இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - பழுகாமம் வட்டாரம்

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - பழுகாமம் வட்டாரம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - பழுகாமம் வட்டாரம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - பழுகாமம் வட்டாரம்

கொடி சுமந்த போராளிதமிழரசுஉன் வாய்ப்பாடல்ல;உன் மூச்சோடு கலந்தஉயிர்.தேர்தல் பிரச்சாரங்களில்வெயிலையும் மழையையும்எண்ணாதே,கொட...
20/01/2026

கொடி சுமந்த போராளி

தமிழரசு
உன் வாய்ப்பாடல்ல;
உன் மூச்சோடு கலந்த
உயிர்.

தேர்தல் பிரச்சாரங்களில்
வெயிலையும் மழையையும்
எண்ணாதே,
கொடியை முன்னேற்றி
கனவுகளை பின்னேற்றாதவன் நீ.

பயமின்றி பேசினாய்,
பணமின்றியும் போராடினாய்,
பதவி தேடாமல்
மக்களின் உரிமை தேடினாய்.

அடக்குமுறையின் முன்
வளைந்தது இல்லை உன் நெஞ்சம்;
கொடியின் நிழலில்
குனிந்தது இல்லை உன் தலை.

வாக்குச் சத்தங்களில்
உன் குரல் கலந்து,
வீடு வீடாக
நம்பிக்கையை விதைத்தாய்.

பதவி தேடவில்லை,
புகழ் வேண்டவில்லை—
எமது கட்சி
வாழ வேண்டுமென்றே
வாழ்ந்தாய்.
இன்று
உன் குரல் மௌனமாயினும்,
உன் காலடிச் சுவடுகள்
எங்கள் பாதையாகி விட்டன.

உறங்கிப் போகாதே தோழா…
உன் கனவுகள் இன்னும் விழித்திருக்கின்றன.

23/10/2025
23/10/2025
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பழுகாம வட்டாரக் கிளையின் கோரிக்கையின் பிரகாரம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கௌ...
17/10/2025

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பழுகாம வட்டாரக் கிளையின் கோரிக்கையின் பிரகாரம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ வி.மதிமேனன் அவர்களினால் பழுகாமத்தின் சில வீதிகளிற்கு வீதி மின்விளக்குப் பொருத்தப்பட்டது. தவிசாளர் மற்றும் ஊழியர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உள்ளூராட்சி சபை தேர்தலின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மெய்பிக்கும் பொருட்டு திரு.நா.இந்திரநாதன் மற்றும் தி...
02/07/2025

உள்ளூராட்சி சபை தேர்தலின் போது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மெய்பிக்கும் பொருட்டு திரு.நா.இந்திரநாதன் மற்றும் திரு.வீ.அரசரெத்தினம் ஆகியோரினால் வீதி மின்விளக்குகள் சொந்த நிதியில் கொள்வனவு செய்து போரதீவுப்பற்று பிரதேச சபை கௌரவ தவிசாளர் வி.மதிமேனனின் வழிகாட்டலில் பிரதேச சபை ஊழியர்களினால் இன்றைய தினம் அவை பழுகாமத்தில் பொருத்தப்பட்டன.
நன்றிகள் தவிசாளர்.

Shanakiyan Rajaputhiran Rasamanickam Mathimenan Vimalanathan

02/07/2025
தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டு நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் பழுகாமம் வட்டாரத்தில் இலங்கைத்...
07/05/2025

தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டு நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் பழுகாமம் வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு வாக்களித்த அனைத்து பழுகாம வாழ் உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்.

பழுகாமம் வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு 1190 வாக்குகளை அளித்து தமிழ் தேசியத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள்.

அதேபோன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு 1206 வாக்குகளையும், JVPக்கு 470 வாக்குகளையும், ACTC கட்சிக்கு 3 வாக்குகளையும் பழுகாம மக்கள் வழங்கியுள்ளனர்.

நன்றி

03/05/2025

Address

Palugamam, Batticaloa
Batticaloa
30234

Website

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - பழுகாமம் வட்டாரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share