Nalini Shantha Kumari

Nalini Shantha Kumari வார்த்தைகளில் கவிதை, செயல்களில் நீதி – ஒரு தமிழ்பெண்ணின் பயணம்

A.D.W. நளினி சந்தகுமாரி,
பி.காம்., பி.எட்., எம்.ஏ., எல்.எல்.பி. (Hons.)

உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தா...
14/08/2026

உலகிலேயே 40 வருஷம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்..!

அதிலும் கோவை சிறைதான், வஉசிக்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..!

அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்... ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..!

ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களை கட்டி தெருவெல்லாம் இழுத்து சென்றுள்ளனர்..!

வஉசிக்கு சிறைக்குள் தனி ரூம்.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வஉசியை அடைத்துவைத்தனர்..!

ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்.. ஒரே ஒரு டிரஸ் தந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது.

ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டவருக்கு, ஜெயிலில் கூழ் தந்தார்கள்.. அதுவும் புளித்து போயிருந்தது.. சில சமயம் அந்த கூழில் புழுக்கள் மிதக்குமாம்..!

உடல்நிலை மோசமானதால், ஒருநாள் மட்டும் அரசி சோறு கேட்டாராம் வஉசி.. அதற்காக 3 நாளைக்கு, அந்த கூழை கூட தராமல் பட்டினி போட்டுள்ளான் அந்த ஜெயிலர் மிஞ்ஜேல்.

சணல் கிழிக்கும் மிஷினை கையாலேயே சுற்ற வேண்டும்.. இதுதான் வஉசிக்கு தரப்பட்ட முதல் வேலை... அப்படி செய்ததால், வஉசியின் கைகளில் உள்ள தோல் கிழிந்து ரத்தம் கொட்டி உள்ளது.. அதை பார்த்து ஒரு கைதி, மனசு கேட்காமல் ஓடிவந்து மிஷின் சுற்றுவதை தடுத்துள்ளார்..

ஆனால் அந்த கைதியை அடித்து நொறுக்கினான் மிஞ்ஜேல்... பிறகு, கையால் செய்யும் வேலைகளை தராமல், செக்கிழுக்கும் வேலையை தந்துள்ளனர்.. அதாவது மாட்டுக்கு பதில் வஉசியை பூட்டினர்.. அதுவும் உச்சிவெயிலில்.. இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டால், சவுக்காலேயே அடிப்பார்கள்..!

வஉசியின் மதிப்பு தெரிந்த கைதி ஒருவர், தன்னுடைய தலைக்கு மேல் 2 கைகளையும் கூப்பி "வணக்கம் ஐயா" என்றார்.. அவ்வளவுதான், ஜெயிலுக்குள் கலவரம் வெடித்து, ஒரு கைதி துப்பாக்கி சூட்டில் இறக்குமளவுக்கு பிரச்சனை செய்துவிட்டான் அந்த ஜெயிலர்.

வஉசி விடுதலை செய்யப்பட்டும் தன்னுடைய வக்கீல் பணியை தொடர முடியாத அளவுக்கு லைசென்ஸ் பிடுங்கிவிட்டனர்.. ஒரு அரிசி கடையில் வேலை பார்த்தார்.. நாள் முழுக்க வேலை பார்த்துவிட்டு, 4 ஆழாக்கு அரிசியோடு வீட்டுக்கு போவாராம்.. இந்த விஷயம் தெரிந்த அந்த மளிகைக் கடைக்கு சீல் வைத்து விட்டனர் பிரிட்டிஷ் அதிகாரிகள்..!

அரை வயிற்று கஞ்சிக்குகூட கஷ்டப்படும் நிலை வந்ததால்தான், தலையில் மண்ணெண்ணெய் சுமந்து விற்றுள்ளார்...!

இதைவிட கொடுமை, தன்னுடைய வக்கீல் உரிமத்தை மீட்டெடுக்க கோர்ட்டில் வாதாடி உதவ வேண்டும் என்று வஉசி கேட்டதற்கு, மூத்த வக்கீலான மூதறிஞர் ராஜாஜி மறுத்துவிட்டாராம்.

