26/03/2025
முக்கிய செய்தி- இலவச இதயசத்திரசிகிச்சை!
மலையக வாழ் மக்களுக்கு ஓர் நற்செய்தி!
உங்கள் பிள்ளை அல்லது 45 வயதுக்குட்பட்ட எவரேனும் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை செய்யவேண்டியவராக இருப்பின், மேலும் நீங்கள் வறிய நிலையில் இருப்பின், இலவசமாக சத்திரசிகிச்சையை மேற்கொள்ள வாய்ப்பளிக்கின்றோம்.
உங்கள் மருத்துவ குறிப்புகளுடன் என்னைச் சந்திக்கவும்.
வெள்ளிக்கிழமை, மார்ச் 21 | காலை 10 மணி முதல் 4 மணி வரை - ஹாவாஎலிய
ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் மண்டபம், நுவரெலியா
சனிக்கிழமை, மார்ச் 22 | காலை 10 மணி முதல் 4 மணி வரை - சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் - கொட்டகலை
ஞாயிறு, மார்ச் 23 | காலை 10 மணி முதல் 4 மணி வரை - பொது வைத்தியசாலை, டிக்கோயா
தொடர்புகளுக்கு - 0760541771
FACEBOOK - Singer Senthil
இது முற்றிலும் இலவசமான சேவை, உங்களிடம் எவ்வித பணமோ, பொருளோ பெறப்படமாட்டாது. உங்கள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதிவாய்ந்த தேவையுள்ள இருதயநோயாளிகளுக்கு இலவச சத்திரசிகிச்சை வழங்கப்படும்.
இதுவரை இலங்கையில் இதுபோல்
130இற்கு மேற்பட்ட இருதய சத்திரசிகிச்சைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
குறிப்பு:- இவ்விண்ணப்பமும் சேவையும் மனிமாபிமான சேவை அடிப்படையில் எவரினதும் அல்லது எந்தவித வைத்தியசாலையினதும் சேவையையும் பங்களிப்பையும் உதாசீனம் செய்யாது, அவசர தேவை, முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் இலவச சேவையாகும்.
நன்றி
- செந்தில் குமரன்