Nachchaduwa Jamiyyathul Ulama

Nachchaduwa Jamiyyathul Ulama Social Service

30/10/2025
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்.மகிழ்ச்சியான ஆசிரியர் தின இதயம் கனிந்த நல் ...
06/10/2025

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்.

மகிழ்ச்சியான ஆசிரியர் தின இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்! 🤝🤝

அன்பு ஆசிரியர்களே! 📚🖊️

"நான் ஒரு ஆசானாக அனுப்பப்பட்டுள்ளேன்
என்ற நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது மகுட வாசகத்துக்கு அமைய எங்களை ஊக்குவித்து, வழிநடத்தி, ஞானத்தால் எங்கள் எதிர்காலத்தை உருவாக்குபவர்களே! 💐
உங்கள் சொற்கள் புத்தகங்களில் உள்ள பாடங்களை விட ஆழமான வாழ்க்கை நெறிகளை கற்பிக்கின்றன; 💐
உங்கள் அக்கறை எங்களில் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. 💐
எங்கள் வாழ்க்கையில் ஒளியாக இருப்பதற்காக நன்றிகள்! 💐

நீங்கள் எப்போதும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றி ஆகியவற்றால் செறிந்து செல்வம் பெற பிரார்த்திக்கின்றோம்! 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

எமது நாச்சியா தீவு மண்ணில் கல்வி பயின்று பல பாகங்களிலும் சேவை புரியும் ஆசிரியர்களுக்கும். 💐
நாச்சியா தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுக்கொடுத்து வேறு பாடசாலைகளில் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும். 💐
எமது ஊரில் ஓய்வு பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்கும். 💐
தற்பொழுது ஆசிரியர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும். 💐
நாச்சியா தீவு உலமா சபையினால் நன்றிகளையும் பாராட்டுக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

💕ஏக அல்லாஹ் உங்களது வாழ்க்கையை செழிப்பாக்குவானாக..!💕

💕உங்களது எதிர்காலத்தை சிறந்த எதிர்காலமாகவும் கல்வியில் நல்ல அபிவிருத்தியையும் அவனது மேலான பொருத்தத்தையும் அருள்வானாக...!💕

🌹குறிப்பாக உலகில் ஆசிரியர்களாக வாழ்ந்து இன்று மண்ணறையில் இருக்கும் ஆசிரியர்களையும் எங்களால் மறந்துவிட முடியாது.🌹

அல்லாஹ் அவர்களது பாவங்களை மன்னித்து நற்கிரிகைகளையும் ஏற்று அவர்களது மண்ணறைகளை சுவனப் பொன்னறைகளாக ஆக்குவானாக! ஆமீன்..

🌹 எழுத்துருவில் – நாச்சியா தீவு உலமா சபையின் ஊடகப்பிரிவு. 🌹

G-mail: [email protected]

Address

New Town, Nachchaduwa
Anuradhapura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nachchaduwa Jamiyyathul Ulama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category