சில சமயம் காந்தியை விட்டுத்தராமலும், சில சமயம் காந்தியின் கொள்கைகளை ஏற்க முடியாமலும் எதிர்த்துள்ளார் வஉசி..!

வஉசி குடும்பம் வறுமையில் உள்ளதை கேள்விப்பட்டு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள தமிழர்கள், 5000 ரூபாய் நிதி திரட்டி காந்தியிடம் தந்திருக்கிறார்கள்.. "எப்படியாவது வஉசியிடம் இந்த பணத்தை சேர்த்துவிடுங்கள்" என்றும் சொல்லி உள்ளனர்.. லெட்டர் மேல் லெட்டர் போட்டும் காந்திக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தனர்..!

ஆனால் அந்த பணத்தை காந்தி, வஉசிக்கு தரவே இல்லையாம்.. "காந்தி கணக்கு" என்று நாம் சொல்கிறோமே.. அது இதுதான்! (திலகர், இந்த விஷயத்தில் தலையிட்டு பஞ்சாயத்து செய்து, அந்த பணத்தை வஉசிக்கு பெற்று தந்தது தனி கதை)

வஉசிக்கு இணையான ஒரு தியாகியோ, போர்க்குணமுள்ள ஒரு தலைவரோ இந்திய அரசியலிலேயே கிடையாது. ஆனாலும் சொந்த கட்சியில் உரிய மரியாதையை, அவர் இறந்தும்கூட தராதது வருந்தத்தக்கது.. சில வழக்குகளை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை என்பது கசப்பான உண்மை..!

உண்மையை சொல்வதானால், பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சீரழிந்ததைவிட, சொந்த கட்சியின் துரோகத்தால்தான் அதிகம் துவண்டுபோனார் வஉசி..!

பல்லாண்டு காலமாய் அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட பெருமை இந்தியாவிலேயே தமிழன் வஉசிக்குதான் உண்டு..!

இந்த தேசத்தின் தலைவராக உயர்ந்திருக்க கூடியவர் வஉசி..

இனியாகிலும் "வஉசி கப்பல் ஓட்டினார், செக்கிழுத்தார்" என்பதை மட்டுமே சொல்லி சுருக்கிவிடாமல், அவருடைய சமூக நீதி கொள்கையை மக்களிடையே, இன்றைய இளைஞர்கள் அழுத்தமாக பரப்ப செய்ய வேண்டும்..!

தமிழர்களை மட்டுப்படுத்தவும், ஏளனப்படுத்தவும், யாருக்குமே தகுதி கிடையாது என்பதையும் செவிப்பறையில் ஓங்கி அறைந்து சொல்ல வேண்டும்..!

தாமிரபரணிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.59 கோடியை சாக்கடைகளைத் தடுக்க பயன்படுத்தாமல் கரையை அழகுபடுத்துவதாக வீணடிப்பதா?தமிழ்நாட்டின...
14/08/2026

தாமிரபரணிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.59 கோடியை சாக்கடைகளைத் தடுக்க பயன்படுத்தாமல் கரையை அழகுபடுத்துவதாக வீணடிப்பதா?

தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றை மேம்படுத்துவதற்காக ஜெர்மனி வங்கியிலிருந்து கடனாகப் பெறப்பட்ட ரூ.59.05 கோடியை நெல்லை மாநகரத்தில் 7 கி.மீ தொலைவுக்கு தாமிரபரணி ஆற்றின் கரைகளை அழகுபடுத்தும் பணிகளுக்காக செலவிட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றைத் தூய்மைப்படுத்தி காப்பாற்றுவதற்காக செலவிடப்பட வேண்டிய நிதியை, தேவையில்லாத ஆடம்பர செலவுகளுக்காக பயன்படுத்துவதற்கு அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளியில், நெல்லை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட கருப்பந்துறை முதல் மணிமூர்த்தீஸ்வரம் வரை சுமார் 7 கிலோமீட்டர் நீளமுள்ள ஆற்றங்கரை பகுதி ஐந்து தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் படித்துறைகள், பூங்காக்கள், நடைபாதைகள், மக்கள் அமரும் இடங்கள், உணவகம் ஆகியவை ரூ.59.05 கோடியில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஜெர்மனியின் KfW வளர்ச்சி வங்கியிலிருந்து கடனாகப் பெறப்படுகிறது.

