10/08/2025
சுஹதாக்கள் தின நிகழ்வுகளுக்கு கடைகளை மூடி ஒத்துழைப்பு வழங்குதல் தொடர்பான அறிவித்தல் ....................................
கடந்த 06.08.2025 ம் திகதி 35வது சுஹதாக்கள் தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஏறாவூர் நகரசபை கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம் அவர்களின் தலைமையில் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் ஏறாவூர் நகரசபை கௌரவ பிரதி தவிசாளர், நகரசபை கௌரவ உறுப்பினர்கள், நகர சபையின் செயலாளர் , ஏறாவூர் வர்த்தக சங்கம், ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்யத்துல் உலமா ஏறாவூர் கிளை, பொதுச்சந்தை மரக்கறி வியாபாரிகள் சங்கம், கால்நடை சங்கம், பொதுச்சந்தை மீன் வியாபாரிகள் சங்கம், இறைச்சிக்கடை வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் பங்கு பற்றியிருந்தனர்..
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம்
12.08.2025 ம் திகதி செவ்வாய் கிழமை சுஹதாக்கள் தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் முகமாக அன்றைய தினம் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி ஒத்துழைப்பு வழங்குதல்.
ஒவ்வெரு கடை உரிமையாளர்களும் தங்களின் கடைக்கு முன்பாக வெள்ளைக் கொடியை நடுதல்.
மேற்படி நிகழ்வுகளோடு அன்றைய தின கத்முல் குர்ஆன் உட்பட அனைத்து சுஹதாக்கள் தின நிகழ்வுகளிலும் முழுமையாக பங்குகொள்ளுமாறும் அன்புடன் வேண்டுகின்றோம்.
செயலாளர்,
ஏறாவூர் வர்த்தகர் சங்கம்.