கரிகாலன் விளையாட்டுக் கழகம் - புச்சாக்கேணி,கதிரவெளி.

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • கரிகாலன் விளையாட்டுக் கழகம் - புச்சாக்கேணி,கதிரவெளி.

கரிகாலன் விளையாட்டுக் கழகம் - புச்சாக்கேணி,கதிரவெளி. ~விழ விழ எழுவோம்~

 # # # 🙏 அறநெறிக் கல்விப் பணிக்கு கரம் கொடுத்த நல்லுள்ளங்களுக்கு நன்றி!எமது கோரிக்கைக்கு அமைவாக ராமகிருஷ்ண மிஷன் நிறுவனத...
09/08/2026

# # # 🙏 அறநெறிக் கல்விப் பணிக்கு கரம் கொடுத்த நல்லுள்ளங்களுக்கு நன்றி!

எமது கோரிக்கைக்கு அமைவாக ராமகிருஷ்ண மிஷன் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அப்பியாசப் புத்தகங்கள் இன்றைய தினம் மாணவர்களுக்கு அன்புடன் கையளிக்கப்பட்டன. 📚✏️

இம்மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு துணைநின்று, இந்த உதவியை ஏற்பாடு செய்து தந்த முன்னாள் கிராம சேவகர், ஓய்வுபெற்ற திரு. யோகசாரன் அவர்களுக்கு** எமது கரிகாலன் விளையாட்டுகளத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🌷

அதேவேளை, அறநெறி ஆசிரியர்களுக்கான 7ஆம் மாதத்திற்கான கொடுப்பனவை வழங்கி, அறநெறிக் கல்விப் பணிக்கு தனது பங்களிப்பை வழங்கிய திரு. சொக்கலிங்கம் றதன் அவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏

ஒரு சிறிய உதவி...
ஒரு மாணவனின் கல்விப் பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். ❤️

மாணவர்களின் கல்வி வளர்ச்சியும், சமூகத்தின் முன்னேற்றமும் எமது பயணத்தின் முக்கிய நோக்கம்.🌱

🤝 கரம் கொடுப்போம்... கல்வியை வளர்ப்போம்... எதிர்காலத்தை உருவாக்குவோம்!

—கரிகாலன் விளையாட்டுகளம் ❤️

#கரிகாலன்_விளையாட்டுகளம்
#கல்விப்பணி
#மாணவர்_நலன்
#அறநெறிக்கல்வி
#சமூகப்பணி
#கல்வியே_எதிர்காலம்
#மாணவர்களுக்காக
#நன்றியும்_பாராட்டும்
#சமூக_ஒற்றுமை

🎉 வாழ்த்துக்கள்! 🥋🏅கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான டைகொண்டோ(Taekwondo) போட்டியில் சிறப்பாகப் பங்கேற்று 3ஆம் இடத்...
18/07/2026

🎉 வாழ்த்துக்கள்! 🥋🏅

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான டைகொண்டோ(Taekwondo) போட்டியில் சிறப்பாகப் பங்கேற்று 3ஆம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள போ. தனுஸ்காந் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த சாதனை அவரது பாடசாலைக்கும், கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாகும். அவருடைய விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை கரிகாலன் விளையாட்டுக் கழகம் சார்பில் மனதாரப் பாராட்டுகின்றோம்.

தேசிய மட்டப் போட்டியிலும் சிறப்பாகப் பங்கேற்று மேலும் பல வெற்றிகளைப் பெற்று உயரங்கள் எட்ட வாழ்த்துகின்றோம்.

#கரிகாலன்விளையாட்டுகளம் 💙🥋
#புச்சாக்கேணி #கதிரவெளி

விளையாட்டை மட்டும் மையமாகக் கொண்டு செயற்படாமல்,பிற கழகங்களிலிருந்து தனித்துவமாக, விளையாட்டுடன் சேர்த்து நல்லொழுக்கம், ஒழ...
12/07/2026

விளையாட்டை மட்டும் மையமாகக் கொண்டு செயற்படாமல்,பிற கழகங்களிலிருந்து தனித்துவமாக, விளையாட்டுடன் சேர்த்து நல்லொழுக்கம், ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களை வளர்க்கும் நோக்கில் "அறநெறி வகுப்புகளை" தொடர்ந்து நடத்தி வருகிறோம். அறிவும், ஒழுக்கமும், சமூகப் பொறுப்பும் கொண்ட சிறந்த தலைமுறையை உருவாக்கும் எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த அறநெறி வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன .

#கரிகாலன்விளையாட்டுக்கழகம் #புச்சாக்கேணி #ஸ்ரீசெந்தூர்முருகன் #அறநெறிபாடசாலை

🕉️ அறமும் அறிவும் இணையும் பாதையில் மீண்டும் ஒரு இனிய தொடக்கம்!புச்சாக்கேணி கரிகாலன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஸ...
21/06/2026

🕉️ அறமும் அறிவும் இணையும் பாதையில் மீண்டும் ஒரு இனிய தொடக்கம்!