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தாய்க்கு உடனடியாக மருத்துவம் தேவைப்படும் சூழலில், பக்கத்து வீட்டுக்காரரிடம் கடன் வாங்கி பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்தால், அது எவ்வளவு அபத்தமான செயலாக இருக்குமோ, அதேபோல் தான் தாமிரபரணியைக் காக்கும் விவகாரத்தில் அரசின் அணுகுமுறையும் உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான பொதிகை மலையில் பிறக்கும் தாமிரபரணி ஆறு, மூலிகை வனங்களைக் கடந்து பயணிப்பதால் அது நோய்களைப் போக்கும் ஆறாக திகழ்ந்தது. ஆனால், இப்போது நோய்களை பரப்பும் நோயாக மாறி விட்டது. இதற்கு காரணம் கழிவுகளைக் கலக்கச் செய்வதில் தொடங்கி, அனைத்துச் சீரழிவுத் தாக்குதல்களும் தாமிரபரணி ஆற்றின் மீது தொடர்ந்து நடத்தப்படுவது தான். தாமிரபரணி ஆற்றைக் காக்க வேண்டும் என்பதற்காக முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர், 2018-ஆண்டில் தொடர்ந்த வழக்கில் 2024-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் நாள் தீர்ப்பளித்த நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதியரசர் புகழேந்தி ஆகியோர் ‘‘தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக தடை செய்ய வேண்டும்’’ என உத்தரவு பிறப்பித்தார்கள். ஆனால், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னெற்றமும் ஏற்படவில்லை.

சீரழிவை எதிர்கொண்டு வரும் தாமிரபரணி ஆற்றை கடந்த ஆண்டு ஆய்வு செய்த நீதிபதிகள், திருநெல்வேலி மாநகரில் உருவாகும் கழிவுகள் எதுவும் ஆற்றில் கலக்கக் கூடாது; அதற்கு வசதியாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆணையிட்டனர். ஆனால், அதற்கும் எந்த பயனும் இல்லை. கடந்த 2025&ஆம் ஆண்டு அக்டோபர் 7&ஆம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் ஒரு கட்டமாக தாமிரபரணி ஆற்றை நேரில் ஆய்வு செய்த நான், தாமிரபரணியை காக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனாலும் பயனில்லை. இந்த விவகாரத்தில் அரசின் அலட்சியத்திற்கு கண்டனம் தெரிவித்த மதுரை உயர்நீதிமன்றம், தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யும்படி, இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று போற்றப்படுபவரான இராஜேந்திர சிங் அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அவரும் சில மாதங்களுக்கு முன் தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்து விரைவில் வரைவு அறிக்கை தயாரித்துத் தருவதாக உறுதி அளித்துள்ளார்.

இத்தகைய சூழலில், தாமிரபரணி ஆற்றை மேம்படுத்துவதற்காக ஜெர்மனி வங்கியிடமிருந்து கடனாக பெறப்பட்ட தொகையை தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை தடுப்பதற்காக மட்டும் தான் அரசு பயன்படுத்த வேண்டும். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் மொத்தம் 23 இடங்களில் தாமிரபரணி ஆற்றில் சாக்கடைகள் கலக்கின்றன. அதுமட்டுமின்றி, நெல்லை மாநகரத்தில் இருந்து தாமிரபரணியில் சங்கமமாகும் 4 பெரிய கால்வாய்களில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் திடக்கழிவுகள் கலக்கவிடப்படுகின்றன. இவற்றின் வாயிலாக தினமும் 200 டன் திடக்கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் கலக்கின்றன. இதைத் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள நிதி தான் பெருந்தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போது நிதி கிடைத்துள்ள நிலையில், அந்த நிதியை ஆற்றை தூய்மைப்படுத்துபதற்கு பயன்படுத்தாமல் அழகுபடுத்த பயன்படுத்துவதை ஏற்க முடியாது.

தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுகளைத் தடுத்து, அந்த ஆற்றை தூய்மைப்படுத்தாமல், அதன் கரைகளை அழகுபடுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. ஆற்றை தூய்மைப்படுத்தாமல், அதன் கரைகளை ரூ.59 கோடி அல்ல.... ரூ.590 கோடியில் அழகுபடுத்தினாலும் அங்கு யாரும் செல்ல மாட்டார்கள். நெல்லை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 25 இடங்களில் ஆற்றின் படித்துறைகள் சேதமடைந்திருப்பது உண்மை தான். அவற்றை மட்டும் இடிந்து கற்களைக் கொண்டு சில லட்சங்களில் மாநகராட்சியே சரி செய்ய வேண்டும். ஜெர்மனி வங்கியிடமிருந்து கடனாக பெறப்பட்ட ரூ.59.05 கோடியையும் தாமிரபரணி ஆற்றில் சாக்கடைகளை கலப்பதை தடுத்து, தூய்மைப்படுத்துவதற்காக மட்டும் தான் தமிழக அரசு பயன்படுத்த வேண்டும்.

நெல்லை நகருக்கு வெளியில், பாபநாசத்தைக் கடக்கும் போது, அங்கு திதி என்ற பெயரில் ஆண்டுதோறும் 100 டன் பழைய துணிகள் வீசப்படுதல், சேரன்மாதேவி பகுதியில் 25 லட்சம் லிட்டர் தொழிற்சாலைக் கழிவுகள் கலக்கவிடப்படுதல் உள்ளிட்ட சீரழிவுகளைத் தடுக்கவும் தனித் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

“இவர்கள் 17, 18 வயதுடைய மாணவர்கள்… ஆனால் நான்கு வார்த்தைகளைக் கூட எழுத முடியவில்லை. நான்கு வார்த்தைகள்!” 😢அமெரிக்காவின் ...
14/08/2026

“இவர்கள் 17, 18 வயதுடைய மாணவர்கள்… ஆனால் நான்கு வார்த்தைகளைக் கூட எழுத முடியவில்லை. நான்கு வார்த்தைகள்!” 😢

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டனில் உள்ள Wheatley High School ஆசிரியர் Darius Williams, கல்வியாண்டின் இரண்டாவது நாளிலேயே தனது உயர்நிலைப் பள்ளி இறுதியாண்டு மாணவர்களில் பலருக்கு அடிப்படை வாசிப்பு மற்றும் எழுத்துத் திறனில் கடுமையான சிரமம் இருப்பதை உணர்ந்து உணர்ச்சிவசப்பட்டார்.

மதிய உணவு இடைவேளையில் அவர் பதிவு செய்த வீடியோவில், ஒரு எளிய வாசிப்பு பயிற்சியை படிப்படியாக மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்ததாகவும், கிட்டத்தட்ட பதிலையே சொல்லிக் கொடுத்த பிறகும், பல 17 மற்றும் 18 வயது மாணவர்களால் நான்கு வார்த்தைகள் கொண்ட ஒரு வாக்கியத்தைக் கூட நிரப்ப முடியவில்லை என்று கண்ணீருடன் கூறினார்.

ஆனால் Williams கூறிய மற்றொரு விஷயம் முக்கியமானது. இந்த மாணவர்களுக்கு சிக்கலான கருத்துகளைப் பேசுவதிலும், வாய்மொழியாக விவாதிப்பதிலும் திறமை இருந்தது. ஆனால் அவர்கள் மனதில் இருக்கும் அந்த எண்ணங்களை எழுத்து வடிவில் மாற்றுவதில் மிகப்பெரிய தடையை எதிர்கொண்டனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, அமெரிக்காவில் நிலவும் அடிப்படை எழுத்தறிவு சிக்கல் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.

சிலர் இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி, AI பயன்பாடு மற்றும் கல்விக் கொள்கைகளைக் காரணமாகக் குறிப்பிட்டனர். மற்றவர்கள், குழந்தைகளின் கல்வியில் வீட்டிலிருந்து கிடைக்கும் பெற்றோர் ஆதரவு குறைவதும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறினர்.

