28/03/2026
காஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வரும் SH Electronics தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைத்ததற்காக நிர்வாகம் மேற்கொண்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறது.
சங்கம் அமைத்ததையே குற்றமாக்கி, ஒட்டுமொத்தமாக 90 நிரந்தர தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்திருப்பது தொழிலாளர் உரிமைகளுக்கு எதிரான வெளிப்படையான தாக்குதலாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கள் வாழ்வாதார உரிமைக்காக அமைதியான முறையில் போராடி வந்த தொழிலாளர்கள், தங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயம் கோரி மார்ச் 27 அன்று குடும்பத்துடன் நிர்வாகத்தை அணுகிய நிலையில், சுமார் 80 தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கைது செய்து காவல்துறை மண்டபத்தில் அடைத்திருப்பது ஜனநாயக உரிமைகளை மீறும் செயல் ஆகும்.
மேலும், போராட்டத்தை தூண்டியதாக பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் E.முத்துக்குமார், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் கார்த்திக் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து நள்ளிரவு வேளையில் வேலூர் மத்திய சிறையில் அடைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
நிர்வாகத்தின் ஊதுகுழலாக செயல்படும் காவல்துறை நடவடிக்கைகளையும், தேர்தலை காரணம் காட்டி மௌனம் காக்கும் அரசு நிர்வாகத்தையும் சிஐடியு மத்திய சென்னை மாவட்ட குழு வன்மையாக கண்டிக்கிறது.
தமிழக அரசே!
தொழிலாளர் நலத்துறையே!
~ சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட 90 தொழிலாளர்களையும் உடனடியாக பணியில் மீண்டும் அமர்த்து!
~ கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்!
~ தொழிற்சங்க உரிமைகளை மதித்து, தொழிலாளர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்து!
*தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் இந்த போராட்டம் தொடரும் என்பதை #சிஐடியு உறுதியாக முன்னெடுக்கும்*