Irakkamam pradeshiya sabha

Irakkamam pradeshiya sabha Welcome to Irakkamam Pradeshiya Sabha

 #பொது_மக்களின்_முறைப்பாட்டை_அடுத்து  #கௌரவ_தவிசாளர்_எம்_எல்முஸ்மி_திடீர்_கள_விஜயம்2026.04.03இறக்காமம் பிரதேச எல்லைக்குள...
02/04/2026

#பொது_மக்களின்_முறைப்பாட்டை_அடுத்து
#கௌரவ_தவிசாளர்_எம்_எல்முஸ்மி_திடீர்_கள_விஜயம்

2026.04.03

இறக்காமம் பிரதேச எல்லைக்குள் இடம் பெறுகின்ற மண் அகழ்வின் போது பொது மக்கள் மற்றும் மண் அகழ்வோர் இங்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக தவவிசாளருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து கௌரவ தவிசாளர் 2026.04.01 அன்று திடீர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் .

இதன் போது மண் அகழ்வில் பொது மக்கள் மற்றும் மண் அகழ்வோர் தெரிவித்த முறைப்பாடுகளை ஆராய்ந்ததைத் தொடர்ந்து. இறக்காமம் பிரதேச சபையானது வருமானம் குறைந்த சபைகளில் ஒன்றாக காணப்படுவதனால் இவ் மண் அகழ்வினால் சபைக்கு வருமானம் ஈட்டக்கூடிய சாத்திய வளம் பற்றியும் இவ்விஜயத்தின் போது ஆராயப்பட்டது.

இவ்விஜயத்தில் இறக்காமம் ஏழு கிராம சேவகர் சமீர் மற்றும் இறக்காமம் பிரதேச சபையின் பதில் வருமான பரிசோதகர் எம்.எஸ்.எம்.றௌசான் அவர்களும் கலந்து கொண்டனர்

 #கிளீன்_ஸ்ரீ_லங்கா #இறக்காமம்_பிரதேச_சபையில் ்_ஆண்டின்_புதுவருட_கடமைச்  #செயற்பாடுகளை_ஆரம்பிக்கும்_நிகழ்வு  #சிறப்பாக_இ...
01/01/2025

#கிளீன்_ஸ்ரீ_லங்கா
#இறக்காமம்_பிரதேச_சபையில்
்_ஆண்டின்_புதுவருட_கடமைச் #செயற்பாடுகளை_ஆரம்பிக்கும்_நிகழ்வு #சிறப்பாக_இடம்பெற்றது.
__________________________________________________________

#கிளீன்_ஸ்ரீ_லங்கா | " தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக மலர்ந்துள்ள 2025 ஆம் ஆண்டின் அரச கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதல் நாள் நிகழ்வு மற்றும் அரச சேவை சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு இறக்காமம் பிரதேச சபையில் இன்று *2025.01.01 ஆம் திகதி* | காலை 8.30 மணிக்கு பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் அவர்களின் தலைமையில் பிரதேச சபை வளாகத்தில் நடைபெற்றது.

“கிளீன் ஸ்ரீ லங்கா | Clean Sri Lanka” தேசிய நிகழ்ச்சித் திட்ட அங்குரார்ப்பண வைபவத்துடன், 2025 ஆம் வருடத்தின் முதல் நாள் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முகமாக இன்று காலை 08.30 மணிக்கு செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றிவேக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு, தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்த ஏனையவர்களுக்குமாக (02) நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திலிருந்து நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்ட "கிளீன் ஸ்ரீ லங்கா ( Clean Sri Lanka)" தேசிய நிகழ்ச்சித்திட்ட நிகழ்வை காரியாலயத்தில் உள்ள அனைத்து உத்தியோகத்தர்களும் ஒன்றாக பார்வையிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

நன்றி தினகரன்
31/12/2024

நன்றி தினகரன்

 #இறக்காமம்_பிரதேச_சபையினால்  #பெண்கள்_தலைமை_தாங்கும்  #குடும்பங்களுக்கு_உதவி  #பொருட்கள்_வழங்கி_வைப்புஇறக்காமம் பிரதேச ...
31/12/2024