புச்சாக்கேணி கரிகாலன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலய நிர்வாக சபையுடன் இணைந்து நடைபெற்ற அறநெறிப் பாடசாலை மீளாரம்ப நிகழ்வு இன்றைய தினம் (21/06/2026) வெற்றிகரமாக நிறைவுற்றது.

எமது சமய, கலாசார மற்றும் ஒழுக்க விழுமியங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் இந்தப் புனிதப் பயணத்தில் பங்கேற்று ஆதரவு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

"அறம் வளர, சமூகம் வளரும்."

#அறநெறிபாடசாலை #மீளாரம்பம் #ஸ்ரீசெந்தூர்முருகன் #கரிகாலன்விளையாட்டுக்கழகம் #புச்சாக்கேணி

2025/05/18 இன்றைய தினம் எமது கரிகாலன் விளையாட்டுக் கழகத்தினால் புச்சாக்கேணி ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தில்   சிரமதானப்பண...
18/05/2026

2025/05/18 இன்றைய தினம் எமது கரிகாலன் விளையாட்டுக் கழகத்தினால் புச்சாக்கேணி ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தில் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.

~தோல்வி காண்பதும் புதிதல்ல…தோல்வி தாண்டி வெல்வதும் எழிதல்ல~நேற்றய தினம் பால்ச்சேனை விஷ்னு விளையாட்டு கழகத்தினால் நடத்தப்...
18/05/2026

~தோல்வி காண்பதும் புதிதல்ல…
தோல்வி தாண்டி வெல்வதும் எழிதல்ல~

நேற்றய தினம் பால்ச்சேனை விஷ்னு விளையாட்டு கழகத்தினால் நடத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் தொடராக கலா,அகரமுதல்வன்,விடியல் அணிகளுடன் போட்டியிட்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறி சதீஸ் கழக அணியுடன் போட்டியிட்டு கரிகாலன் அணி 1ம் இடத்தை பெற்று, அணியின் முதலாவது வெற்றிக் கிண்ணத்தை அடைந்துள்ளது.

கரிகாலன் அணி வீரர்களுக்கும், நேர்த்தியான முறையில் எதிர்த்து போட்டியிட்ட அணி வீரர்களுக்கும், நேர்த்தியான முறையில் விளையாட்டு நிகழ்வை நடத்திய விளையாட்டுக் கழகத்திற்கும்,எல்லாம் வல்ல இறைவனுக்கும் கரிகாலன் விளையாட்டுக்கழகம் சார்பாக நன்றிகள்.

எமது கழகத்தின் உதைபந்தாட்ட வீரர் தனுஸ்காந் அவர்களுக்கு 19வது அகவை தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் எமது கழகம் சார்பில்...
02/05/2026

எமது கழகத்தின் உதைபந்தாட்ட வீரர் தனுஸ்காந் அவர்களுக்கு 19வது அகவை தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் எமது கழகம் சார்பில் பெருமிதம் கொள்கிறோம்.🎂🎉🎈

எமது கழகத்தின் உதைபந்தாட்ட வீரர் சசிவேந்தன் அவர்களுக்கு 25வது அகவை தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் எமது கழகம் சார்பில...
24/02/2026

எமது கழகத்தின் உதைபந்தாட்ட வீரர் சசிவேந்தன் அவர்களுக்கு 25வது அகவை தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் எமது கழகம் சார்பில் பெருமிதம் கொள்கிறோம்.🎂🎉🎈

எமது கழகத்தின் செயளாலரும் சிறந்த உதைபந்தாட்ட வீரருமான குமாரசூரியம் ஹிந்துராஜ் அவர்களுக்கு 28வது அகவை தின நல்வாழ்த்துக்கள...
09/02/2026

எமது கழகத்தின் செயளாலரும் சிறந்த உதைபந்தாட்ட வீரருமான குமாரசூரியம் ஹிந்துராஜ் அவர்களுக்கு 28வது அகவை தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் எமது கழகம் சார்பில் பெருமிதம் கொள்கிறோம்.🎂🎉🎈

எமது கழகத்தின் உதைபந்தாட்ட வீரர் நேமிநாதன் சனுஜன் அவர்களுக்கு 21வது அகவை தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் எமது கழகம் ச...
31/01/2026

எமது கழகத்தின் உதைபந்தாட்ட வீரர் நேமிநாதன் சனுஜன் அவர்களுக்கு 21வது அகவை தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் எமது கழகம் சார்பில் பெருமிதம் கொள்கிறோம்.🎂🎉🎈

Address

Puchchakeni, Kathiravely
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when கரிகாலன் விளையாட்டுக் கழகம் - புச்சாக்கேணி,கதிரவெளி. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category