DYFI Villupuram

DYFI Villupuram அனைவருக்கும் கல்வி
அனைவருக்கும் வேலை

29/07/2026

NEET தேர்வை எதிர்த்துப் போராடினால் TVK அரசின் காவல்துறை தடுப்பது ஏன் ?

ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினால் ஜனநாயகன் பட்டத்தை தனக்குத்தானே சூட்டிக்கொண்ட தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களால் ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை...

தோழர்.செல்வராஜ்
DYFI மாநில தலைவர்

்து_செய்

29/07/2026

கஞ்சா கடத்தல்காரர்களை விட்டுவிட்டு, கல்விக் கனவுகளுக்காக போராடும் மாணவர்கள், இளைஞர்களை தாக்குவதுதான் விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் வேலையா?

சே.அறிவழகன்
DYFI மாவட்ட செயலாளர்,
விழுப்புரம் மாவட்டம்

்து_செய்

விழுப்புரத்தில் காவல்துறை அராஜகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - நூற்றுக்கணக்கானோர் பங்கேற்புவிழுப்புரம், 29.07...
29/07/2026

விழுப்புரத்தில் காவல்துறை அராஜகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் - நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

விழுப்புரம், 29.07.2026:

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கடந்த 24.07.2026 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்தில் கலந்து கொண்ட வாலிபர்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் மீது விழுப்புரம் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தினர்.

மக்களுக்காக போராடிய தலைவர்களை சாதியை சொல்லி திட்டி தாக்கிய விழுப்புரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் பிரகாஷ், உதவி ஆய்வாளர் வினோத் ராஜ் ஆகியோர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

CITU, AIKS, AIAWU, AIDWA, DYFI, SFIஆகிய வெகுஜன அமைப்புகளின் சார்பில் விழுப்புரம் நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம் அருகில் இன்று 29.07.2026 புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் S.அறிவழகன், B.A., LLB.,அவர்கள் தலைமை தாங்கினார்.

ஆர்பாட்டத்தில் தோழர் P.கருப்பையன் CITU மாநில துணைத்தலைவர், தோழர் செல்வராஜ் - DYFI மாநிலத் தலைவர், தோழர் N.சுப்பிரமணியன் - CPI(M) மாவட்ட செயலாளர், தோழர் S.கீதா - CPI(M) மாநிலக்குழு உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

"காவல்துறையா? காட்டுமிராண்டித்துறையா?" என்ற முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வாலிபர்கள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் திரண்டு கலந்து கொண்டனர்.

காவல்துறையின் அத்துமீறலை வன்மையாக கண்டித்த பேச்சாளர்கள், ஜனநாயக ரீதியாக போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் காவல் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும், மாநில காவல் துறையையும் வலியுறுத்தினர்.

ஆர்பாட்டத்தில் CITU மாவட்ட செயலாளர் R.மூர்த்தி, AIKS மாவட்ட செயலாளர் R.T.முருகன், AIAWU மாவட்ட செயலாளர் K.சுந்தரமூர்த்தி, AIDWA மாவட்ட செயலாளர் B.இலக்கியபாரதி, DYFI மாவட்ட தலைவர் S.பிரகாஷ், SFI மாவட்ட செயலாளர் M.ஜீவானந்தம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசே...காவல் துறையினரா ?.. காட்டுமிராண்டிகளா ?..விழுப்புரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி,ஜனநாயக முற...
28/07/2026

தமிழ்நாடு அரசே...

காவல் துறையினரா ?.. காட்டுமிராண்டிகளா ?..

விழுப்புரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி,
ஜனநாயக முறையில் போராடியவர்களை
சாதியைச் சொல்லி தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் பிரகாஷ், உதவி ஆய்வாளர் வினோத்ராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி

கண்டன ஆர்ப்பாட்டம்

📅 நாள்: 29-07-2026 (புதன்கிழமை)
🕙 நேரம்: காலை 10.00 மணி
📍 இடம்: விழுப்புரம் நகராட்சித் திடல், புதிய பேருந்து நிலையம் அருகில்.

DYFI - SFI - AIDWA - CITU - AIKS - AIAWU
Villupuram

Chief Minister of Tamil Nadu

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் முதற்கட்ட வெற்றிஇன்று தர்மேந்திர பிரதான்நாளை மோடி?போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் ...
25/07/2026

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் முதற்கட்ட வெற்றி

இன்று தர்மேந்திர பிரதான்

நாளை மோடி?

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் இளைஞர்களுக்கு வாழ்த்துகள்...

SFI - DYFI Villupuram

விழுப்புரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஜனநாயக முறையில் காத்திருப்பு போராட்டத்திற்காக கூடியிருந்த தோழர்களை காவல்துறை சட்ட...
25/07/2026

விழுப்புரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஜனநாயக முறையில் காத்திருப்பு போராட்டத்திற்காக கூடியிருந்த தோழர்களை காவல்துறை சட்டவிரோதமாக கைது செய்ததையும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தி துன்புறுத்தியதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அமைதியான, ஜனநாயக வழியில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அமைதியான போராட்டம் நடத்துவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையை மீறும் வகையில் காவல்துறை செயல்படக் கூடாது.

தமிழ்நாடு அரசு விழுப்புரம் காவல்துறை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SFI - DYFI Villupuram

Chief Minister of Tamil Nadu

25/07/2026

விழுப்புரத்தில் போராட்டத்திற்காக கூடியிருந்த தோழர்களை காவல்துறை சட்டவிரோதமாக கைது செய்ததையும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தி துன்புறுத்தியதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அமைதியான, ஜனநாயக வழியில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அமைதியான போராட்டம் நடத்துவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையை மீறும் வகையில் காவல்துறை செயல்படக் கூடாது.
Chief Minister of Tamil Nadu

24/07/2026

தவெக அரசே போராட்ட்டத்தை ஒடுக்காதே !

23/07/2026

மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக்கு கோரி
இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக விழுப்புரம் நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விழுப்புரம் மாவட்ட தலைவர் தோழர் எஸ் பிரகாஷ் தலைமை தாங்கினார். DYFI மாநில தலைவர் தோழர் டி.செல்வராஜ் கண்டன உரையாற்றினார். DYFI மாவட்ட செயலாளர்க எஸ் அறிவழகன் மற்றும் இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் மு. ஜீவானந்தம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் வே. அஜய் கண்டன உரையாற்றினார்.

22/07/2026

மாணவர்களின் குரலை அடக்க முடியாது!

டெல்லியில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், அவர்களை கைது செய்து ஜனநாயக உரிமையை ஒடுக்க முயன்ற செயலையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள்; அடக்குமுறையால் அல்ல.

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், கல்வி உரிமையை நிலைநாட்டவும், ஜனநாயக குரலைக் காக்கவும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.

நீட் ஒழியட்டும்!
கல்வி உரிமை வெல்லட்டும்!
மாணவர் ஒற்றுமை ஓங்கட்டும்!

மத்திய கல்வி அமைச்சர்
தர்மேந்திர பிரதான்
பதவி விலக கோரி

கண்டன
ஆர்ப்பாட்டம்

நாள்: 23.07.2026 (வியாழக்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி
இடம்: நகராட்சி திடல், விழுப்புரம்

Address

Villupuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Villupuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share