#இறக்காமம்_பிரதேச_சபையினால் #பெண்கள்_தலைமை_தாங்கும் #குடும்பங்களுக்கு_உதவி #பொருட்கள்_வழங்கி_வைப்பு

இறக்காமம் பிரதேச சபைக்கு உட்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச சபையில் பிரதேச சபையின் செயலாளர் எம் ஐ எம் பாயிஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இறக்காமம் பிரதேச அபிவிருத்தி கழுவின் தலைவருமான மஞ்சுளா ரத்தநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார் இதன் போது தாய் சேய் நலன் போனால், மாற்றுத்திறனாளிகளுக்கான நன்கொடை, விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன இந்நிகழ்வில் அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி இறக்காமம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எம் எம் எஸ் ரஸ்கா அஸ்மி இறக்காமம் பிரதேச சபை சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்டி மௌலானா உள்ளிட்ட மற்றும் பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 #அம்பாறை_மாவட்ட_அபிவிருத்தி  #குழு_தலைவரும்_பாராளுமன்ற  #உறுப்பினர்_மன்சுள_ரத்நாயக  #அவர்கள்_இறக்காமம்_பிரதேச  ிறுவன  #...
29/12/2024

#அம்பாறை_மாவட்ட_அபிவிருத்தி #குழு_தலைவரும்_பாராளுமன்ற #உறுப்பினர்_மன்சுள_ரத்நாயக #அவர்கள்_இறக்காமம்_பிரதேச ிறுவன #பிரதானிகளுடனான_சந்திப்பில் #கலந்து_கொண்டார்
_________________________________________

இறக்காமம் பிரதேச சபையில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான தோழர் மன்சுள ரத்நாயக அவர்கள் அரச நிறுவன பிரதானிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டார்

இச்சந்திப்பின் போது கோட்டத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை, விவசாயிகளின் இழப்பீட்டு கொடுப்பனவு, பொது விளையாட்டு மைதானம், பிரதேச வைத்தியசாலையை தரமுயர்த்துதல் மற்றும் வளப்பங்கீடு, வீதி அபிவிருத்தி குறிப்பாக வெள்ளத்தினால் சேதமுற்று காணப்படும் இறக்காமம் நெய்னாகாடு வீதி நிர்மானம் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டன

இறக்காமம்  பிரதேச சபை மற்றும் அஷ்ரப் சனசமூக நிலையம் இனைந்து பிரதேச பெண்களுக்கான பாலின சமத்துவம் என்ற தலைப்பின்கீழ் அண்மை...
29/12/2024

இறக்காமம் பிரதேச சபை மற்றும் அஷ்ரப் சனசமூக நிலையம் இனைந்து பிரதேச பெண்களுக்கான பாலின சமத்துவம் என்ற தலைப்பின்கீழ் அண்மையில் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இம்பெற்றது

1. குடும்ப வன்முறையும் பொருளாதார அபிவிருத்தியும்.

2. பெண் சுகாதாரமும், விழிப்புணர்வும்

என்ற விடயப்பரப்பில் இரண்டு வளவாளர்களினைக் கொண்டு இறக்காமம்.03 ம் பிரிவுக்கான அஷ்ரப் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இறக்காமம் பிரதேச சபையின் ஆதரவில் இன்று (25.12.2024) நடை பெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கானது 50 பேருக்காக மட்டுமே திட்டமிடப்பட்ட போதும் சுமார் 130 மேற்பட்ட பிரதேச பெண்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், CDO, மற்றும் சனசமூக நிலைய உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

LDSP திட்டத்தின் 5 வருட கால உப வேலைத்திட்டங்களை இறக்காமமம் பிரதேச சபை வெற்றிகரமாக நிறைவு செய்ததை கௌரவிக்கு முகமாக ஞாபகச்...
11/12/2024

