21/04/2026
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர், மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர். பெருமாள் தேவர் அவர்களின் 28-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.
தலைவர் ஏ.ஆர். பெருமாள் தேவர் அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் நேதாஜி சுப்பாஷ் சந்திரபோஸ் மற்றும் தேவர் அவர்கள் வழியில் திருத்தொண்டராக செயல்பட்டவர்.
தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுடன் நேரடியாக அரசியல் பயின்று, அவரோடு பணியாற்றிய பெருமை உடையவர்.
பசும்பொன் தேவர் அவர்களின் மறைவிற்குப் பின்னர், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பேரியக்கத்தை திண்மையான பாதையில் வழிநடத்திய தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
பல முன்னணி தலைவர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் உருவாக்கியவர். அனைவராலும் "கிங் மேக்கர்" என்றும் அன்புடன் அழைக்கப்பட்டவர் தலைவர் ஏ.ஆர்.பெருமாள் தேவர் அவர்கள்.
மரைந்து 28 ஆண்டுகள் ஆன இந்நாளில், அவரது தியாகத்தையும், அயராத மக்கள் சேவையையும் நினைவுகூர்ந்து,
அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் தலைவர் ஏ.ஆர். பெருமாள் தேவர் அவர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.