ஆனால் இந்த சம்பவம் ஒரு ஆசிரியரின் கண்ணீரை மட்டும் பற்றியது அல்ல.

மாணவர்கள் அடிப்படை வாசிப்பு மற்றும் எழுத்துத் திறனில் பின்தங்கியிருக்கும்போது, அவர்களை மீண்டும் அந்த அடித்தளத்துக்கு கொண்டு வர வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியர்களின் தோள்களில் விழுகிறது.

ஒரு குழந்தை பள்ளியின் இறுதி ஆண்டை அடைந்த பிறகுதான் இந்தப் பிரச்சினை தெரிய வருகிறது என்றால்… அந்தக் குழந்தையை மட்டும் குறை கூறுவது உண்மையான தீர்வா? 🤔

14/08/2026

தமிழகத்தையே உலுக்கிய தக்கலை வீடியோ! பள்ளி மாணவிகளின் செயலால் கொதித்தெழும் பெற்றோர்!

14/08/2026

*எப்போது #கல்யாணம் என ஒரு பெண்ணிடம் கேட்காதீர்கள், உங்களை விட அவளுக்கு அவள் வாழ்வின் மீது தீராபாசம் உண்டு.

*எப்பொழுது #குழந்தை பாக்கியம் என அவர்களிடம் கேட்காதீர்கள், உங்களை விட அவர்களுக்கு அவ் வாழ்வின் மீது தீராப்பற்று உண்டு

*எப்பொழுது #நல்ல_வேலைக்கு போகப் போகிறாய் என வேலை தேடும் இளைஞனிடம் கேட்காதீர்கள், உங்களை விட அவனுக்கு அவ் வாழ்விடம் தீராத் தேடலுண்டு

*ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் பலவீனங்களை இன்னொருவரிடம் விவாதிக்காதீர்கள், அவர்களை விட உங்கள் வாழ்வில் அதிக பலவீனம் உண்டு

*சர்ந்தோரின் தோல்வியை ரசிக்காதீர்கள், நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை

*மாற்றுத்திறனாளி வீதியால் சென்றால் அவனையே பார்க்காதீகள்

*இங்கே எல்லோருக்கும் தோல்வி, ஏமாற்றம், புறக்கணிப்பு, உண்டு ஏன் எனக்கு மட்டும் இப்படி என தொலையாதீர்கள்

*தோல்வி ஒரு போதை , ருசிக்க பழகுங்கள்

*அவமானம் ஒரு உணர்வு, மகிழப் பழகுங்கள்

*பிரிவு ஒரு நிகழ்வு, ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்

*எப்போழுது?? எனக் கேட்பவர்கள் உங்களை மகிழ்விற்க கேட்கவில்லை, அவர்கள் மகிழ்வதற்காக கேட்கிறார்கள் என கடந்திடுங்கள்

"கடந்து போறது தானே வாழ்க்கை"

தனுஷ் தெலுங்கு பேசும் நாயுடு சமூகமாக இருந்தாலும் தமிழ் மீது பற்று கொண்டு தமிழர் எழுச்சி கழகம் என்ற பெயரை வைத்திருப்பது ப...
14/08/2026

தனுஷ் தெலுங்கு பேசும் நாயுடு சமூகமாக இருந்தாலும் தமிழ் மீது பற்று கொண்டு தமிழர் எழுச்சி கழகம் என்ற பெயரை வைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் .....
ஆசை யாரை விட்டது??

அரிசி என்பது 25 கிலோ சிவாஜி பிராண்ட் மூட்டையாக சீல் பண்ணிய நிலையில் சூப்பர் மார்க்கெட்டின் அலமாரியின் முளைக்கும் என்று ந...
14/08/2026

அரிசி என்பது 25 கிலோ சிவாஜி பிராண்ட் மூட்டையாக சீல் பண்ணிய நிலையில் சூப்பர் மார்க்கெட்டின் அலமாரியின் முளைக்கும் என்று நம்பும் மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு வேண்டுமானால் இந்த உண்மை தெரியாமல் இருக்கலாம்.

தமிழகத்தில் எவ்வளவு பேர் விவசாயிகள்?

