01/02/2025
இன்று திருவிதாங்கோடு அரசு மேல் நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா எளிய முறையில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அக்பர் ஷாபி அவர்கள் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் இப்பள்ளிக்கு இட உதவி மற்றும் பல்வேறு உதவி செய்தவர்களின் வாரிசுதாரர்கள், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவ, மாணவியர்கள், பல்வேறு முன்னாள் மாணவ குழுமங்கள் என பலர் கலந்து கொண்டு நூற்றாண்டு விழாவை சிறப்பித்தனர்.
மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
இந்நிகழ்ச்சியை திருவை அரசு மேல்நிலைப் பள்ளி ஏற்பாடு செய்திருந்தது.