்தை தொடர்ந்தார். கொளுத்தும் வெயிலில் நடந்து சென்ற ராகுல் காந்தியுடன் அகில இந்தியா காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், டெல்லி மேல்–சபை உறுப்பினர் அவினாஷ் பாண்டே மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்றனர். தொண்டர்கள் காங்கிரஸ் கொடிகள் மற்றும் பதாகைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். வழியில் உள்ள கிராமங்களில், பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த விவரங்களை அவர்களிடம் ராகுல் காந்தி கேட்டு அறிந்தார்.
விவசாயிகளிடம் குறை கேட்டார்
ஹிராபூர் என்ற கிராமத்தில் கோவிலில் சணல் தரைவிரிப்பில் அமர்ந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது, தங்களுக்கு ஏற்பட்டுள்ள பயிர் இழப்புகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் முறைப்படி இழப்பீடு வழங்குவது இல்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர். ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளின் உற்பத்தி செலவு மிகவும் குறைவாக இருந்தபோதிலும் அவை தங்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள், தொழிற்சாலைகள் அமைப்பதற்காக தங்கள் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்திவிடும் என்ற அச்சம் இருப்பதாகவும் கூறினார்கள்.
தாமன்கோன் தாலுகாவில் மட்டும் கடந்த 2006–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரை 171 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் ராகுல் காந்தியிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.

Address

126, கம்பம் சாலை
Theni
625531

Website

http://www.inc.in/?utm_source=googlesem&utm_medium=cpc&utm_term=inchome&utm_campaign=SEM&gclid=CKza

Alerts

Be the first to know and let us send you an email when Theni District Congress Committee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Theni District Congress Committee:

Share