LDSP திட்டத்தின் 5 வருட கால உப வேலைத்திட்டங்களை இறக்காமமம் பிரதேச சபை வெற்றிகரமாக நிறைவு செய்ததை கௌரவிக்கு முகமாக ஞாபகச்சின்னம் மற்றும் பாராட்டுச் சான்றிதழினை, திரு.பீ.திஸாநாயக்க (Project Directer, National Project Cordinator/LDSP) மற்றும் திரு. என்.மணிவண்ணன் (உள்ளூராட்சி ஆணையாளர் கிழக்கு மாகாணம்) அவர்களினால் இறக்காமம் பிரதேச செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச சபை
இறக்காமமம்

 #ஒழுங்கமைக்கப்பட்ட_கழிவகற்றல்_முகாமைத்துவம்  #ஊடாக_சுத்தமானதும்_பசுமையானதுமான  #பிரதேசத்தைக்_கட்டியெழுப்புதல்          ...
18/11/2024

#ஒழுங்கமைக்கப்பட்ட_கழிவகற்றல்_முகாமைத்துவம் #ஊடாக_சுத்தமானதும்_பசுமையானதுமான #பிரதேசத்தைக்_கட்டியெழுப்புதல்
#பிரதேச_சபை_இறக்காமம்

திண்மக் கழிவுகளை முறையாக அகற்றும் திட்டமொன்றை எமது பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக எமது இறக்காமம் பிரதேச சபையின் அதிகார எல்லையிலுள்ள பிரதேச குடியிருப்பாளர்கள், வியாபார உரிமையாளர்கள், தொழிற்சாலைகள் ஏனைய நிறுவனங்கள் என்பன முறையான திண்மக் கழிவகற்றலை ஒழுங்குபடுத்துவதற்காக கீழ்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

1. தங்களது திண்ம, திரவ கழிவுகளை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வீதிகளிலோ, வீதி ஓரங்களிலோ, நீர் ஓடைகளிலோ, குளத்திலோ, வடிகான்களிலோ. வெற்றுக்காணிகளிலோ, பொது இடங்களிலோ அல்லது அதனை ஒத்த இடங்களிலோ வீசுதல் கூடாது.

2. குடியிருப்பாளர்கள் தங்களின் பயன்பாட்டிலுள்ள கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை முறையான பராமரிப்புக்கு உட்படுத்துவதுடன், அவற்றினை ஏனையோர் தங்களது கழிவுகளை கொட்டும் இடங்களாகப் பயன்படுத்துவது தடை செய்யப்படவேண்டும்.

3. சமையலறை, குளியலறை மற்றும் வியாபாரஸ்தலங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றின் கழிவு நீரை வீதிகளிலோ, வடிகானிலோ இடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

4. திண்மக்கழிவுகளை கீழ்வரும் முறைக்கமைவாக ஒழுங்குபடுத்தி கால அட்டவணைக்கமைவாக தங்கள் பகுதிக்கு பிரதேச சபை வாகனம் வருகை தரும் போது ஒப்படைக்க வேண்டும்.

5. கழிவுப் பைகளில் சாம்பல், மணல், கட்டிடக்கழிவுகள் மற்றும் உடைந்த கண்ணாடிக் கழிவுகள் போன்வற்றினை வைப்பது தடுக்கப்பட்டுள்ளது. இவை எம்மால் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது.

6. எம்மால் வழங்கப்பட்டுள்ள இரண்டு பைகளுக்குள் உள்ளடக்கத்தக்க வகையில் தங்களின் கழிவுகளை வழங்க வேண்டும்.

7. தங்களினால் கொடுக்கப்படும் கழிவுகள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தத்தக்க வகையில் எம்மால் வழங்கப்பட்ட இரண்டு நிறப்பைகளிலும் வெவ்வேறாக பிரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.



