தமிழ்ப்புலிகள் கட்சி திருச்செங்கோடு

  • Home
  • India
  • Tiruchengodu
  • தமிழ்ப்புலிகள் கட்சி திருச்செங்கோடு

தமிழ்ப்புலிகள் கட்சி திருச்செங்கோடு சாதி ஒழிப்பே! தமிழர் விடுதலை !!

15/07/2026

நேற்று 14.07.2026 நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டத்தில் தமிழின தளபதி அண்ணன் நாகை திருவள்ளுவன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் காணொளி

15/07/2026
*சேலம் மாவட்டம் ஒதியத்தூரில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை உடனே திறந்திடு! சிலையை திறக்க விடாமல் தடுக்கும் சாதி வெறியர்...
14/07/2026

*சேலம் மாவட்டம் ஒதியத்தூரில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை உடனே திறந்திடு! சிலையை திறக்க விடாமல் தடுக்கும் சாதி
வெறியர்களை உடனே கைது செய்!*

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் ஒதியத்தூரில் ஏற்கனவே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சிலை இருந்த இடத்தில் கம்பீரமான புதிய சிலையை நிறுவுவதற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு அப்பகுதி தலித் மக்கள் பணிகளை தொடங்கினர். நீண்ட காலதாமதத்திற்கு பிறகு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டதின் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலையை திறக்க சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கடந்த ஜூலை 10-ம் தேதி புதிய சிலையை திறப்பதற்கான நிகழ்வு நடைபெறவிருந்தது.

நாற்காலியில் கால்மேல்கால்போட்டு அமர்ந்திருக்கும் வடிவிலான புதிய சிலையை பொறுத்துக்கொள்ளமுடியாத சாதிவெறி வன்முறை கும்பலானது திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டது.
இந்த வன்முறைச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகளும் 15க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் காவல்துறை வன்முறை கும்பலை கைது செய்வதை விடுத்து அப்பாவி தலித் மக்கள் மீது தடியடி நடத்தி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதோடுமட்டுமல்லாமல் புரட்சியாளர் அம்பேத்கர் சிலையையும் தகரத்தால் மூடிவைத்துள்ளது.

கொள்கை தலைவர்களில் ஒருவராக உள்ள புரட்சியாளர் அம்பேத்கரை ஏற்றுக் கொண்டுள்ளதாக் கூறும் தவெக அரசானது அவரது சிலையை சாதி வெறிக்கும்பலுக்கு அஞ்சி திறக்காமல் தகரத்தை வைத்து மறைத்து இருப்பது ஜனநாயக விரோதமானதும் கண்டணத்திற்குரியதானதாகும்.

சாதிவெறியோடு அம்பேத்கர் சிலையை திறக்க விடாமல் தடுக்கும் சாதிவெறிக்கும்பலையும் அதற்கு துணைபோகும் அரசு அதிகாரிகளையும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கைது செய்ய வேண்டுமென தமிழ்ப்புலிகள் கட்சி வலியுறுத்துகிறது.

இந்திய அரசியல் சாசனத்தை வரையறுத்து மானுட விடுதலைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமைகளையும் சட்ட வடிவமாக மாற்றிக் கொடுத்த உலகம் போற்றும் தலைசிறந்த தலைவரான புரட்சியாளர் அம்பேத்கரை குறுகிய சிந்தனையுடன் அணுகுவது சாதிய மனநிலையேயாகும்.

இந்த சாதிய மனநிலைக்கு தமிழக அரசு அடிபணியாமல் ஒட்டுமொத்த இந்திய மக்களின் ஒப்பற்ற தலைவரான புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கம்பீரமான சிலையை தக்க பாதுகாப்புடன் ஒதியத்தூரில் உடனே திறந்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்ப்புலிகள் கட்சி வலியுறுத்துகிறது.

#நாகைதிருவள்ளுவன்
தலைவர்
#தமிழ்ப்புலிகள்_கட்சி

நாள்: 13/7/2026
இடம்: கோவை.

Address

Tiruchengodu

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்ப்புலிகள் கட்சி திருச்செங்கோடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share