Trichy Police Range

Trichy Police Range Truth alone triumps

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கவும், கேடயம் திட்டத்தின் கீழ் கொண்டு வந்த உதவி எண்ணை மக்கள் மனதில் பதிய வைக்கும் என்...
23/02/2021

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கவும், கேடயம் திட்டத்தின் கீழ் கொண்டு வந்த உதவி எண்ணை மக்கள் மனதில் பதிய வைக்கும் என்ற நோக்குடன் களப்பணியாற்றும் திருச்சி சரக காவல்துறை!!!

~பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறை *கேடயம்(SHIELD):6383071800, 9384501999*
ஆகிய உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வு.~

23/02/2021

உலக சிந்தனை நாள், ஆண்டுதோறும் பிப்ரவரி 22 அன்று அனைத்து பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களால் கொண்டாடப்படுகிறது. உல...
22/02/2021

உலக சிந்தனை நாள், ஆண்டுதோறும் பிப்ரவரி 22 அன்று அனைத்து பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களால் கொண்டாடப்படுகிறது.

உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள தங்கள் "சகோதரிகள்" (மற்றும் "சகோதரர்கள்"), வழிகாட்டுதலின் பொருள் மற்றும் அதன் உலகளாவிய தாக்கம் பற்றி அவர்கள் சிந்திக்கும் நாள்

பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day)   பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்...
21/02/2021

பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

21.02.1952 -ம் தேதியன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கவும், கேடயம் திட்டத்தின் கீழ் கொண்டு வந்த உதவி எண்ணை மக்கள் மனதில் பதிய வைக்கும் என்...
20/02/2021

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கவும், கேடயம் திட்டத்தின் கீழ் கொண்டு வந்த உதவி எண்ணை மக்கள் மனதில் பதிய வைக்கும் என்ற நோக்குடன் களப்பணியாற்றும் திருச்சி சரக காவல்துறை!!!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறை *கேடயம்(SHIELD):6383071800, 9384501999*
ஆகிய உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வு.

20/02/2021

*சாலை பாதுகாப்பு - உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள்* 32வத...
17/02/2021

*சாலை பாதுகாப்பு - உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள்*

32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் 17.02.2021 இன்று நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை மற்றும் உருமு தனலெட்சுமி கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் *முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப* அவர்கள் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் பேசும் பொழுது *மாணவர்களே இந்நாட்டின் சக்தி மிகுந்த ஆயுதம்* என்றும் மாணவர்களாகிய உங்கள் கையில்தான் சாலை பாதுகாப்பு உள்ளது என்றும் சாலை பாதுகாப்பு என்பது *ஒருவரின் பாதுகாப்பு மட்டுமல்ல எதிரில் வரும் நபர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகவும்* ஆகையினால் அனைவரும் பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார்,

மேலும் இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்ச்சி என்பது *முடியும் நிகழ்ச்சி அல்ல இது ஒரு தொடக்கம்* அது மாணவர்களாகிய உங்கள் கையில் உள்ளது, என்றும் ஆகையால்தான் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களாகிய உங்கள் முன் நிகழ்த்து கின்றோம்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மணிகண்டன் திருவெறும்பூர் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் குமார், காவல் ஆய்வாளர் திரு.ஞானவேல், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செங்குட்டுவன் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இனாம் குளத்தூர் காவல் நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட  திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்16.02.2021 திருச்சி சரக காவ...
17/02/2021

இனாம் குளத்தூர் காவல் நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்

16.02.2021 திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் *முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப* அவர்கள் ஜீயபுரம் காவல் உட்கோட்டம், இனாம் குளத்தூர் காவல் நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு, CDR file பார்வையிட்டு இனாம் குளத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு ஏதேனும் குறைகள் உள்ளதா என்று கேட்டு, உங்கள் குறைகளை சொல்ல தயங்கினாள் என்னுடைய Personal Phone நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம் .

மேலும் இனாம் குளத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவலர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

புதிதாக கட்டப்பட்ட இனாம்குளத்தூர் காவலர் குடியிருப்பு பார்வையிட்ட திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்.16.02.202...
16/02/2021

புதிதாக கட்டப்பட்ட இனாம்குளத்தூர் காவலர் குடியிருப்பு பார்வையிட்ட திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்.

16.02.2021 இன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் *முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப* அவர்கள் ஜீயபுரம் காவல் உட்கோட்டம் இனாம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட காவலர் குடியிருப்பை பார்வையிட்டார்.

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் காவலர் குடியிருப்பு மாதிரி வரைபடங்களை பார்வையிட்டு, குடியிருப்பில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளதா என்றும் தண்ணீர் மற்றும் மின்சாரம் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும், குடியிருப்பின் ஓரங்களில் மரங்களை நட்டு வைத்து பசுமை வளர்க்க வேண்டும் மேலும் அருகில் இருந்த சார்பு ஆய்வாளர் குடியிருப்பை பார்வையிட்டு கதவு, ஜன்னல், தரத்தை சோதனை செய்து நன்முறையில் கட்டியுள்ளனர் என்று பாராட்டு தெரிவித்தார்

கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்(VVPO) என்ற பெயரில் கிராம மக்களிடையே உள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சனை களையெடுக்கும் திருச்ச...
16/02/2021

கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்(VVPO) என்ற பெயரில் கிராம மக்களிடையே உள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சனை களையெடுக்கும் திருச்சி சரக காவல் துறையினர்!!!

16.02.2021 இன்று திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் *முனைவர்* *Z.ஆனி விஜயா இ.கா.ப* அவர்களின் தலைமையில், ஜீயபுரம் காவல் உட்கோட்டம், இனாம் குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மாபேட்டை கிராமப்பகுதியில் VVPO திரு.S. கேசவன்(HC;715) அவர்கள் நியமிக்கப்பட்டார்

கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்(VVPO) பணியானது கிராமத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உரிய நேரத்தில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இனாம் குளத்தூர் கிராம மக்கள் பேசும் பொழுது திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர், *காவல்துறை உங்கள் நண்பன்* என்பதற்கு முன்னுதாரணமாக செயல்படுகிறார் என்றும், அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க கொண்டுவந்த *கேடயம்* திட்டம் பற்றியும், கிராம மக்களுக்கு செய்யும் நன்மைகளைப் பற்றியும், பாராட்டி கூறினார்கள். மேலும் இனாம் குளத்தூர் ராணுவ வீரர் காவல் துறையினர் கொண்டுவரும் திட்டங்கள் பற்றியும் மக்களை பாதுகாக்கும் முறைகள் பற்றியும் புகழ்ந்து பேசினார்.

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் பேசும் பொழுது இனாம் குளத்தூர் அனைத்து விதமான பிரச்சினைகளையும், தேவைகளையும் VVPO துணையுடனே செயல்படுத்தலாம் என்றும் பொதுமக்கள் எப்பொழுதும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்
*ஒற்றுமையே வலிமை*

இனாம் குளத்தூர் ராணுவ வீரர் பேசியதை கேட்ட திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் ராணுவ வீரர்களின் மேல் காவல் துறைக்கு எப்பொழுதுமே நன்மதிப்பு உள்ளது என்றும், ராணுவ வீரர் ஒரு சிலை போல் செயல்படும் நாட்டின் தெய்வங்கள் என்று புகழாரம் சூட்டினார்💐💐💐

காவல்துறையின் பணியானது கடைக்கோடியில் இருக்கும் கிராம மக்களையும் போய் சேர வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் திருச்சி சரக காவல்துறையினர்!!!

Address

Ragavendra
Tirumangalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy Police Range posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share