குறிப்பு.
• மரக்கிளைகள், தோட்டக் கழிவுகள், தென்னை ஓலை, வாழை மரங்கள் போன்ற பெருங் கழிவுகளை பிரதேச சபைக்கு அறிவித்து குறித்த கட்டணத்தை செலுத்துவதன் மூலம் அகற்றிக் கொள்ளலாம்.
• கழிவுகள் அகற்றும் வாகனம் வரும் நேரத்தில் மாத்திரமே வீதிகளில் கழிவுகளை வைக்க வேண்டும்.
• பிரிக்கப்பட்டு உரிய பைகளில் வழங்கப்படாத கழிவுகள் எம்மால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
• கழிவுகளை குவித்து சுற்றாடலை மாசுபடுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
• கழிவுகளை அகற்றுவதற்கான மாதாந்த கட்டணம் அறவிடப்படும்.
எனவே. “தூய்மையானதும், சுபீட்சமானதும் பசுமையானதுமாக” எமது பிரதேசத்தை மிளிரச் செய்ய தங்களது பூரண ஒத்துழைப்பினை வழங்கியுதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

பிரதேச சபை
இறக்காமம்

இறக்காமம் பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சிப்பட்டறைஇறக்காமம் பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களுக்கான ஒ...
12/11/2024

இறக்காமம் பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சிப்பட்டறை

இறக்காமம் பிரதேச சபையின் சுகாதார ஊழியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை அண்மையில் (2024.11.08) இறக்காமம் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் ஊழியர்களுக்கு அலுவலக நிர்வாக நடைமுறை, கழிவகற்றலை எவ்வாறு முகாமை செய்வது,கழிவகற்றலின் போது எவ்வாறான சுகாதார நடைமுறைகளை பேணுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான பயிற்சிப்பட்டறை இறக்காமம் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எல்.எம்.இர்பான், இறக்காமம் பிரதேச சிரேஷ்ட சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜௌஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சீ.சீ.ஹிதாயத்துள்ளா உள்ளிட்டோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

தகவல் மையம்
பிரதேச சபை இறக்காமம்

 #தேசிய_வாசிப்பு_மாதம்_2023   ______________________ "உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது " தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்ட...
08/11/2024

#தேசிய_வாசிப்பு_மாதம்_2023
______________________
"உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது "

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு எமது இறக்காமம் வரிப்பத்தான்சேனை பொது நூலகங்களினால் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் இடம்பெற்றன.

இறக்காமம் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஜ.எம்.பாயிஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் இறக்காமம் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 5 மாணவர்களுக்கான வாசிப்பு போட்டி நிகழ்கள் இடம் பெற்றன இப்போட்டி நிகழ்ச்சியில் சுமார் 5 பாடசாலைகளை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட18 மாணவர்கள் பங்குபற்றிருந்தனர்

இந்நிகழ்வானது இறக்காமம் வரிப்பத்தான்சேனைபொது நூலகங்களின் நூலகர்களின் நெறிப்படுத்தலில் இந்நிகழ்வு இடம் பெற்றது

 #இறக்காமம்_பிரதேசத்தில்  #உட்கட்டமைப்பு_வசதியை  #மேம்படுத்த_நிதிஉதவி உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக பொதுமக்களுக்கு வினைத்...
24/10/2024

#இறக்காமம்_பிரதேசத்தில்
#உட்கட்டமைப்பு_வசதியை
#மேம்படுத்த_நிதிஉதவி

உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக பொதுமக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவையை வழங்குவதற்கும் இறக்காமம் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவதற்குமாக இறக்காமம் பிரதேச சபைக்கு சுமார் 32 மில்லியன் ரூபா பெறுமதியான மோட்டார் கிரேன்டர் இயந்திரம் நேற்று செவ்வாய்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

இறக்காமம் பிரதேச சபை செயலாளர் எம்.ஜ.எம்.பாயிஸ் அவர்களின் தலைமையில் பிரதேச சபை முன்றலில் வைத்து இந்த இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக உள்ளூராட்சி அபிவிருத்தி உதவி திட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்களான எம். கே. எம். முஹம்மத், எல்.எம்.இர்பான்,எஸ்.சிஹாபூதீன் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பி. மௌலானா நிறுவன முகாமையாளர் ஆர் தர்மசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Address

Pradeshiya Sabha Irakkamam
Irakkamam

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+94762128951

Website

Alerts

Be the first to know and let us send you an email when Irakkamam pradeshiya sabha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Irakkamam pradeshiya sabha:

Share