01/08/2026
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை:-
பணி நிறைவு பாராட்டு விழா:-
37ஆண்டுகள் 05 மாதங்கள் 23 நாட்கள் என்ற நீண்ட கால அரசுப் பணியை சிறப்பாக நிறைவு செய்து இன்று 31.07.2026 பணியிலிருந்து ஓய்வு பெறும் திரு. ஓம்பிரகாஷ் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு திருப்பத்தூர் மாவட்டம் அவர்கள் தமது பணிக்காலத்தில் நேர்மை, ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த நிர்வாகத் திறனுடன் காவல் துறைக்கு ஆற்றியுள்ள மதிப்புமிக்க சேவைகளை மனமார பாராட்டுகிறோம். மேலும், அவர்களின் ஓய்வுக்கால வாழ்க்கை ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்ததாக அமைய அன்புடன் வாழ்த்துகிறோம்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் பொன்னாடை அணிவித்து பணி நிறைவு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.