ஒரு மருத்துவரோ, சாப்ட்வேர் இன்ஜினியரோ அவர் மட்டும் தான் வேலை செய்வார். வீட்டில் உள்ள மற்றவர்கள் அவருக்கு பணிவிடை வேண்டுமானால் செய்யலாம்.

ஆனால் ஒரு விவசாய குடும்பத்தில் ஆண், பெண், இளையோர், முதியவர், நண்டு சிண்டு முதல் ஆடு மாடு வரை எல்லோரும் விவசாயிகள் தான்.

விவசாயியாக ஆண் பதிவு செய்யலாம். ஆனால் நெல் வெவிப்பது முதல் காயவைப்பது வரை, பயிர் வகைகளை Process செய்வது முதல் ஆடு மாடு வளர்ப்பது வரை வீட்டில் உள்ள எல்லோரும் செய்ய வேண்டும்.

சாணி அள்ளி போடுவதும், மாட்டை பிடித்து கட்டுவதும், மாலை ஆகி திரும்பாத கால்நடைகளை தேடி சென்று ஓட்டி வருவதும். நோய் வந்தால் அவற்றை மாட்டாஸ்பித்திரி ஓட்டிட்டு போறதும். என்று ஒரு ஜீவனை வளர்க்க ஒரு வீடே உழைக்க வேண்டும்.

ஒரு விளைச்சல் வீடு வந்து சேர்ந்து விலை ஆவதற்குள் அதில் உழைப்பை தராத, வேர்வை சிந்தாத ஒருத்தர் கூட இருக்க முடியாது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ற மாதிரி வேலைகளை ஆளுக்கு ஒன்றாக எடுத்து செய்து தான் விவசாயம் நடக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மென்பொறியாளர்கள் உட்பட பல்வேறு தொழில் செய்வோம் பலரும் விவசாயம் செய்து தான் வருகிறார்கள். அவர்கள் தங்களை சிறு குரு விவசாயியாக பதிவு செய்வதில்லை. (தேவையும் இல்லை)

இன்னும் சொல்லப்போனால் மாநகரங்களில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள், 9-6 வேலைக்கு மட்டும் போகிற நகர வாசிகள் வேண்டுமானால் தங்களை விவசாயிகள் இல்லை என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் சிறு நகரங்கள், கிராமங்களில் உள்ள எல்லோரும் முழு நேரமோ பகுதி நேரனோ விவசாயத்தை செய்யாதே ஆளே இருக்க மாட்டார்கள்.

குறைந்தபட்சம் 5 கோடி மக்கள் நேரடியாக விவசாயத்தின் வருமானத்தை நம்பி தான் வாழ்கிறார்கள்...

எனவே ஆட்சி செய்யும் தமிழக வெற்றி கழக அரசு விவசாயிகளுக்கான விவசாய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்...

சிறு குறு விவசாயிகளுக்கு விவசாயிக்கு உண்டான மானியங்களை அரசு கடை நிலை ஊழியர்கள் மூலம் தெரிவிக்க வேண்டும்...

சிறு குறு விவசாயிகளுக்கு உண்டான அரசின் மானிய திட்டங்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்...

அடுத்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யும்பொழுது விவசாயத்திற்கான நீதியை மேலும் அதிகரிக்க வேண்டும்...

சட்டசபையில் முனைவர் #சௌமியா #அன்புமணி அவர்களின் குரல் முழுக்க முழுக்க விவசாயிகளுக்கானதாக இருப்பதை வேளாண்குடி மரபினரான விவசாய சொந்தங்கள் நாம் பெருமை கொள்வோம்...

காவல் துறை அதிகாரி மனைவியை குத்திக் கொன்ற கணவன் 😭
14/08/2026

காவல் துறை அதிகாரி மனைவியை குத்திக் கொன்ற கணவன் 😭

13/08/2026

உங்கள் குழந்தைகளுக்கு பள்ளியில்..கல்லூரிகளில் தடுப்பூசிகளோ, மருத்துவ பரிசோதனைகளோ .. *குடற்புழு மத்திரைகள்* போன்ற மருந்து..மாத்திரைகளோ..வேண்டாம் என்றுநீங்கள் விரும்பினால்.....
(பதிவு தபாலில் with acknowledgement card உடன்) பள்ளி தலைமையாசிரியருக்கு கொடுக்க கூடிய(எச்சரிக்கை) அறிவிப்பு கடிதம்..

