02/09/2026
වනඅලි, දුම්රියෙහි ගැටීම වැළැක්වීම සඳහා තාක්ෂණික විසඳුම් ලබා දීමේ ව්යාපෘතියට අදාළ අවබෝධතා ගිවිසුමට අත්සන් තැබේ.
වනඅලි දුම්රියෙහි ගැටීම වැළැක්වීම සඳහා තාක්ෂණික විසඳුම් ලබා දීමේ ව්යාපෘතියට අදාළ අවබෝධතා ගිවිසුමට අත්සන් තැබීම ජනාධිපති ලේකම් ආචාර්ය නන්දික සනත් කුමානායක මහතාගේ ප්රධානත්වයෙන් ජනාධිපති මාධ්ය කේන්ද්රයේදී ඊයේ (01) පස්වරුවේ සිදු විය.
"ක්ලීන් ශ්රී ලංකා"වැඩසටහනේ සම්බන්ධීකරණයෙන්, දුම්රිය දෙපාර්තමේන්තුව, වනජීවී සහ වන සංරක්ෂණ දෙපාර්තමේන්තු සමඟ එක්ව මහජන බැංකුවේ පූර්ණ මූල්ය දායකත්වයෙන් රාජ්ය - පෞද්ගලික හවුල්කාරිත්ව ව්යාපෘතියක් ලෙස මෙම ව්යාපෘතිය ක්රියාත්මක කෙරේ.
3 Beam detection, Passive infrared ( PIR ) සංවේදක, ස්වයංක්රීය උෂ්ණත්ව සංවේදක සහ කිලෝ ග්රෑම් 20ට වැඩි සතුන් දුම්රියේ ගැටීම වැළැක්වීම හඳුනා ගැනීම සහ අනවසර බලපෑම් හඳුනාගන්නා (Temper alarm ) පද්ධතියකින් මෙය සමන්විතය. දුම්රිය මාර්ග දෙපස සවි කරන සංඥා ලාම්පු (රතු/කහ/කොළ) මෙන්ම, දුම්රිය එන්ජින් මැදිරිය තුළ ස්ථාපනය කෙරෙන විශේෂ තිරයක් මගින් අලියා සිටින නිශ්චිත ස්ථානය රියදුරු වෙත කල්තබා සන්නිවේදනය කරනු ලබයි.
පින්නවල අලි අනාථාගාර පරිශ්රයේ අදාළ නිලධාරීන් ඉදිරියේ මෙම පද්ධතියේ ආදර්ශ පරීක්ෂණය සාර්ථකව සිදු කෙරුණු අතර, ඉන් අනතුරුව ඊට අදාළ වාර්තාව සකසා තිබේ.
මෙම ක්රියාවලිය වනඅලි අනතුරු බහුලව සිදුවන ස්ථාන 13කදී නියමු ව්යාපෘතියක් ලෙස ලබන මස සිට ක්රියාත්මක කෙරෙන අතර, ව්යාපෘතියේ ප්රගතිය සජීවීව දැකබලා ගැනීම සඳහා අලුතින්ම නිර්මාණය කළ "slps.lk" වෙබ් අඩවියද දියත් කිරීමට නියමිතය.
අතිරේක දුම්රිය සාමාන්යාධිකාරී පී.ඩී.එස්. බී. චන්ද්රසේන, වනජීවි අධ්යක්ෂ ජනරාල් එම්.එස්.එල්.ආර්.පී. මාරසිංහ, වන සංරක්ෂක ජනරාල් එස්.සී. පාලමකුඹුර, මහජන බැංකුවේ සභාපති චන්දන ගුණියන්ගොඩ යන මහත්වරුන් විසින් අදාළ අවබෝධතා ගිවිසුමට අත්සන් තබන ලද අතර, ජනාධිපති අතිරේක ලේකම් (ක්ලීන් ශ්රී ලංකා) ඉංජිනේරු එස්.පී.සී. සුගීෂ්වර මහතා ඇතුළු ක්ලීන් ශ්රී ලංකා ලේකම් කාර්යාලයේ නිලධාරීහුද, දුම්රිය දෙපාර්තමේන්තුව, වනජීවී දෙපාර්තමේන්තුව, වන සංරක්ෂණ දෙපාර්තමේන්තුව සහ මහජන බැංකුව යන ආයතනවල ජ්යෙෂ්ඨ නිලධාරීහු පිරිසක්ද මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.
காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வை வழங்குவதற்கான திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வை வழங்குவதற்கான திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (01) பிற்பகல் நடைபெற்றது.
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பில், புகையிரதத் திணைக்களம், வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து, மக்கள் வங்கியின் முழுமையான நிதியுதவியுடன் அரச - தனியார் கூட்டுப் பங்களிப்புத் திட்டமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
3 Beam detection, Passive infrared ( PIR ), உணரிகள், தானியங்கி வெப்பநிலை உணரிகள் மற்றும் 20 கிலோகிராமிற்கு மேற்பட்ட விலங்குகள் புகையிரதங்களில் மோதுவதை அடையாளம் காணல் மற்றும் அபாய எச்சரிக்கை (Temper alarm) கட்டமைப்பை இது கொண்டுள்ளது. புகையிரதப் பாதையின் இருபுறமும் பொருத்தப்படும் சமிக்ஞை விளக்குகள் (சிவப்பு/மஞ்சள்/பச்சை) மற்றும் புகையிரத இயந்திரப் பெட்டிக்குள் நிறுவப்படும் விசேட திரை மூலம் யானை இருக்கும் துல்லியமான இடம் சாரதிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
பின்னவல யானைகள் சரணாலய வளாகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன்னிலையில் இந்த கட்டமைப்பின் மாதிரிச் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து அதற்கான அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயல்முறை, காட்டு யானை விபத்துகள் அதிகம் நடைபெறும் 13 இடங்களில் ஒரு முன்னோடித் திட்டமாக எதிர்வரும் மாதம் முதல் செயற்படுத்தப்படவுள்ளதுடன், அத்திட்டத்தின் முன்னேற்றத்தை நேரடியாகக் கண்காணிப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட "slps.lk" இணையத்தளமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலதிக புகையிரதப் பொது முகாமையாளர் பீ.டி.எஸ்.பீ. சந்திரசேன, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எல்.ஆர்.பீ. மாரசிங்க, வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் எஸ்.சீ. பாலமகும்புர, மக்கள் வங்கியின் தலைவர் சந்தன குணியங்கொட ஆகியோரினால் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டதுடன், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (Clean Sri Lanka) பொறியியலாளர் எஸ்.பீ.சீ. சுகீஷ்வர உட்பட Clean Sri Lanka செயலகத்தின் அதிகாரிகள், புகையிரதத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மக்கள் வங்கி ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.