அனுப்புநர்:
(பெற்றோர் முகவரி)

பெறுநர் :
தலைமையாசிரியர், அல்லது கல்லூரிதாளாளர்

பள்ளி/ கல்லூரி தாளாளருக்கு/ தலைமையாசிரியருக்கு/

என்னுடைய மகள் (பெயர்) உங்கள் பள்ளியில் (வகுப்பு,பிரிவு) படித்து கொண்டிருக்கிறான்..

அவளுக்கு..குடற்புழு மாத்திரைகள்.. புற்றுநோய் தடுப்பூசி உட்பட எந்த வித தடுப்பூசிகளும் மற்றும் பரிசோதனைகளும் வேண்டாமென மறுப்பு தெரிவிக்கும் கடிதம்..

இந்திய அரசமைப்பின் சாசனம் Article 5 (A)ன் படி இந்திய குடிமகனான எனக்கு Art 19,21 ன் படிக்கு தடுப்பூசியை மறுக்கும் சுதந்திரம் இருக்கிறது..

மேலும், Article 21 அறிவுறுத்துகிற வாழும் உரிமையின் படி..

பக்கவிளைவுகள் வரலாம் என சந்தேகிக்க கூடிய ஆங்கில மருந்துகளையோ அதன் தடுப்பூசிகளையோ என்னுடைய ஒப்புதல் இல்லாமல் என்னுடைய மகன்/மகளுக்கு செலுத்த உங்களுக்கு உரிமையில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தி..

மீறி.. இந்திய அரசமைப்பு சட்ட விரோதமாக செயல்பட்டீர்களென்றால் நான் மேற்கொண்டு உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்..
என்று..

எழுத்து பூர்வமாக இந்த தடுப்பூசி மற்றும் பரிசோதனை மறுப்பு கடிதத்தை உங்களிடம் சட்ட பூர்வ கடிதமாக தருகிறேன்.

நாள் :

பெற்றோர்
(இருவரின்)

கையொப்பம்

அவன் சாலைக்கே அனுப்ப மாட்டான்... நாம் சட்டமன்றத்துக்கு அனுப்புவோம்...அங்கே, அமைச்சர் தனக்குத் தமிழ் தெரியாததற்கு மத முட்...
13/08/2026

அவன் சாலைக்கே அனுப்ப மாட்டான்... நாம் சட்டமன்றத்துக்கு அனுப்புவோம்...

அங்கே, அமைச்சர் தனக்குத் தமிழ் தெரியாததற்கு மத முட்டு கொடுப்பார்...

ஒரு மலையாளி தமிழை மலையாளத்தில் எழுதிப் படிப்பார்...

மனமார்ந்த நன்றியை ஒருவர் மன்மத நன்றி என்பார்...

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில், தேர்தல் வைத்து தமிழ் அழிக்கிறான் மானமற்ற முட்டாள் தமிழன்.

காரணம் தமிழர் அல்லாத...

*❇️செய்தி கதம்பம்*❇️
*நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்து*
*தி.மு.க சார்பில் கனிமொழி தேநீர் விருந்தில் பங்கேற்பு*

இண்டியா கூட்டணி புறக்கணித்த நிலையில் திமுக பங்கேற்பு

நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்பு

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நிறைவடைந்த நிலையில் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு தலைவர்களுக்கு தேநீர் விருந்து

காங்கிரஸிடம் இருந்து மட்டுமே விலகி இருக்கிறோம்; இண்டி கூட்டணியில்தான் இருக்கிறோம் எனக் கூறி வருகிறது தி.மு.க

சபாநாயகர் ஓம் பிர்லா வழங்கிய தேநீர் விருந்தை ஒட்டுமொத்த இண்டி கூட்டணியும் புறக்கணித்த நிலையில், கனிமொழி பங்கேற்பு

Address

Tirunelveli
627007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nalini Shantha Kumari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category